என் மலர்
புதுச்சேரி

பரிக்கல்பட்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க புதிய இயக்குனர்களுக்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். உடன் முன்னாள் எம்.எல்.ஏ.தங்க விக்ரமன் உள்ளார்.
தேர்வு செய்யப்பட்ட புதிய இயக்குனர்களுக்கு பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் பாராட்டு
- புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் சில நாட்களுக்கு முன்பு நடந்தது.
- தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்-9 பேர் குழுவாகவும்,எதிர் கட்சிகள் தரப்பில் ஒரு குழுவாவும், போட்டியிட்டனர்.
புதுச்சேரி:
பாகூரை அடுத்த பரிக்கல்பட்டு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் சில நாட்களுக்கு முன்பு நடந்தது. அதில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணை தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தங்க விக்ரமன் வழிகாட்டுதலின் பேரில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில்-9 பேர் குழுவாகவும்,எதிர் கட்சிகள் தரப்பில் ஒரு குழுவாவும், போட்டியிட்டனர்.
தேர்தலில் தங்க. விக்ரமன் சார்பில் போட்டியிட்ட கோவிந்தன், சந்திரசேகரன், சுப்ரமணி, தண்டபாணி, அபிமன்னன், தேவநாதன், புஷ்பா, ராதா, பத்மா ஆகிய 9 பேர் இயக்குநர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க இயக்குனர்கள் முன்னாள் எம்,எல்.ஏ. தங்க. விக்ரமன் தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்களான முதல்- அமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நவமச்சிவாயம், பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
சங்க இயக்குனர்களுக்கு அவர்கள் பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தனர்.






