என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • வில்லியனூரில் பரபரப்பு
    • விடுதலை சிறுத்தை கட்சியினர் வில்லியனூர் போலீஸ் நிலையம் வந்து போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூரில் புதுவை-விழுப்புரம் பைபாஸ் சாலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் 60 அடி உயரத்தில் விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பம் அமைக்கப்பட்டது.

    திருமாவளவனின் 60-வது பிறந்தநாளையொட்டி அமைக் கப்பட்ட கொடி கம்பத்தில் இன்று திருமாவளவன் கொடி ஏற்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி கொடி கம்பம் அனுமதி இல்லாமல் அமைக் கப்பட்டதாக கூறி தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில் வில்லிய னூர் இன்ஸ்பெக்டர் வேலயன், சப்-இன்ஸ்பெக்டர் வேலு ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று ஜேசிபி இயந்திரம் கொண்டு விசிக கொடி கம்பம் அடியோடு அகற்றப்பட்டது.

    இதனை அறிந்த விடுதலை சிறுத்தை கட்சியினர் வில்லியனூர் போலீஸ் நிலையம் வந்து போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில்  மீண்டும் விடுதலை சிறுத்தை கட்சியினர் வில்லியனூர் போலீஸ் நிலையத்துக்கு வந்தனர்.

    தொகுதி நிர்வாகிகள் தமிழ்வளவன், ஆதவன், ரவி, தமிழரசன், அரிமாதமிழன், தனுசு மற்றும் மாநில நிர்வாகிகள் செழியன், இன்பத்தமிழன் பாக்கியலட்சுமி, ஏழுமலை, எழில்மாறன் ஆகியோர் போலீஸ் நிலையத்தை திடீர் முற்றுகையிட்டு போலீசாரை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.

    இன்னும் 2 நாட்களில் கொடி கம்பம் அமைக்க அனுமதி அளிக்காவிட்டால் மாநிலம் தழுவிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என கூறிவிட்டு கலைந்து சென்றனர்.

    • ஆரோவில் அருகே பரபரப்பு
    • திடீரென குடியிருப்பு மத்தியில் உள்ள பிரதான சிமெண்டு சாலையில் மூங்கில் வேலி அமைத்து விட்டு சென்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டை அடுத்த இரும்பை பஞ்சாயத்தி ற்குட்பட்ட கணபதி நகரில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மனை வாங்கி, அதில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில்  அப்பகுதிக்கு வந்த ஒரு சிலர் திடீரென குடியிருப்பு மத்தியில் உள்ள பிரதான சிமெண்டு சாலையில் மூங்கில் வேலி அமைத்து விட்டு சென்றனர்.

    இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், ஆரோவில் போலீசாரிடம் புகார் தெரி வித்தனர். இதற்கிடையே பிரதான சாலையில் வேலி அமைத்ததால், அப்பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவர்கள், பொது மக்கள் கடைக்கு சென்று வரமுடியாத சூழல் ஏற்பட்டது.

    இதையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் இரவு அங்கு திரண்டு, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் சாலையின் குறுக்கில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலியை ஆக்ரோ ஷமாக பிரித்து எறிந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி மக்களிடம்

    பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பிரச்னை குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதையேற்று அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் குற்றச்சாட்டு
    • மாநிலம் முழுவதும் தெருவுக்கு 10 ரெஸ்ட்ரோ பார்களை திறந்தது தான் இவரது முக்கிய சாதனையாக உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது சுதந்திர தின உரையில் பல்வேறு சாதனைகள் செய்ததாக பெரிய பட்டியலிட்டு தெரிவித்து ள்ளார்.

    இது சுதந்திர தின உரை போன்று அமையாமல் வருகிற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் வாக்குறுதிகளாக அவர் பேசியுள்ளார்.

    புதுச்சேரி அரசு பல்வேறு சாதனைகள் செய்ய உள்ளதாக தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு மேலாக கூறி வருகிறார்.

    பட்ஜெட் உரையின்போ தும் இதே கருத்தை தான் பலமுறை வலி யுறுத்தி யுள்ளார். ஆனால் எவற்றையும் செயல்படுத்தி உள்ளதாக தெரியவில்லை.

    புதுச்சேரி மாநிலம் முழுவதும் தெருவுக்கு 10 ரெஸ்ட்ரோ பார்களை திறந்தது தான் இவரது முக்கிய சாதனையாக உள்ளது.

    இதனால் புதுச்சேரி மாநிலத்தில் பெரும் கலாச்சார சீரழிவு ஏற்பட்டுள்ளது.

    அதே போல் இவர் தெரிவி த்ததற்கு மாறாக வீட்டு வரியுடன் குப்பை வரியும் வசூலி க்கப்படுகிறது.

    சரியான திட்டமிடல் இல்லாத காரணத்தால் தினசரி அனைத்து சாலை களிலும் போக்குவரத்து நெருக்கடி நிகழ்கின்றது, போலி பத்திர பதிவுகள் தொடர்ந்து எந்தவித அச்சமும் இன்றி நடைபெற்று வருகின்றது , இந்த அரசு பதவி ஏற்று பல புகார்கள் அளித்தாலும் சரியான நடவடிக்கைகள் எடுப்பதில்லை.

    தரமற்ற சாலைகள், தனியார் மின்மய கொள்கை, தொடர் மின்வெட்டு, தரமற்ற குடிநீர் வசதி, நிர்வாக திறமையின்மையால் அதிகாரிகளை குறை கூறுவது, புதுச்சேரி மாநிலம் கல்வி கேந்திரமாக இல்லாமல் கல்வி வியாபாரி களை ஊக்குவிக்கும் பகுதியாக மாறி உள்ளது. எனவே சுதந்திர விழா உரை வருகிற பாராளுமன்ற தேர்தலுக்கான உரையாகவே உள்ளது.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • புதுச்சேரி தலித் உரிமை இயக்கம் வலியுறுத்தல்
    • புதுச்சேரி அரசு ஆணை பிறப்பிக்க கோறுவது தாய்மண் தலித்துகளுக்காக போராடும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு அழகல்ல.

    புதுச்சேரி:

    அனைத்திந்திய தலித் உரிமை இயக்க புதுச்சேரி மாநிலத் தலைவர் ராஜா மற்றும் செயலாளர் நலவேந்தன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி விடுதலைச்சி றுத்தைகள் கட்சி. புதுச்சேரி மாநிலத்தில் இடது சாரிகளுடன் சேர்ந்து கூட்டு போராட்டங்களை நடத்தி வருகிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம். இந்த நேரத்தில் இடதுசாரி ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் புதுச்சேரியில் குடிபெயர்ந்த தலித்களுக்கும், தலித் இடஒதுக்கீடு கேட்டு ஜனாதிபதியிடம் விடுதலை சிறுத்தை கட்சி மனு அளித்துள்ளது.

    புதுச்சேரியில் குடியிருக்கும் பூர்வகுடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஒரு ஆயிரம் ஓய்வுபெற்ற குடிபெயர்ந்த தலித்களு க்காக 2 லட்சம் பூர்விக தலித்களின் அரசிய லமைப்பு உரிமையை பறிக்க புதுச்சேரி அரசு ஆணை பிறப்பிக்க கோறுவது தாய்மண் தலித்துகளுக்காக போராடும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு அழகல்ல.

    குடிபெயர்ந்த தலித்கள் பூர்வீக தலித்துகளுடன் நடத்திய சட்ட போராட்டத்தின் முடிவு 1964-ம் ஆண்டுதான் பூர்வீக தலித்துகளுக்கான வெட்டுறுதி தேதி என சட்டரீதியாக வெற்றி பெற்றது குறிப்பிடத்த க்கதாகும்.

    புதுச்சேரி மாநிலத்திற்கும் புதுச்சேரி குடிபெயர்ந்த தலித்து களுக்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இந்தியா முழுவதற்கும் மாற்றிட வேண்டுமென்று கோருவது, தலித்துகளை இடஒதுக்கீடு கோரிக்கை மூலம் மோத விடுவது வெறுப்பு அரசியலுக்கு துணைப்போவது போன்றதாகும்.

    • முன்னாள் மாணவர் சங்கம் வழங்கியது
    • மாணவர் சங்க தலைவர் வக்கீல் நாராயணகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபு வரவேற்புரையாற்றினார்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளியில் கடந்த 1980 முதல் 1988 வரை பயின்ற முன்னாள் மாணவர்கள் சங்கம் சார்பில் இப்பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது.

    விழாவுக்கு முன்னாள் மாணவர் சங்க தலைவர் வக்கீல் நாராயணகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபு வரவேற்புரையாற்றினார்.

    சிறப்பு அழைப்பாளராக புதுவை கல்வித்துறை முதன்மை கல்வி அதிகாரி தனசெல்வம்நேரு, பள்ளி தலைமை ஆசிரியர் அமராவதி, முன்னாள் தலைமை ஆசிரியர்கள் அமர், அச்சுதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.

    மேலும் மாணவர்களை தேர்ச்சி பெற செய்த ஆசிரியர்களையும் பாராட்டி சால்வை அணிவித்து கவுரவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் மூர்த்தி, சந்தானம், முருகையன், இளஞ்செழியன் , செல்லப்பன், செல்வராஜ், பாபு, டேவிட் ஜோசப், முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு
    • பிற்பட்டோர் கணக்கெடுப்பு எவ்வளவு காலத்தில் முடிவு பெற்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    முன்னாள் எம்.எல்.ஏ. நாரா.கலைநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சரின் சுதந்திர தின உரையில் 2021-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்கு றுதிகள் பற்றி கருத்து தெரிவிக்காமல் இருப்பது கவலை அளிக்கிறது. பிற்பட்டோர் கணக்கெடுப்பு எவ்வளவு காலத்தில் முடிவு பெற்று உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று அறிவித்திருக்க வேண்டும்.

    பஞ்சாலைகள் குறித்து அரசின் கொள்கை நிலை என்ன.? ஜவுளி பூங்கா குறித்து எந்த தகவலும் புதுவை யிலிருந்து வரவி ல்லை என மத்திய மந்திரி கூறியிருப்பது பற்றி தெளிவுபடுத்தி இருக்க வேண்டும். 100 நாட்களுக்கு மேலாக போராடும் புதுவை அரசின் சார்பு நிறுவன தொழிலாளர்கள் சம்பளம் குறித்து எந்தக் கருத்தையும் முதல்-அமைச்சர் தெரிவிக்கவில்லை.

    போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மேம்பாலம் அமைக்கும் திட்டங்கள் பற்றி வாய்திறக்க வில்லை. பெருகி வரக்கூடிய திருட்டு, கொலை, கொள்ளை, போதை பொருள்கள் நடமாட்டம் ஆகியவற்றை கட்டுப்படுத்த எந்த திட்டமும் இல்லை. ரேசன் கடைகளை திறப்போம் என்ற அறிவிப்பு வெற்று அறிவிப்பாகவே உள்ளது.

    ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பெரிய மார்க்கட்டை புதுப்பிக்க எதிர்ப்பு எழுந்து ள்ள நிலையில் அது குறித்தும் முதல்-அமைச்சர் தெரிவிக்க வில்லை. ஒட்டு மொ த்தத்தில் முதல்-அமைச்சரின் சுதந்திர தின உரை மாநில மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.

    இவ்வாறு நாரார கலைநாதன் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • டி.ஜி.பி.யிடம் வர்த்தக சபை நிர்வாகிகள் வலியுறுத்தல்
    • ஓர் அமைப்பை உருவாக்கி இதுபோன்ற பிரச்சனைகள் வருவதை தொடக்கத்திலே தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    உழவர்கரை, விழுப்புரம் சாலையில் ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு மிக அருகில் தனியார் பேக்கரி செயல்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் உழவர்கரை பகுதியில் ஒரு அரசியல் கட்சியின் அலுவலகம் கட்ட மாமூலாக சிமெண்டு மூட்டை வாங்கித் தாராத காரணத்தால் அந்த நிறுவனம் மீதும் ஊழியர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

    இதையடுத்து வர்த்தக சபையின் தலைவர் குணசேகரன் தலைமையில் வர்த்தக சபை நிர்வாகிகள், வணிகர் சங்கப் பிரதிநிதிகள் புதுச்சேரி காவல்துறை இயக்குநர் டி.ஜி.பி.ஸ்ரீநிவாசை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

    மாமூல் கேட்டு பேக்கரி கடை மீதும் அந்த கடையின் ஊழியரை தாக்கிய சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வணிகர்களுக்கும் அதன் ஊழியர்களுக்கும், நிறுவனத்துக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும். மேலும் வணிகர்கள் காவல் துறை அதிகாரிகள் இணைந்த ஓர் அமைப்பை உருவாக்கி இதுபோன்ற பிரச்சனைகள் வருவதை தொடக்கத்திலே தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இந்த சந்திப்பின் போது வர்த்தக சபை துணைத் தலைவர் ரவி, பொதுச் செயலாளர் ஆனந்தன், இணைப் பொதுச் செயலாளர் முகம்மது சிராஜ், பொருளாளர் ரவி, குழு உறுப்பினர்கள் ஞானசம்பந்தம், ஜெகதீசன், ராஜவேல், புதுச்சேரி தொழில் வணிகர் கூட்ட மைப்பு தலைவர் கருணாநிதி, பொதுச்செ யலாளர் சதாசிவம், பேக்கரி உரிமை யாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட வர்கள் உடன் இருந்தனர்.

    • நுகர்வோர் குறைதீர்வு ஆணையங்களில் தேங்கியுள்ள புகார்களை குறிப்பிடட்ட காலத்தில் தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • தீர்வு காண வேண்டும் என மத்தியஸ்த சமாதான் என்ற நாடு தழுவிய அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணைய பதிவாளர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தேசிய நுகர்வோர் குறைதீர்வு ஆணைய உத்தரவு மற்றும் வழிகாட்டுதலின்படி நுகர்வோர் புகார்களை காலநேரத்திற்குள் செயல் முனைப்போடு கையாளப்பட்டு தீர்வு காண வேண்டும் என மத்தியஸ்த சமாதான் என்ற நாடு தழுவிய அமைப்பை மத்திய அரசு ஏற்படுத்தியுள்ளது.

    இதன்படி நுகர்வோர் குறைதீர்வு ஆணையங்களில் தேங்கியுள்ள புகார்களை குறிப்பிடட்ட காலத்தில் தீர்வு காண முடிவு செய்யப்பட்டுள்ளது.

    புதுவை மாநில, மாவட்ட நுகர்வோர் குறைதீர்வு ஆணையங்களில் தேங்கியுள்ள புகார்களை பேச்சுவார்த்தையில் பேசி தீர்வு காண வருகிற 19-ந்தேதி சிறப்பு முகாம் நடக்கிறது.

    மாவட்ட நுகர்வோர் ஆணைய தலைவர் முத்துவேல் தலைமையில் உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் ஆகியோர் முன்னிலையில் முகாமிற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • பொன்விழா எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்வது சம்மந்தமாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
    • செந்தில்முருகன், பூபதி, , நாகமுத்து முன்னாள் மாணவர் அணி பொருளாளர் பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை உப்பளம் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள், அணி செயலாளர்கள், தொகுதி செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

    கூட்டத்திற்கு மாநில செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். 20-ந் தேதி மதுரையில் நடைப் பெறும் பொன்விழா எழுச்சி மாநாட்டில் கலந்து கொள்வது சம்மந்தமாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் புதுவை மாநில துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ. வுமான ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் வீரம்மாள், திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, புதுவை நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள் எம்.ஏ.கே.கருணாநிதி, குணசேகரன், நாகமணி, காந்தி, மணவாளன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில

    எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன் , மேற்கு மாநில ஜெ. பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன்.

    இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர் செல்வம், தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ்குமார், தொகுதி செயலாளர்கள் கமல்தாஸ், பொன்னுசாமி, சிவகுமார், பாஸ்கர், துரை, கருணாநிதி, நடேசன், கிருஷ்ணன், கோபால், தர்மலிங்கம், குணசேகர், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலன், சிவராமராஜா, ராஜராஜன், வெங்கடேசன், செந்தில்முருகன், பூபதி, , நாகமுத்து முன்னாள் மாணவர் அணி பொருளாளர் பார்த்தசாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • எல்லா நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்குகின்றன.
    • யூனியன் பிரதேசங்களில் கல்வி, மருத்துவத்தில் புதுவை முதலிடம் பிடித்துள்ளது.

    புதுச்சேரி:

    சுதந்திர தினத்தையொட்டி கம்பன் கலையரங்கில் தியாகிகள் கவுரவிப்பு நிகழ்ச்சி நடந்தது. தியாகிகளுக்கு சால்வை அணிவித்து கவுரவித்து, இனிப்பு வழங்கி முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    விடுதலைக்காக பாடுபட்ட தலைவர்கள், வீரர்கள் நம் நாடு வளர்ச்சியடைய வேண்டும் என எண்ணினர். அவர்கள் எண்ணம்போல நம் நாடு இப்போது பெரிய வளர்ச்சியை நோக்கி செல்கிறது.

    உலகின் தலைசிறந்த நாடாக இந்தியா விளங்கி வருகிறது. எல்லா நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை உற்று நோக்குகின்றன. நாட்டின் வளர்ச்சியில் பங்களிப்பு செய்யும் வகையில் புதுவையும் வளர்ச்சி பெற்று வருகிறது.

    யூனியன் பிரதேசங்களில் கல்வி, மருத்துவத்தில் புதுவை முதலிடம் பிடித்துள்ளது. உள்கட்டமைப்புகளை மேம்படுத்தி வருகிறோம். பல ஆண்டாக மாநில அந்தஸ்து கேட்டு வருகிறோம். புதுவைக்கு மாநில அந்தஸ்து என்று எப்போதும் மத்திய அரசை அணுகி கோரிக்கை வைத்து வருகிறோம்.

    மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அதனால்தான் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியுள்ளோம்.

    நேரடியாகவும் சந்தித்து மத்திய அரசை கேட்டுள்ளோம். எம்.எல்.ஏ.க்கள், தலைவர்களை டெல்லி அழைத்துச் சென்று பிரதமரிடம் மாநில அந்தஸ்தை கேட்டு வலியுறுத்துவோம். நிச்சயமாக மாநில அந்தஸ்தை பெறுவோம். புதுவையில் ஆயிரத்து 348 தியாகிகள் உள்ளனர். அவர்களுக்கு மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் பென்ஷன் வழங்கப்படுகிறது.

    இந்த தொகையை உயர்த்த வேண்டும் என தியாகிகள் கோரிக்கை வைத்துள்ளனர். எனவே தியாகிகளுக்கு வழங்கப்படும் பென்ஷன் தொகை ரூ.12 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அனிபால்கென்னடி எம்.எல்.ஏ, கலெக்டர் வல்லவன், அரசு செயலர் பத்மாஜெய்ஸ்வால், செய்தி விளம்பரத்துறை இயக்குனர் தமிழ்செல்வன், துறை அதிகாரிகள், விடுதலை போராட்ட தியாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

    • வீட்டில், விபசாரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கையும் களவுமாகப் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
    • கைதானவர்களிடம் இருந்து 6 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பம் புறவழி சாலையில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், ஒரு வீட்டை வாடகை எடுத்து விபசாரம் நடப்பதாக அதிரடி குற்றத்தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அங்கு தெற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு வீரவல்லவன் தலைமையில் அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், அதிரடி குற்ற தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், பழனிசாமி மற்றும் பெண் போலீசார் விரைந்தனர்.

    அப்போது, அந்த வீட்டில், விபசாரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கையும் களவுமாகப் பிடித்து போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில், அவர்கள் அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த ரியாசுதீன் (வயது 39), அவரது மனைவி தாட்சாயிணி (35) மற்றும் முதலியார்பேட்டையைசேர்ந்த பிரமிளா (48), கோவிந்தசாலை பகுதியை சேர்ந்த ஜெயா என்ற தனம் (50), அரும்பார்த்தபுரம் சச்சிதானந்தம் என தெரிய வந்தது.

    அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 6 செல்போன்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 அழகிகள் மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பின் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

    • கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து கோரி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

    யூனியன் பிரதேசமான புதுவைக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்ற கோரிக்கை நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது.

    புதுவைக்கு மாநில அந்தஸ்தை வலியுறுத்தி இதுவரை சட்டசபையில் 13 முறை தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அவ்வப்போது மாநில அந்தஸ்து விவகாரம் அரசியல் கட்சிகளால் விஸ்வரூபம் எடுக்கும். இதற்காக பந்த், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் என போராட்டங்களும் களை கட்டும். ஆனால் மீண்டும் அடங்கிப் போய்விடும். சமீப காலமாக முதலமைச்சர் ரங்கசாமி, அரசுக்கு மாநில அந்தஸ்து இல்லாததால் அதிகாரம் இல்லை என்பதை அரசு விழாக்களில் அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார்.

    புதுவை சட்டசபையிலும் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இதனால் மீண்டும் மாநில அந்தஸ்து விவகாரம் சூடு பிடித்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநில அந்தஸ்து கோரி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பிரதமர் மோடியை விரைவில் சந்திக்க உள்ளதாக முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், " மாநில அந்தஸ்து கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதனால்தான் பல முறை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது" என கூறினார்.

    ×