என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    4 வழி சர்வீஸ் சாலையில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
    X

    குடிநீர் இணைப்பு கடந்த  3 மாதங்களாக துண்டிக்கப்பட்டு, சாலை பணிகள் நடைபெற்று வருகின்ற காட்சி.

    4 வழி சர்வீஸ் சாலையில் குடிநீர் இணைப்பு துண்டிப்பு

    • தற்காலிகமாக லாரி மூலம் குடிநீர் வழங்க வலியுறுத்தல்
    • குடிநீர் இணைப்பு கடந்த 3 மாதங்களாக துண்டிக்கப்பட்டு, சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது.

    புதுச்சேரி:

    திருபுவனையில் சென்னை-நாகப்பட்டினம் 4 வழி சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இதனால் திருபுவனை பகுதி 500 மீட்டர் தூரத்தில் உள்ள வணிக கடைகள் நிறைந்த பகுதியில், பொதுப்பணி துறையின் மூலம் பயன்பாட்டில் இருந்து வந்த குடிநீர் இணைப்பு கடந்த 3 மாதங்களாக துண்டிக்கப்பட்டு, சாலை பணிகள் நடைபெற்று வருகின்றது.

    அப்பகுதி மக்களுக்கு பொதுப்பணி துறையின் மூலமாக குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது. ஆனால் சாலை போடும் ஒப்பந்த தொழிலாளர்கள் வாட்டர் டேங்கர் லாரிகள் மூலம் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கும், ஹோட்டல்கள், வணிக கடைகளுக்கு காலையும், மாலையும் குடிநீர் வழங்கி வருகிறார்கள்.

    இது தற்காலிகம் என்றா லும், முறையான, சுத்தமான குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள்.

    குடிநீர் குழாய் இணைப்புர்வீஸ் சாலையின் தெற்கு புறம் மழை நீர் வடிகால் கால்வாய் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. அது முழுமையாக வேலைகள் முடிந்த பிறகு சாலைகள் போடும் பணி துவக்கத்திற்கு முன்பாக மீண்டும், குடிநீர் குழாய் இணைப்பு இணைக்கப்பட்டு, அதன் பின்னர் சாலை போடும் பணி துவக்கப்பட உள்ளனர்.

    இதனால் இப்பகுதியில் இன்னும் ஒரு மாத காலத்திற்கு குடிநீர் இணைப்பு இல்லாமல் பொதுமக்கள் சிரமத்தை பொறுத்துக் கொள்ள வேண்டும். மேலும் அதிகப்படியான குடிநீரை பொதுப்பணித்துறை மூலம் வழங்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×