என் மலர்
புதுச்சேரி
- புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மணவெளி சட்டமன்றத் தொகுதியில் தனது ஏற்பாட்டின் பேரில் அனைத்து வீடுகளுக்கும் தேசிய கொடியை வழங்கினார்.
- புதுக்குப்பம் கிராம பஞ்சாயத்தார் மணவெளி பகுதி கலைவாணன், தங்கதுரை மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
இந்திய திருநாட்டின் 75-வது சுதந்திர ஆண்டு அமுதப் பெருவிழா நிறைவை முன்னிட்டும் 76 -ம் ஆண்டு சுதந்திர தினத்தை போற்றும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட தியாகிகளை போற்றும் வகையிலும் சுதந்திர திருநாளை அனைவரும் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக்கொ ண்டுள்ளார்.
மேலும் இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்றும் இயக்கத்தை தொடங்கி வைத்து அனைவர் இல்லங்களிலும் இன்று முதல் 15-ந் தேதி வரை தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை ஏற்று புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் மணவெளி சட்டமன்றத் தொகுதியில் தனது ஏற்பாட்டின் பேரில் அனைத்து வீடுகளுக்கும் தேசிய கொடியை வழங்கினார்.
புதுக்குப்பம் பகுதியில் தேசிய கொடியை ஏற்றி வைத்து அனைத்து வீடுகளுக்கும் தேசியக் கொடியை வழங்கி அவரே தேசியக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து மணவெளி பகுதியில் தேசியக் கொடியை ஏற்றி வீடுகளுக்கு தேசிய கொடி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் பா.ஜனதா தொகுதி தலைவர் லட்சுமி காந்தன் கூட்டுறவு கடன் வழங்கும் சங்க தலைவர் தட்சிணா மூர்த்தி, புதுக்குப்பம் கிராம பஞ்சாயத்தார் மணவெளி பகுதி கலைவாணன், தங்கதுரை மற்றும் இளைஞர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து அவர்களது சட்டைப்பையில் சோதனை நடத்தினர்.
- போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ஆனாலும் கஞ்சா விற்பனையை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை. புற்றீசல் போல ஆங்காங்கே கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இந்த நிலையில் ரெட்டியார் பாளையம் கம்பன் நகர் சந்திப்பில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து அவர்களது சட்டைப்பையில் சோதனை நடத்தினர்.
அவர்களது சட்டைப்பையில் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது. மொத்தம் 300 கிராம் கஞ்சாவை அவர்கள் பதுக்கி வைத்திருந்தனர். விசாரணையில் அவர்கள் உழவர்கரை வயல்வெளி தெருவை சேர்ந்த லெனின் பிஷப் (21) மற்றும் ரெட்டியார் பாளையம் கம்பன் நகரை சேர்ந்த ஹரீஷ் (22) என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சாவை விற்று வந்துள்ளனர். இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- பல்வேறு அரசியல் அமைப்பினர், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்
- சாதாரணமாக நடமாடும் நாய், பூனை, எலிகளை ஆஸ்பத்திரி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும்
புதுச்சேரி:
காரைக்கால் நகரின் மையப் பகுதியில் அரசு ஆஸ்பத்திரி இயங்கி வருகிறது. இந்த ஆஸ்பத்திரி கடந்த பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் இயங்கி வருவதாக பல்வேறு அரசியல் அமைப்பினர், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். சாதாரண ஜுரம், விபத்து என சென்றால்கூட, அண்டை மாநிலங்களுக்கு டாக்டர்கள் பரிந்துரை செய்யும் அவல நிலை உள்ளது. இந்நிலையில், அண்மையில் அரசு ஆஸ்பத்திரியின் உள்ள லிப்ட் உடைந்த நிலையில் உள்ளது.
கடந்த சில நாட்களாக நகரின் பல இடங்களில் சுற்றித்திரிந்த நாய்களின் கூட்டம், ஆஸ்பத்திரியில் உள்ளே குறிப்பாக பிரசவ பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, குழந்தைகள் பிரிவு உள்ளிட்ட பல இடங்களில் சர்வ சாதாரணமாக சுற்றித் திரிவதால், நோயாளிகள் இடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் பெருச்சாளி மற்றும் பூனைகள் பாதுகாக்கப்பட்ட அறுவை சிகிச்சை கூடம், மருந்தகம், கேண்டின் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பகலில் கூட நடமாடுவதால் நோயாளிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர். எனவே ஆஸ்பத்திரியில் சர்வ சாதாரணமாக நடமாடும் நாய், பூனை, எலிகளை ஆஸ்பத்திரி நிர்வாகம் கட்டுப்படுத்த வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- கணவர்-மாமனார் மீது புகார்
- மது குடித்து விட்டு வந்து கூடுதல் வரதட்சணை கேட்டு தனலட்சுமியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை புது சாரம் வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் புதுவை விமான நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தனலட்சுமி 28. இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமண த்திற்கு பிறகு தனலட்சுமிக்கு அவரது பெற்றோர் 10 பவுன் நகை சீர் செய்தனர்.
திருமணம் செய்த 3 மாதத்திலேயே கார்த்தி கேயன் மது குடித்து விட்டு வந்து கூடுதல் வரதட்சணை கேட்டு தனலட்சுமியை சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இதற்கு கார்த்திகேயனின் தந்தை சுந்தர் கணேஷ். சகோதரி அனிதா அவரது கணவர் அருண்குமார் மற்றும் கார்த்திகேயனின் சகோதரர் ஜெகதீஸ்வரன் ஆகியோரும் உடந்தையாக இருந்து அவர்களும் தனலட்சுமியை கொடுமை செய்து வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே த னலட்சுமிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அப்போது அந்த குழந்தைக்கு 2 பவுன் சீர் செய்ய வேண்டும் என்று கார்த்திகேயன் மற்றும் அவரது குடும்பத்தினர் வற்புறுத்தினர். ஆனால் குடும்ப கஷ்டம் காரணமாக தனலட்சுமியின் பெற்றோர் ஒரு பவுன் மட்டுமே குழந்தைக்கு சீர் செய்தனர்.
அப்போது தனலட்சு மியை அவரது பெற்றோர் முன்னிலை யிலேயே கார்த்திகேயன் மற்றும் அவரது குடும்ப த்தினர் குழந்தைக்கு கேட்ட படி சீர் செய்ய வில்லை என்று கூறி அடித்து உதை த்து சித்ரவதை செய்தனர்.
மேலும் தனலட்சுமியிடம் இருந்து குழந்தையை பறித்து சென்னையில் வசிக்கும் கார்த்திகேயனின் சகோதரி அனிதா தன் வசம் வைத்துக்கொண்டார். குழந்தையை பார்க்க வேண்டும் என்று தனலட்சுமி பல முறை வர்புறுத்திய போதும் அனுமதிக்க வில்லை. இதையடுத்து தனலட்சுமி தனக்கு இழைக்க ப்பட்ட வரதட்சணை கொடுமை மற்றும் குழந்தையை பறித்துக் கொண்டதை குறித்து தனது கணவர்-மாமனார், நாத்தனார்மற்றும் அவரது கணவர், கணவரின் சகோதரர்ஆகிய 5 பேர் மீது வில்லியனூர் அனைத்து மகளீர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மாநில தலைவர் சாமிநாதன் வழங்கினார்
- அனைத்து மாநிலங்களிலும் தேசியக்கொடிகளை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
புதுச்சேரி:
76-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகள் தோறும் அனைத்து மாநிலங்களிலும் தேசியக்கொடிகளை ஏற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் மாநில மாவட்ட தொகுதி நிர்வாகிகளுக்கு தேசியக் கொடிகள் வழங்கும் நிகழ்ச்சி பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
பா.ஜனதா மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன், எம்.எல்.ஏ. வி.பி. ராமலிங்கம் பொதுச் செயலாளர் மோகன் குமார் துணைத்தலைவர் தங்க விக்ரமன் மாநில செயலாளர் நாகராஜ் முன்னாள் தலைவர் இளங்கோவன் அலுவலக பொறுப்பாளர் மகேஷ் அலுவலக செயலாளர் கவுரிசங்கர் உள்ளிட்டோர் நிர்வாகிகளுக்கு தேசிய கொடிகளை வழங்கினர்.
தேசிய கொடிகளை உழவர் கரை மாவட்ட தலைவர் நாகேஸ்வரன், பட்டியல் அணி மாநில தலைவர் தமிழ்மாறன், சமூக ஊடகப்பிரிவு அமைப்பாளர்கள் கார்த்தி கேயன், குருசங்கரன் மற்றும் மாநிலத்தின் பல்வேறு நிர்வாகிகள் பெற்றுக் கொண்டனர்.
- கடுப்பான போலீசார் அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
- மணிகண்டன் மீது ஆயுதங்கள் வைத்து ரகளையில் ஈடுபட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி:
திண்டிவனம் ஏரிக்கரையோரம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் தனது 6 நண்பர்களுடன் புதுச்சேரி எல்லை பகுதியான சேதராப்பட்டில் உள்ள மதுபானக் கடையில் மது அருந்தியுள்ளனர்.
அப்போது உச்சகட்ட மது போதையில் நண்பர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் மணிகண்டன் தன்னுடன் வந்த நண்பர்களை விரட்டி, விரட்டி சரமாரியாக தாக்கினார். இதனால் அவருடன் வந்த 2 பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். ஒருவர் மணிகண்டனிடம் வசமாக சிக்கிக்கொண்டார். அவரை மணிகண்டன் பீர் பாட்டிலால் தலையில் தாக்கினார்.
அடி வாங்கிய நண்பர் அவரை விட்டு செல்லாமல் வாடா பிரச்னை ஆகப்போகுது எனக்கூறி அழைத்து செல்கிறார். பின்னர் மணிகண்டன் தன் சட்டையை கழற்றி நண்பரின் தலையில் அமுக்கி அழைத்து செல்கிறார்.
இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கே மதுபானம் அருந்தி கொண்டிருந்தவர்களை பார்த்து சண்டைக்கு வாடா.. நீ வேண்ணுனா.. வந்து பார்ரா என அவ்வழியே செல்பவர்களை வடிவேலு பாணியில் அழைத்தவாறு ஆபாச வார்த்தைகளால் அர்சித்தவாறு சென்றனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் சேதராப்பட்டு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மது போதையில் ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்த மணிகண்டனை போலீஸ் நிலையத்துக்கு வருமாறு அழைத்தனர்.
நீங்கள் காக்கி சட்டை அணிந்திருக்கிறீர்கள், எந்த கம்பெனி செக்யூரிட்டி? எனக்கூறி தொப்பியை தட்டு விட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் நான் யாருனு தெரியுமா? என போலீசாரை தள்ளிவிட்டுள்ளார். இதில் கடுப்பான போலீசார் அவரை கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது.
மேலும் அவரிடம் அடி வாங்கி ஓட்டம் பிடித்த நண்பர்கள் யாரும் புகார் கொடுக்க முன்வரவில்லை. போலீஸ் நிலையத்தில் வைத்து, மணிகண்டனிடம், வந்த இடத்தில் ஒழுங்கா குடி, இல்லாவிட்டால் தர்ம அடிதான் என அறிவுரை வழங்கினர். தொடர்ந்து மணிகண்டன் மீது ஆயுதங்கள் வைத்து ரகளையில் ஈடுபட்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
- விபத்தில் காரில் வந்த கணபதி, வாசிம் முசரப்,மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர்.
- விபத்தில் 3பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்கால்:
புதுவை மாநிலம் காரைக்கால் நகரை சேர்ந்தவர்கள் அருண், சரவணன், கணபதி (வயது 25), வாசிம் முசரப் (22). இவர்கள் காரைக்கால் அடுத்த தமிழகபகுதியான மயிலாடுதுறைக்கு காரில் திரைப்படம் பார்ப்பதற்காக சென்றனர்.
திரைப்படம் பார்த்துவிட்டு காரில் காரைக்காலில் உள்ள அவர்களது வீட்டிற்கு திரும்பினர். இன்று காலை காரைக்கால் கோட்டுச்சேரி அருகே கார் வந்த போது கார் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது வேகமாக மோதியது. மோதிய வேகத்தில் அருகில் இருந்த வாய்காலில் தலைக்குப்புற கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காரில் வந்த கணபதி, வாசிம் முசரப்,மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த செல்வம் ஆகியோர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தனர். இதைபார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் காரில் சிக்கிகொண்டு படுகாயம் அடைந்த அருண், சரவணனை மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் விபத்தில் உயிரிழந்த கணபதி, வாசிம் முசரப், செல்வம் ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் 3பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
- குடிநீர் பிரிவு மூலம் ரூ.11 லட்சத்து 30 ஆயிரம் செலவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.
புதுச்சேரி:
வில்லியனூர் கொம்பாக்கம்பேட், மாதா கோவில் வீதியில் பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டத்தின் குடிநீர் பிரிவு மூலம் ரூ.11 லட்சத்து 30 ஆயிரம் செலவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.
இந்த பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதேபோல், கொம்பாக்கம் வார்டுக்குட்பட்ட முத்துக்குமரன் நகர், சத்குரு நகர், ஜெயகணபதி நகர் மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் பொதுப்பணி த்துறை பொது சுகாதாரக் கோட்டம் மூலம் ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியினையும் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சிகளில் பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்ட உதவிப் பொறியாளர் வாசு, இளநிலைப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், மற்றும் தி.மு.க. தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோமசுந்தரம், செல்வநாதன், தர்மராஜ், தொகுதி துணைச் செயலா ளர்கள் ஜெகன்மோகன், ஹரி கிருஷ்ணன், பொருளாளர் கந்தசாமி, ம.தி.மு.க. மாநில செயலாளர் கபிரியேல், கம்யூனிஸ்ட்டு அந்தோணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஜான்குமார் எம்.எல்.ஏ. பங்கேற்பு
- நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 50பேர் தூய்மை பணியினை மேற்கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவ கவுண்டன்பாளை யம் முத்து ரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் குளம், ஏரி, இயற்கைச் சார்ந்த பகுதிகளில் தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் 6-வது வாரமாக சாரம் ஞானபிரகாசம் நகர் எஸ்.ஆர்.எஸ் குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் தூய்மைப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்த னன் தலைமை தாங்கினார்.
முதல்-அமைச்சரின் பாராளுமன்ற செயலர் ஜான் குமார் எம்.எல்.ஏ. தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சியிணை தொடங்கி வைத்தார்.
இதில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் 50பேர் தூய்மை பணியினை மேற்கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியை புதுவை மாநில கோஜிரியோ கராத்தே சங்கத்தின் பொதுச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் வழி நடத்தினார். சிறப்பு விருந்தி னராக குளங்கள் காப்போம் குழுவின் தலைவர் கார்த்தி கேயன் கலந்துகொண்டு நாட்டு நல பணித்திட்ட மாணவர்களை ஊக்கப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சியில் விரிவு ரையாளர் நெடுஞ்செழியன் உடன் இருந்தார். நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி யின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் விரிவு ரையாளர் ஜெயந்தி சிறப்பாக செய்திருந்தார்.
- கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- புதுச்சேரி நகராட்சி மூலம் உட்புற சிமெண்ட் சாலைகள் அமைக்கப்படுகிறது.
புதுச்சேரி:
உப்பளம் ெதாகுதி வாணரப்பேட்டை ஈஸ்வரன் கோவில் தோப்பு பகுதியில் எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியின் கீழ் 21 லட்சம் மதிப்பீட்டில் புதுச்சேரி நகராட்சி மூலம் உட்புற சிமெண்ட் சாலைகள் அமைக்கப்படுகிறது.
இப்பணியினை தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி பூமி பூஜைசெய்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் சிவ பாலன் , உதவி பொறியாளர் யுவராஜ், பரமானந்தன், பொதுப்பணித்துறை கணேசன் , தி.மு.க. தொகுதி அவைத்தலைவர் அரிகிருஷ்ணன், தொகுதி செயலாளர் சக்திவேல், துணைத் செயலாளர் ஆரோக்கியராஜ், மாநில பிரதிநிதி கணேசன், மாநில மீனவர் அணி துணை அமைப்பாளர் விநாயகமூர்த்தி, கிளை செயலாளர்கள் சந்துரு, காளப்பன் , மணி, பிரபாகரன், ராகேஷ், மகளிர் அணி குணசுந்தரி, மற்றும் ரகுராமன்,பஸ்கல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- ஆகஸ்டு மாத நீர்த்தேவையின் அளவு 1.050 டி.எம்.சி. ஆகும். ஆனால் இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை.
- மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பு பொறியாளர், காவிரி மற்றும் தென் நதிகள் அமைப்பு ஆய்வு செய்து பரிந்துரைத்துள்ளது.
புதுச்சேரி:
காவிரி ஆணைய கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதுவை பொதுப்பணித்துறை செயலாளர் மணிகண்டன், தலைமை பொறியாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் புதுவை அரசு சார்பில் அவர்கள் வலியுறுத்தி பேசியதாவது:-
ஜூன், ஜூலை மாதத்துக்கான காவிரி நீர் ஒதுக்கப்பட்ட 0.250 டி.எம்.சி.க்கு பதிலாக கடந்த மாதம் 31-ந் தேதி வரை ஒட்டு மொத்தமாக 0.181 டி.எம்.சி. மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை 0.0690 டி.எம்.சி. ஆகும்.
ஆகஸ்டு மாத நீர்த்தேவையின் அளவு 1.050 டி.எம்.சி. ஆகும். ஆனால் இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை.
காரைக்கால் பகுதியின் தேவையை பூர்த்தி செய்ய போதிய தண்ணீரை திறக்க கர்நாடக மாநிலத்திற்கு உத்தர விடவேண்டும். காரைக்கால்பகுதி புதுவையின் நெல் சாகுபடிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
தற்போது காவிரி நீரை நம்பியுள்ள விவசாயிகளுக்கு குறுவை பயிர் பருவத்துக்கு தண்ணீர் இல்லாமல் போகும் நிலை உள்ளது.
காரைக்கால் பிராந்தியத்திற்கு காவிரி நீரை பெறுவதற்கான உண்மையான மதிப்பீட்டை உறுதி செய்வதற்காக தண்ணீரை அளவிடும் அமைப்பினை காரைக்கால் மண்டலத்தின் நுழைவுப் பகுதியில் மாற்றியமைக்க வேண்டும்.
அதாவது பேரளம் மற்றும் தென்குடி ஆகியவை முறையே கண்ணாப்பூர் மற்றும் மேலப் போலகத்தில் புதிய இடங்களுக்கு மாற்ற மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பு பொறியாளர், காவிரி மற்றும் தென் நதிகள் அமைப்பு ஆய்வு செய்து பரிந்துரைத்துள்ளது.
புதுவை தள அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படும் நிலத்தை இறுதி செய்ய புதுச்சேரி முழு ஒத்துழைப்பை அளிக்கும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி போதிய அளவு தண்ணீர் வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினார்கள்.
தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், புதுவை அதிகாரிகள் கூட்டத்தில் முடியும் வரை பங்கேற்றனர்.
- சைபர் கிரைம் போலீசார் அவரை கைதுசெய்தனர்.
- இல்லா விட்டால் இந்த படங்களை இணைய தளத்தில் வெளி யிட்டு விடுவதாக குறிப்பிடப்பட்டி ருந்தது.
புதுச்சேரி:
புதுவையை சேர்ந்த 4 பெண்களுக்கு வாட்ஸ்அப்பில் ஒரு படம் வந்திருந்தது.
அதில் அவர்களின் முகத்தை மார்பிங் செய்து அவர்கள் நிர்வாணமாக இருப்பதுபோல படம் இருந்தது.
அதற்கு கீழ் ஒரு எண்ணை குறிப்பிட்டு, இந்த எண்ணில் வீடியோகாலில் நிர்வாண மாக வர வேண்டும். இல்லா விட்டால் இந்த படங்களை இணைய தளத்தில் வெளியிட்டு விடுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து 4 பெண்களும் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர். புகாரின்பேரில் போலீசார் அந்த எண்ணை வைத்து விசாரித்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தை சேர்ந்த விக்னேஷ் (வயது24) என தெரியவந்தது.
இவர் மெக்கானிக்கல் என்ஜினியர். இவர் திருமணமாகி மனைவி பிரசவத்திற்காக தாய் வீட்டுக்கு சென்றுள்ளது தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் அவரை கைதுசெய்தனர்.






