என் மலர்
புதுச்சேரி

முள்வேலி அமைக்கப்பட்டதை கண்டித்து கணபதி நகர் மக்கள் தர்ணாவில் ஈடுபட்ட காட்சி.
குடியிருப்பு சாலையில் வேலி அமைத்ததால் பொதுமக்கள் திடீர் மறியல்
- ஆரோவில் அருகே பரபரப்பு
- திடீரென குடியிருப்பு மத்தியில் உள்ள பிரதான சிமெண்டு சாலையில் மூங்கில் வேலி அமைத்து விட்டு சென்றனர்.
புதுச்சேரி:
புதுவை அருகே தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டை அடுத்த இரும்பை பஞ்சாயத்தி ற்குட்பட்ட கணபதி நகரில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மனை வாங்கி, அதில் வீடு கட்டி வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அப்பகுதிக்கு வந்த ஒரு சிலர் திடீரென குடியிருப்பு மத்தியில் உள்ள பிரதான சிமெண்டு சாலையில் மூங்கில் வேலி அமைத்து விட்டு சென்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், ஆரோவில் போலீசாரிடம் புகார் தெரி வித்தனர். இதற்கிடையே பிரதான சாலையில் வேலி அமைத்ததால், அப்பகுதியில் வசிக்கும் பள்ளி மாணவர்கள், பொது மக்கள் கடைக்கு சென்று வரமுடியாத சூழல் ஏற்பட்டது.
இதையடுத்து ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் 50-க்கும் மேற்பட்டோர் இரவு அங்கு திரண்டு, திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் சாலையின் குறுக்கில் அமைக்கப்பட்டிருந்த முள்வேலியை ஆக்ரோ ஷமாக பிரித்து எறிந்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி மக்களிடம்
பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பிரச்னை குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதையேற்று அப்பகுதி மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.






