என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதிய துணைவேந்தரை நியமிக்க வேண்டும்- பா.ம.க.வலியுறுத்தல்
    X

    கோப்பு படம்.

    புதிய துணைவேந்தரை நியமிக்க வேண்டும்- பா.ம.க.வலியுறுத்தல்

    • நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தும் துணைவேந்தர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.
    • மக்களையும் மாணவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில பா.ம.க. அமைப்பாளர் கணபதி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-.

    கடந்த 5 வருடங்களாக பல்கலைக்கழக நிர்வாகத்தில் எவ்விதமான வெளிப்படைதன்மை இல்லாமல் வழிநடத்தி லஞ்ச லாவண்ய செயல்களில் ஈடுபட்ட துணைவேந்தர் மீது மத்திய அரசு எவ்வித நடவடிக்கை எடுக்காமல், புதிய துணை வேந்தரை நியமிப்பதற்கு பதிலாக அவருக்கு பதவி நீட்டிப்பு வழங்கியது புதுச்சேரி மக்களையும் மாணவர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.பல்கலைக்கழக நிர்வாகம் முற்றிலும் சீர் குலைந்த நிலையில் உள்ளதை நிரூபிக்கும் வகையில் சென்னை உயர்நீதி மன்றம் பேராசிரியர் குர்மீத் சிங் ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்பதற்கு பூர்வாங்க ஆதாரம் இருக்கிறது என்று தீர்ப்பளித்து உள்ளது. சென்னை உயர்நீதி மன்றம் புதுவைப் பல்கலைக்கழக அதிகாரிகள் தொடர்ந்த வழக்கில் 2-ம் முறையாக துணைவேந்தர் குர்மீத் சிங் , நிதி அலுவலர் டேனியல் லாசர் மற்றும் இதர அலுவலர்கள் குற்றம் செய்ததிற்கு பூர்வாங்க ஆதாரம் சி.பி.ஐ. உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்து இருந்தும் துணைவேந்தர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை.

    மேலும் இந்த ஊழலில் ஈடுபட்ட இதர குற்றவாளிகளை கைது செய்யாமல் இருப்பது மிகுந்த வேதனையை தருகிறது.

    பேராசிரியர் குர்மீத் சிங் துணை வேந்தராக பதவி ஏற்ற வருடம் முதல் கடந்த 5 வருடங்களில் புதுவைப் பல்கலைக்கழகம் வருடந்தோறும் தேசிய அளவில் வெளியிடப்படும் தர வரிசையில் சரிவை சந்தித்த வண்ணம் இருக்கிறது. எனவே புதுவை பல்கலைக்கழகத்திற்கு புதிய துணை வேந்தரை மத்திய அரசு நியமனம் செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×