என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தும் துணைவேந்தர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.
    • மக்களையும் மாணவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-.

    கடந்த 5 வருடங்களாக பல்கலைக்கழக நிர்வாகத்தில் எவ்விதமான வெளிப்படைதன்மை இல்லாமல் வழிநடத்தி லஞ்ச லாவண்ய செயல்களில் ஈடுபட்ட துணைவேந்தர் மீது மத்திய அரசு எவ்வித நடவடிக்கை எடுக்காமல், புதிய துணை வேந்தரை நியமிப்பதற்கு பதிலாக அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கியது புதுச்சேரி மக்களையும் மாணவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.பல்கலைக்கழக நிர்வாகம் முற்றிலும் சீர் குலைந்த நிலையில் உள்ளதை நிரூபிக்கும் வகையில் சென்னை உயர்நீதி மன்றம் பேராசிரியர் குர்மீத் சிங் ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கு பூர்வாங்க ஆதாரம் இருக்கிறது என்று தீர்ப்பளித்து உள்ளது. சென்னை உயர்நீதி மன்றம் புதுவைப் பல்கலைக்கழக அதிகாரிகள் தொடர்ந்த வழக்கில் 2-ம் முறையாக துணைவேந்தர் குர்மீத் சிங் , நிதி அலுவலர் டேனியல் லாசர் மற்றும் இதர அலுவலர்கள் குற்றம் செய்ததிற்கு பூர்வாங்க ஆதாரம் சி.பி.ஐ. உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தும் துணைவேந்தர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.

    மேலும் இந்த ஊழலில் ஈடுபட்ட இதர குற்றவாளிகளை கைது செய்யாமல் இருப்பது மிகுந்த வேதனையை தருகிறது.

     பேராசிரியர் குர்மீத் சிங் துணை வேந்தராக பதவி ஏற்ற வருடம் முதல் கடந்த 5 வருடங்களில் புதுவைப் பல்கலைக்கழகம் வருடந்தோறும் தேசிய அளவில் வெளியிடப்படும் தர வரிசையில் சரிவை சந்தித்த வண்ணம் இருக்கிறது. எனவே புதுவை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தரை மத்திய அரசு நியமனம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம்- டி. என். பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகப்பன்.
    • அம்பிகா என்ற மனைவியும் 2 பிள்ளைகள் உள்ளனர்.

    புதுச்சேரி:

    தவளக்குப்பம் அருகே அபிஷேகப்பாக்கம்- டி. என். பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் நாகப்பன். இவருக்கு அம்பிகா என்ற மனைவியும் 2 பிள்ளைகள் உள்ளனர்.

    நாகப்பன் விவசாய கூலி வேலை செய்து வந்தார். நேற்று பிற்பகலில் அபிஷேகபாக்கம் ஏரிக்கு சென்று மீன் பிடித்து வருவதாக சென்றார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்ப வில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி வந்தனர்.

    அப்போது ஏரியில் பிணம் ஒன்று மிதப்பதாக தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு நாகப்பன் இறந்து கிடந்தது தெரிய வந்தது. ஏரியில் மீன் பிடிக்கும் போது நாகப்பன் தவறிவிழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.

    தகவல் அறிந்தவுடன் தவளக்குப்பம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோ தனைக்காக கதிர்காமம் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது சம்பந்தமாக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • உள்ளாட்சியில் 33 சதவிகித இடஒதுக்கீடு கிடைத்து பெண்கள் பகிர்ந்துள்ளனர்.
    • புதியதாக சக்தி சூப்பர் ஷீ என்ற ஆப் தொடங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்தபாபு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த போது பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சோனியா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் பாராளு மன்றத்தில் தாக்கல் செய்தபோது அது தோல்வி யடைந்தது. ஆனால் அவர்களது முயற்சியால் உள்ளாட்சியில் 33 சதவிகித இடஒதுக்கீடு கிடைத்து பெண்கள் பகிர்ந்துள்ளனர்.

    பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வேண்டும். தற்போது வரவுள்ள தேர்தலில் இடஒதுக்கீடு எதிரொலிக்க வேண்டும். அதற்காக பெண்களுக்கு அரசியல் பற்றி தெரிந்து கொள்ளவும், அவர்களுக்கு அரசியல் பயிற்சி அளிக்கவும் புதியதாக சக்தி சூப்பர் ஷீ என்ற ஆப் தொடங்கப்பட்டுள்ளது.

    அந்த ஆப்பில் இணையும் பெண்களுக்கு அரசியல் குறித்து பயிற்சி அளிக்கப்படும். அரசியலில் அதிக ஈடுபாடு உள்ள பெண்கள் இந்த ஆப்பில் தங்களது கருத்துக்களை பதிவு செய்து பயிற்சி பெற்று வெளியில் வரலாம். இளைஞர் காங்கிரசில் உள்ளவர்கள் கல்லூரி மற்றும் அனைத்து பகுதிகளிலும் உள்ள பெண்களுக்கு விழிப்புணர்வு இயக்கம் நடத்த உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுவை அ.தி.மு.க. சார்பில் ரெயில் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • கொலை வெறி தாக்குதல் சம்பவம் குறித்து உண்மை கருத்துக்களை எடுத்துக் கூறினார்.

    புதுச்சேரி:

    தமிழக சட்ட சபையில் கடந்த 1989-ம் ஆண்டு மறைந்த தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா தாக்கப்பட்டது தொடர்பான விமர்சனங்களை கண்டித்து புதுவை அ.தி.மு.க. சார்பில் ரெயில் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர், பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

    மணிப்பூர் சம்பவத்தில் தி.மு.க.வினர் பேசிய தவறான தகவலுக்கு பதிலளிக்கும் போது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீத்தாரமன் தமிழக சட்ட மன்றத்தில் ஜெயலலிதா மீது நடத்தப்பட்ட கொலை வெறி தாக்குதல் சம்பவம் குறித்து உண்மை கருத்துக்களை எடுத்துக் கூறினார்.

    தமிழக சட்ட சபையில் நடந்த கொலைவெறி சம்பவத்தை மறைத்து அவமதிக்கும் நோக்கத்தில் உண்மைக்கு புறம்பான பொய் செய்தியை முதல்-அமைச்சர் பேசியிருப்பது கண்டிக்கதக்கது. தன்மானத்தையே பதவிக்காக அடமானம் வைத்து அரசியல் பிழைப்பு நடத்தும் திருநாவுக்கரசுக்கு அ.தி.மு.க.வைப் பற்றி பேச எந்தவித தகுதியும், அருகதையும் இல்லை.

    அன்றைக்கு சட்டசபையில் இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குமரிஆனந்தன் இந்த சம்பவத்தை கண்டித்ததோடு, தானும் தி.மு.க.வினரால் தாக்கப்பட்டதாக கூறியி ருந்தார். உண்மை நிலையை நன்குணர்ந்த குமரி ஆனந்தனின் புதல்வி கவர்னர் தமிழிசை தைரியமாக பேட்டி அளித்துள்ளார். அதற்காக அவருக்கு அதிமுக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

    சந்தர்ப்பவாத அரசியல் நடத்தும் தி.மு.க.விற்கு எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் புதுவை உளளிட்ட 40 தொகுதிகளிலும் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். தமிழகத்தில் எடப்பாடியார் தலைமை யிலான கூட்டணி வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் புதுவை மாநில அ.தி.மு.க. துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான ராஜாராமன், மாநில இணைச் செயலாளர்கள் எஸ்.வீரம்மாள், ஆர்.வி.திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் சாரம் கணேசன், முன்னாள் கவுன்சிலர் மகாதேவி, மாநில கழக பொருளாளர் ரவிபாண்டுரங்கன், புதுவை நகர செயலாளர் அன்பழகன் உடையார், மாநில துணைச் செயலாளர்கள் உமா, எம்.ஏ.கே.கருணாநிதி, பி.எல். கணேசன், குணசேகரன், நாகமணி, வி.கே.மூர்த்தி, கிருஷ்ணமூர்த்தி, காந்தி, ஜெய.சேரன், குமுதன், மணவாளன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம் மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன் , மேற்கு மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிவாலயா இளங்கோ, மேற்கு மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • புதுச்சேரி திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் ஓடும் ரெயிலில் ஓவியப்போட்டி நடைபெற்றது.
    • திருமண மண்டபத்தில் பரிசளிப்பு விழா நடந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் ஓடும் ரெயிலில் ஓவியப்போட்டி நடைபெற்றது. இதில் 5 முதல் 7-ம் வகுப்பு வரை, 8 முதல் 10-ம் வகுப்பு வரை என இரு பிரிவுகளாக நடந்தது. ஓடும் ரெயிலில் நடை பெற்ற இந்த ஓவியப்போட்டியில் புதுச்சேரி முழுவதும் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண் டனர்.

    தூய்மை இந்தியா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு தலைப் புகளில் இப்போட்டி நடத் தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 55 பேருக்கு புஸ்சி வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பரிசளிப்பு விழா நடந்தது. இதில் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி கலந்துகொண்டு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங் கினார்.

    நிகழ்ச்சியில் பெத்தி செமினார் சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர் பாஸ்கல்ராஜ், கலைக்கூட துணை தலைவர் கோவிந்தராஜ், ஓவிய ஆசிரியர் சிவக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் சில நாட்களுக்கு முன்பு நடந்தது.
    • தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்-9 பேர் குழுவாகவும்,எதிர் கட்சிகள் தரப்பில் ஒரு குழுவாவும், போட்டியிட்டனர்.

    புதுச்சேரி:

    பாகூரை அடுத்த பரிக்கல்பட்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்க விக்ரமன் வழிகாட்டுதலின் பேரில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்-9 பேர் குழுவாகவும்,எதிர் கட்சிகள் தரப்பில் ஒரு குழுவாவும், போட்டியிட்டனர்.

    தேர்தலில் தங்க. விக்ரமன் சார்பில் போட்டியிட்ட கோவிந்தன், சந்திரசேகரன், சுப்ரமணி, தண்டபாணி, அபிமன்னன், தேவநாதன், புஷ்பா, ராதா, பத்மா ஆகிய 9 பேர் இயக்குநர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.

    தேர்வு செய்யப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க இயக்குனர்கள் முன்னாள் எம்,எல்.ஏ. தங்க. விக்ரமன் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களான முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நவமச்சிவாயம், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    சங்க இயக்குனர்களுக்கு அவர்கள் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தனர்.

    • கட்சி அலுவலகம் கட்டுவதாகவும், அதற்கு பேக்கரி உரிமையாளரிடம் 20 ஆயிரம் மதிப்புள்ள சிமெண்டு மூட்டைகள் வாங்கித் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
    • ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி-விழுப்புரம் சாலை, ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் பேக்கரி உள்ளது.

    அந்த கடைக்கு வந்த 8 பேர் கொண்ட கும்பல் அங்கு பணியில் இருந்த ஊழியர் ஆனந்திடம் தகராறு செய்தது. அடுத்த சில நிமிடத்தில் அந்த கும்பல் ஆனந்தை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கி பொருட்களை சூறையாடினர்

    உடனே அங்கிருந்த ஊழியர்கள் ஆனந்தை மீட்டனர். பேக்கரிக்குள் 8 பேர் கொண்ட கும்பல் ஊழியரை தாக்கும் சி.சி.டி.வி. வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாகியது.

    இது தொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசார் விசாரணை நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, உழவர்கரை பகுதியைச் சேர்ந்த ஒரு கும்பல், கட்சி அலுவலகம் கட்டுவதாகவும், அதற்கு பேக்கரி உரிமையாளரிடம் 20 ஆயிரம் மதிப்புள்ள சிமெண்டு மூட்டைகள் வாங்கித் தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

    பேக்கரி உரிமையாளர் சிமெண்டு வாங்கித் தருவதற்கு காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் தான் உழவர் கரை பகுதியைச் சேர்ந்த ஆனந்த், சுப்ரமணி உள்ளிட்ட 8 பேர் கொண்ட கும்பல் பேக்கரிக்குள் புகுந்து ஊழியர் ஆனந்தை தாக்கியது விசாரணையில் தெரியவந்தது.

    கடை உரிமையாளர் அளித்த புகாரின்பேரில், உழவர்கரை ஆனந்த், சுப்ரமணி உள்ளிட்ட 8 பேர் மீது கொலை மிரட்டல், கடை சூறை, அடித்து தாக்குதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

    மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட உழவர்கரையை சேர்ந்த சுப்ரமணி (33) என்பவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

    • திறமையாக சைக்கிளை ஓட்டி மாணவர் அங்கு நின்றிருந்த மாணவிகள் மட்டுமல்லாது பொது மக்களையும் கவர்ந்தார்.
    • சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு தகுந்த அறிவுரையை சொல்ல வேண்டும் என பஸ்சுக்கு நின்றிருந்த பலரும் தெரிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் கடும் வெயில் காரணமாக கோடை விடுமுறை 9 நாட்கள் நீட்டிக்கப்பட்டது.

    இந்த விடுமுறைக்கு மாற்றாக சனிக்கிழமைகளில் முழு நாளும் புதுவை மற்றும் காரைக்காலில் பள்ளிகள் இயங்குகின்றன. அந்த வகையில் நேற்று சனிக்கிழமை பள்ளிகள் இயங்கியது.

    மாலை பள்ளி முடிந்து வீடு திரும்ப புதுவை- கடலூர் சாலையில் மாணவ-மாணவிகள் பஸ்சுக்கு காத்திருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பள்ளி மாணவர் ஒருவர் திடீரென தனது சைக்கிளில் சாகசம் செய்ய தொடங்கினார்.

    பஸ்சுக்கு காத்திருந்த மாணவிகளை கவரும் வகையில் கையை விட்டு ஓட்டுவது, முன் சக்கரத்தை தூக்கி ஓட்டுவது, ஹாண்டில் பாரில் சாய்ந்தபடி செல்வது என கெத்து காட்டினார்.

    திறமையாக சைக்கிளை ஓட்டி மாணவர் அங்கு நின்றிருந்த மாணவிகள் மட்டுமல்லாது பொது மக்களையும் கவர்ந்தார்.

    ஆனாலும், மிகவும் பரபரப்பான புதுவை - கடலூர் சாலையில் சைக்கிள் சாகம் செய்வது ஆபத்தானது. கெத்து காட்டி உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் பெற்றோர் மனம் என்னவாகும்?

    எனவே, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகம் மாணவர்களுக்கு தகுந்த அறிவுரையை சொல்ல வேண்டும் என பஸ்சுக்கு நின்றிருந்த பலரும் தெரிவித்தனர்.

    இதனிடையே மாணவனின் சைக்கிள் சாகச வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    • இளவட்டக்கல்லை தூக்கும் போட்டியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
    • கைத்தட்டி பார்த்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அகரம் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் ஆடி திருவிழா நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி உள்ளூர் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.

    கயிறு இழுக்கும் போட்டி, இசை நாற்காலி, உறியடி மற்றும் இளவட்ட கல் தூக்கும் போட்டி நடத்தப்பட்டது.

    இதில் ஏராளமான கிராம இளைஞர்களும், இளம் பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இளவட்டக்கல்லை தூக்கும் போட்டியில் இளைஞர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். போட்டியை காண குழுமியிருந்த இளம் பெண்கள் முன்பு இளை ஞர்கள் இளவட்ட கல்லை தூக்கி ஆர்ப்பரித்தனர். இதனை கைத்தட்டி பார்த்த பொதுமக்கள் ஆரவாரம் செய்தனர். 

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தகவல்
    • 75-வது சுதந்திர அமிர்தபெருவிழாவில் பிரதமர் மோடியிடம் அந்த மண் ஒப்படைக்கப்படும்.

    புதுச்சேரி:

    புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    75-வது அமிர்த பெருவிழாவை முன்னிட்டு புதுவை மாநிலம் முழுவதும் அனைத்து இல்லங்களிலும் பிரதமரின் வேண்டு கோளின்படி இன்று ஞாயிற்றுக்கிழமை முதல் 3 நாட்கள் கொடியேற்ற வேண்டும்.

    இதேபோல் வருகிற 17-ந் தேதி காலை 10 மணி அளவில் 108 கிராம பஞ்சாயத்தில் இருந்து எடுக்கப்பட்ட புனித மண் கலசம் பாரதியார் பல்கலைக்கூடத்தில் நேரு யுவகேந்திரா துணை இயக்கு நரிடம் ஒப்படைக்கப்படும்.

    அந்த மண் 27-ந் தேதி டெல்லி ராஜ்பவனில் உள்ள 75-வது சுதந்திர அமிர்தபெருவிழாவில் பிரதமர் மோடியிடம் அந்த மண் ஒப்படைக்கப்படும்.

    பல அதிகாரிகள் அரசுக்கு ஒத்துழைப்பு தருகின்றனர்.

    அரசுக்கு எதிராக செயல்படும், மக்கள் திட்டங்களை நிறைவேற்றாத அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து பணியிட மாற்றம் செய்யப்படுவர்.

    டெல்லியிலும் புதுவையிலும் தியாகச்சுவர் ஒரே நாளில் திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. புதுவை சட்டப்பேரவை திட்ட மாதிரி வரைபடம் முடிக்கப்பட்டு, அடுத்த வாரம் டெல்லிக்கு அனுப்ப ப்படும். சட்டப்பேரவை கட்ட ரூ.528 கோடியாக அதிகரிக் கப்பட்டுள்ளது.

    ஓ.பி.சி. கணக்கெடுப்பு அங்கன்வாடி ஊழியர்கள் மூலமே செயல்ப டுத்தப்படும். சார்பு செயலர்கள் கோப்புகளை தயாரிக்க அதிக நேரத்தை எடுத்துக்கொள்கிறார்கள். பணியை அவர்கள் துரிதமாக செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் ரங்கசாமி உத்த ரவிட்டுள்ளார். பணி செய்யாத சில சார்பு செயலர்கள் இடமாற்றமும் செய்யப்பட்டுள்ளனர்.

    இ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறினார்.

    • அ.தி.மு.க. மாநாடு பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான அடித்தளமாக அமையும்.
    • முதல்-அமைச்சருமான ஸ்டாலின் கர்நாடக காங்கிரஸ் அரசை கேட்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக சட்டமன்றத்தில் ஜெயலலிதா தாக்கப்பட்டது உண்மை என பேசிய கவர்னர் தமிழிசைக்கு புதுவை அ.தி.மு.க. சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    மதுரையில் 20-ந் தேதி நடைபெற உள்ள அ.தி.மு.க. மாநாடு பாராளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான அடித்தளமாக அமையும்.

    சுப்ரீம்கோர்ட்டு தீர்ப்பை காலில் போட்டு மிதித்து கர்நாடகத்தில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் கட்சி தமிழகம்-புதுவைக்கு வரவேண்டிய காவிரி நீரை தடுத்து வருகின்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து கொள்கிறோம்.

    காவிரி நீர் குறித்து கூட்டணியில் உள்ள தி.மு.க. தலைவரும் தமிழக முதல்-அமைச்சருமான ஸ்டாலின் கர்நாடக காங்கிரஸ் அரசை கேட்காமல் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுகிறார். இதனால் காரைக்கால் கடைமடை பகுதி விவசாய மக்களும் பாதிக்கப்படு கின்றனர்.

    இவ்வாறு கூறினார். பேட்டியின்போது அ.தி.மு.க. இணை செயலாளர் கணேசன் உடனிருந்தார்.

    • மேலாண்மை ஆணையத்திடம் அமைச்சர் லட்சுமிநாராயணன் கோரிக்கை
    • பொதுப் பணித்துறை நீர் அளவு செய்யும் இடத்தை காரைக்கால் மண்டலத்தின் நுழைவுப்பகுதியில் மாற்ற வேண்டும்.

    புதுச்சேரி:

    காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22-வது கூட்டம் கடந்த 11-ந் தேதி டெல்லியில் நடைபெற்றது. இதில், புதுவை அரசு சார்பில் அமைச்சர் லட்சுமி நாராயணன் காணொலி வாயிலாக கலந்து கொண்டு புதுவை அரசின் பல்வேறு கோரிக்கை ளை ஆணையத்தின் முன் வைத்தார்.

    இதுகுறித்து பொதுப் பணித்துறை செயலர் மணிகண்டன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    ஜூன், ஜூலைக்கான ஒதுக்கப்பட்ட காவிரி நீர் 0.250 டி.எம்.சி-க்கு பதிலாக ஒட்டு மொத்தமாக 0.0808 டி.எம்.சியாக மட்டுமே இருந்தது. பற்றாக்குறை 0.1810 டி.எம்.சியாக இருக்கிறது. காரைக்கால் மாவட்டத்திற்கு ஆகஸ்ட்டூ மாதத்தில் நீர்வரத்து 0.0808 டி.எம்.சியாகவும், நடப்பு நீர் ஆண்டில் 0,2618 டி.எம்.சியாகவும் இருந்தது.

    ஆகஸ்ட் மாதத்திற்கான காவிரி நீர் தேவையின் அளவு 1.050 டி.எம்.சி. காரைக்கால் பகுதிக்கு கடந்த 3 நாட்களாக நீர் இருப்பு நிலை பூஜ்ஜிய மாக இருக்கிறது.

    காரைக்கால் பகுதியில் நீர் தேவையை பூர்த்தி செய்ய போதிய தண்ணீர் திறக்க மாநிலங்களுக்கு உத்தரவிட புதுவை உறுப்பினர் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திடம் கேட்டுக் கொண்டார். புதுவையில் நெல் சாகுபடியின் முக்கிய ஆதாரமாக உள்ளது. காவிரி நீரை நம்பியுள்ள விவசாயிகளுக்கு குறுவை பயிர் பருவத்திற்கு தண்ணீர் இல்லாமல் போகும். விகிதச்சார்பு பகிர்வுக்கான சூத்திரத்தை ஆணையம் புதுவை யூனி யன் பிரதேசத்துக்கு உரிய பங்களிப் புடன் உருவாக்க வேண்டும்.

    காரைக்கால் பிராந்தியத்தின் 7 டி.எம்.சி. காவிரி நீரைப் பெறு வதற்கான சரியான, உண்மையான மதிப்பீடு உறுதி

    செய்யப்பட வேண்டும்.

     எனவே மத்திய பொதுப் பணித்துறை நீர் அளவு செய்யும் இடத்தை காரைக்கால் மண்டலத்தின் நுழைவுப்பகுதியில் மாற்ற வேண்டும்.

    பேரளம் மற்றும் தென்குடி ஆகியவை முறையே கண்ணாப்பூர் மற்றும் மேலப்பொலகத்தில் புதிய இடங்களுக்கு மாற்றப்பட வேண்டும். ஆகஸ்ட் 3-வது வாரத்தில் மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பு பொறி யாளர், காவிரி மற்றும் தென் நதிகள் அமைப்பு, மத்திய நீர் ஆணையம் ஆய்வு செய்ய பரிந்து ரைத்துள்ளது.

    இதற்கு முழு ஒத்துழைப்பை அளித்து, இடமாற்றம் செய்வதற்கான செயல்முறையை விரைவுபடுத்த கேட்டுக்கொண்டுள்ளது, புதுவை அரசு காரைக்கால் பகுதிக்கு உச்சநீதிமன்ற உத்தரவின்படி போதிய அளவு தண்ணீர் வழங்கக்கோரி கேட்டுக் கொ ள் ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×