என் மலர்
நீங்கள் தேடியது "Political system"
- புதுச்சேரி தலித் உரிமை இயக்கம் வலியுறுத்தல்
- புதுச்சேரி அரசு ஆணை பிறப்பிக்க கோறுவது தாய்மண் தலித்துகளுக்காக போராடும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு அழகல்ல.
புதுச்சேரி:
அனைத்திந்திய தலித் உரிமை இயக்க புதுச்சேரி மாநிலத் தலைவர் ராஜா மற்றும் செயலாளர் நலவேந்தன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி விடுதலைச்சி றுத்தைகள் கட்சி. புதுச்சேரி மாநிலத்தில் இடது சாரிகளுடன் சேர்ந்து கூட்டு போராட்டங்களை நடத்தி வருகிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம். இந்த நேரத்தில் இடதுசாரி ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் புதுச்சேரியில் குடிபெயர்ந்த தலித்களுக்கும், தலித் இடஒதுக்கீடு கேட்டு ஜனாதிபதியிடம் விடுதலை சிறுத்தை கட்சி மனு அளித்துள்ளது.
புதுச்சேரியில் குடியிருக்கும் பூர்வகுடி தாழ்த்தப்பட்ட மக்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. ஒரு ஆயிரம் ஓய்வுபெற்ற குடிபெயர்ந்த தலித்களு க்காக 2 லட்சம் பூர்விக தலித்களின் அரசிய லமைப்பு உரிமையை பறிக்க புதுச்சேரி அரசு ஆணை பிறப்பிக்க கோறுவது தாய்மண் தலித்துகளுக்காக போராடும் விடுதலை சிறுத்தை கட்சிக்கு அழகல்ல.
குடிபெயர்ந்த தலித்கள் பூர்வீக தலித்துகளுடன் நடத்திய சட்ட போராட்டத்தின் முடிவு 1964-ம் ஆண்டுதான் பூர்வீக தலித்துகளுக்கான வெட்டுறுதி தேதி என சட்டரீதியாக வெற்றி பெற்றது குறிப்பிடத்த க்கதாகும்.
புதுச்சேரி மாநிலத்திற்கும் புதுச்சேரி குடிபெயர்ந்த தலித்து களுக்காக இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை இந்தியா முழுவதற்கும் மாற்றிட வேண்டுமென்று கோருவது, தலித்துகளை இடஒதுக்கீடு கோரிக்கை மூலம் மோத விடுவது வெறுப்பு அரசியலுக்கு துணைப்போவது போன்றதாகும்.






