search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கவர்னர் தமிழிசை, அமைச்சர் லட்சுமி நாராயணன் வாழ்த்து
    X

    சுதந்திர தினவிழாவையொட்டி புதுவை ராஜ்நிவாசில் கவர்னர் தமிழிசை தேசியகொடி ஏற்றிய போது எடுத்த படம்.

    கவர்னர் தமிழிசை, அமைச்சர் லட்சுமி நாராயணன் வாழ்த்து

    • சாதனைகளின் உச்சமாக சந்திராயன் விண்கலம், நிலவில் தடம் பதிக்கும் இவ்வாண்டு இந்திய நாடு மேலும் சாதனைகள் படைத்திடும்.
    • .நாம் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் ஒன்றுபட்ட சிந்தனையோடு செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட உறுதி ஏற்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை வெளியிட்டுள்ள சுதந்திர தின வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநில மக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த சுதந்திர தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். சுதந்திரத் திருநாள் அமுத பெருவிழாவை நாம் கொண்டாடிக் கொண்டி ருக்கிறோம்.

    நமது தேசத் தலைவர்கள் அரும்பாடு பட்டு தங்கள் இன்னுயிரைத் தந்து நாட்டின் விடுதலையைப் பெற்றுத்தந்தார்கள். அத்தகைய தியாகச் தலைவர்களின் வரலாறுகளை இன்றைய இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும்.

    தொலைநோக்குப் பார்வை கொண்ட பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையின்கீழ் கல்வி, மருத்துவம், அறிவியல், வேளாண்மை, விண்வெளி ஆராய்ச்சி என்று பல துறைகளிலும் இந்தியா இன்று உலகின் முன்னோடி நாடாகத் திகழ்கிறது.நாம் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் ஒன்றுபட்ட சிந்தனையோடு செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்குப் பாடுபட உறுதி ஏற்க வேண்டும்.

    அமைச்சர் லட்சுமி நாராணன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மக்களுக்கு சுதந்திர தின வாழ்த் துக்கள். தங்கள் இன்னுயிர் தந்து சுதந்திரம் பெற்றுத் தந்த தியாக பெரு மக்களை நினைவு கூறும் பொன்னாள் இது. வேறு எந்த நாடும் சுதந்திரம் பெற்ற பிறகு குறுகிய காலத்தில் இவ்வளவு சாதனைகள், உள்கட்டமைப்பு வசதிகளை அடைந்தது இல்லை.

    சாதனைகளின் உச்சமாக சந்திராயன் விண்கலம், நிலவில் தடம் பதிக்கும் இவ்வாண்டு இந்திய நாடு மேலும் சாதனைகள் படைத்திடும்.

    எல்லா வேறுபாடுகளை களைந்து மறந்து அனைவரும் ஒன்றுபட்டு பாடுபடுவோம். காந்தியமும், கர்மவீரரின் கடமைகளும் முன்னேற்றப்பாதைகள் என அறிந்து செயல்படும் முதல்-அமைச்சருக்கு தோள் கொடுத்து புதுவையை வளர்ச்சிப்பாதையில் கொண்டுசெல்வோம். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவை புதுவை மண்ணுக்குரியவை என்பதில் பெருமை கொள்வோம்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×