என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    நீட் தேர்வு விவகாரம்: மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம்- கவர்னர் தமிழிசை வேண்டுகோள்
    X

    நீட் தேர்வு விவகாரம்: மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம்- கவர்னர் தமிழிசை வேண்டுகோள்

    • நடைபெற வேண்டிய விழாக்கள் எல்லாம் சிறப்பாக ஒரு நட்புணர்வோடு நடக்க வேண்டும்.
    • தெலுங்கானா விழாக்களுக்கு முதல்-மந்திரி வருவதில்லை. அதை கவலையோடுதான் எதிர்கொள்கிறேன்.

    புதுச்சேரி:

    புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் கவர்னர் தமிழிசை கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி பேசினார்.

    விழா முடிந்த பின்னர் கவர்னர் தமிழிசையிடம் தமிழகத்தில் கவர்னர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்பது, நீட் தேர்வு தற்கொலை விவகாரங்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து கவர்னர் தமிழிசை கூறியதாவது:-

    நாடு 100-வது சுதந்திர தினவிழாவை கொண்டாடும் போது மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சி பெற்று இருக்கும்.

    அதேபோல் புதுச்சேரியும் முன்னேறிய மாநிலமாக மாறியிருக்கும். தமிழக முதலமைச்சரின் தேநீர் புறக்கணிப்பு பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

    பொதுவாக எதிர் கருத்துகள் இருக்கலாம். ஆனால் நடைபெற வேண்டிய விழாக்கள் எல்லாம் சிறப்பாக ஒரு நட்புணர்வோடு நடக்க வேண்டும். தெலுங்கானா விழாக்களுக்கு முதல்-மந்திரி வருவதில்லை. அதை கவலையோடுதான் எதிர்கொள்கிறேன்.

    கருத்து மோதல், கருத்து பரிமாற்றம் இருக்கலாம். ஒருவர் கருத்தை ஒருவர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பது இல்லை.

    விழாவில் கலந்து கொள்ளாமல் இளைய சமுதாயத்தினருக்கு எதை சொல்ல போகிறோம்? தொடர்ச்சியான வழிமுறையை பின்பற்றுவதுதான் சரியானதாக இருக்கும். நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்தே ஆதரித்தவள் நான். இதன்மூலம் பாமர மக்கள் பயனடைந்துள்ளனர்.

    இதை வைத்து அரசியல் செய்கின்றனர். தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து என்றார்கள். முடியாது என்று தெரிந்தும் பொய் வாக்குறுதி அளித்தனர். நீட் தேர்வு என்பது சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு.

    நீட் தேர்வு வேண்டாம் என்பவர்கள் கோர்ட்டுக்கு போக வேண்டியதுதானே? அதை விடுத்து மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாட வேண்டாம். மாணவர்களை படிக்க விடுங்கள். எதிர்மறையான கருத்துகளை பரப்பாதீர்கள். நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் தான் அதிக அளவில் வெற்றி பெறுகிறார்கள்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.

    Next Story
    ×