என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி வேண்டுகோள்
    • தேசியக்கொடியை கவுரவிக்கும் வகையில் தேசம் போற்றுவோம், வீடு தோறும் தேசியக்கொடியை ஏற்றுவோம் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    புதுவை மாநிலத்தில் நாட்டின் அடையாளமாக விளங்கும் தேசியக்கொடியை கவுரவிக்கும் வகையில் தேசம் போற்றுவோம், வீடு தோறும் தேசியக்கொடியை ஏற்றுவோம் நிகழ்ச்சி கொண்டாடப்படுகிறது. வருகிற சுதந்திர தினத்தை யொட்டி மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் நாளை 13-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை தேசியக் கொடியை பொதுமக்கள் ஏற்ற வேண்டும்.

    அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் தங்கள் டுவிட்டர் உட்பட சமூக வலைதளங்கள் வாயிலாக வீடுகள்தோறும் தேசியக்கொடி ஏற்றுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • புதிய திருத்தத்தின்படி புகார் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி மத்திய கல்வி அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்ப ட்டுள்ளது.
    • நம்பிக்கை மோசடி, போலி ஆவணம் தாக்கல் செய்தல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு ப்பதிவு செய்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக்கழகத்தில் மனிதவள மேம்பாட்டு மைய பொறுப்பு இயக்கு னராக 2008-16-ம் ஆண்டு பேராசிரியர் ஹரிகரன் பணிபுரிந்தார்.

    இவர் பேராசிரியர், பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளித்தது தொடர்பாக போலி ரசீது மூலம் கணக்கு காட்டி ரூ.2.25 கோடி மோசடி செய்தார். இவரை காப்பாற்ற துணைவேந்தர் குர்மீத்சிங் ரூ.50 லட்சம் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதுகுறித்து சென்னை சி.பி.ஐ. அதிகாரிகளிடம் 2 புகார்கள் அளிக்கப்பட்டது. புதுவை மாநில ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி ஆனந்த் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தது.

    அப்போது சி.பி.ஐ. தரப்பில் அரசு சிறப்பு வக்கீல் சீனிவாசன் ஆஜரானார். அப்போது ஊழல் தடுப்பு சட்டத்தில் கொண்டுவரப்பட்ட புதிய திருத்தத்தின்படி புகார் மீது வழக்குப்பதிவு செய்ய அனுமதி கோரி மத்திய கல்வி அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பப்ப ட்டுள்ளது.

    பல்கலைக்கழகம் சார்பிலும் பேராசிரியர் மீதான புகார் குறித்து விசாரிக்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. நீதிபதி, ஊழல் புகாரில் சிக்கியவ ர்களை காப்பாற்ற முயற்சி ப்பதை ஏற்க முடியாது. துணைவேந்தர் மற்றும் பேராசிரியர் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்கு ப்பதிந்து விசாரிக்கலாம் என உத்தரவிட்டார்.

    இதையடுத்து சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை தீவிரமடைந்தது. பல்கலைக்கழக நிதி பொறுப்பு அதிகாரி லாசர் தணிக்கை அறிக்கை சமர்பித்துள்ளார். அதில் ஹரிகரன் ரூ.27 லட்சம் போலி ரசீது தாக்கல் செய்து ள்ளதாக கூறியுள்ளார்.

    இதையடுத்து சி.பி.ஐ. அதிகாரிகள் தற்போது ஹரிகரன் மீது நம்பிக்கை மோசடி, போலி ஆவணம் தாக்கல் செய்தல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு ப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த வழக்கில் துணைவேந்தரை சேர்ப்பது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து வருகின்றனர்.

    • வாலிபால் போட்டிக்கான பரிசுத்தொகை முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.9 ஆயிரம் , த்ரோபால் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
    • ரூ.5 லட்சமும், த்ரோபால் விளையாட்டுப் போட்டியில் முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ஊசுடு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கூடப்பாக்கம் குலோத்துங்க சோழன் விளையாட்டு திடலில் ஈஷா புத்துணர்வு கோப்பை வாலிபால் போட்டி தொடக்க விழா நடைபெற்றது.

      இதில் குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் கலந்துகொண்டு வாலிபால் போட்டியினை தொடங்கி வைத்தார். பாஜனதா தொகுதி தலைவர் தியாகராஜன், குலோதுங்க சோழன் விளையாட்டு கழக தலைவர் தலைவர் அய்யனார் முன்னிலை வகித்தார்.

    இந்நிகழ்ச்சியில் கேப்டன் ராமதாஸ் உட்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள், கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    முதல் கட்ட வாலிபால் போட்டிக்கான பரிசுத்தொகை முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.9 ஆயிரம் , த்ரோபால் போட்டியில் முதலிடம் பிடிக்கும் அணிக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    வாலிபால் இறுதிப்போட்டியில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.5 லட்சமும், த்ரோபால் விளையாட்டுப் போட்டியில் முதல் பரிசு பெறும் அணிக்கு ரூ.2 லட்சமும் வழங்கப்படுகிறது.

    நிகழ்ச்சியினை ஈஷா கணேசன் ஒருங்கிணைத்தார். நிகழ்ச்சிக் கான ஏற்பாட்டினை ஈஷா நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

    • பாசிக் ஊழியர்கள் தட்டாஞ்சாவடி பாசிக் தலைமை அலுவலகம் எதிரில் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
    • , ரஜினிகாந்த், ராஜீவ்காந்தி, கிருஷ்ண மூர்த்தி, பாண்டு மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    பாசிக் தொழிலாளர்க ளுக்கு வழங்கவேண்டிய 116 மாத நிலுவை சம்பளத்தை வழங்க வேண்டும். ஊழியர்க ளுக்கு மாதம்தோறும் தொடர்ந்து சம்பளத்தை வழங்க வேண்டும். தினக்கூலி ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். 6-வது ஊழியக்குழு பரிந்துரைபடி அனைத்து ஊழியர்களுக்கும் விடுபட்ட சம்பளத்தை வழங்க வேண்டும் எனக்கோரி ஏ.ஐ.டி.யூ.சி. பாசிக் ஊழியர்கள் தட்டாஞ்சாவடி பாசிக் தலைமை அலுவலகம் எதிரில் தொடர் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    இன்று 100-வது நாளாக பாசிக் ஊழியர்களின் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு பாசிக் ஊழியர்கள் முன்னேற்ற சங்க தலைவர் ரமேஷ், செயலாளர் முத்துராமன், பொருளாளர் தரணிராஜன் ஆகியோர் தலைமை வகித்தனர். ஏ.ஐ.டி.யு.சி. மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் முன்னிலை வகித்தார். ஏ.ஐ.டி.யூ.சி.மாநில பொருளாளர் அந்தோணி, துணைத்தலை வர்கள் சந்திரசேகர், சேகர், மாநில செயலாளர் துரை செல்வம், தயாளன், மூர்த்தி, பாஸ்கர பாண்டியன், மாநில நிர்வாக குழு உறுப்பி னர்கள் பூபதி, ஜீவானந்தம், சண்முகம், மாரிமுத்து, பாசிக் சங்க நிர்வாகிகள் மூர்த்தி,கோவிந்தராசு, மணிக்கண்ணன், ராஜி, முருகன், தங்கமணி, குண சீலன், ராஜா, கண்ணம்மா, பாலமுருகன், ரஜினிகாந்த், ராஜீவ்காந்தி, கிருஷ்ண மூர்த்தி, பாண்டு மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • சிவசங்கர் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
    • முதன்மை துணைத் தலைவர் சீனுவாசன், பொதுச் செயலாளர் முருக பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பு சார்பில் மேட்டுப்பாளையம் பழைய இந்தியன் வங்கி எதிரே உள்ள சேம்பர் ஆப் காமர்ஸ் கட்டிடத்தில் சரக்கு மற்றும் சேவை வரி

    (ஜி.எஸ்.டி.) சம்பந்தமான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

    இதில் புதுச்சேரி வணிகர் கூட்டமைப்பின் பெருந்தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டமைப்பு தலைவர் பாபு, முதன்மை துணைத் தலைவர் சீனுவாசன், பொதுச் செயலாளர் முருக பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆலோசனைக் கூட்டத்தில், முன்னாள் வணிகவரித் துறை துணை ஆணையர் ஸ்ரீதர், வணிகவரித்துறை அதிகாரி பாலமுருகன் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் இந்தியன் வங்கியின் புதுவை மண்டல முதன்மை மேலாளர் (கடன் பிரிவு) ராதாகிருஷ்ணன், மேட்டுப்பாளையம் கிளைமேலாளர் ஹேம்கிருஷ்ணா பாஸ்கர்ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு வங்கி சம்பந்தமான கடன்களையும் 2 ஆண்டுகள் சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) செலுத்தியிருந்தால் இந்தியன் வங்கி சார்பில் ரூ.25 லட்சம் வரை எந்தவித பிணை இல்லாமல் கடன் வழங்கும் என விளக்கினர். 

    • சி.பி.ஐ. இயக்குனருக்கு வையாபுரி மணிகண்டன் கடிதம்
    • சென்டாக் கலந்தாய்வு நடத்தும் அதிகாரிகளும் இணைந்து மருத்துவ கல்லூரி இடங்களை முறைகேடாக அபகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் டெல்லி சி.பி.ஐ. இயக்குனருக்கு அனுப்பி யுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் மருத்துவக்கல்லூரி இடங்களை பெறுவதில் பெரிய மோசடிகளும், முறைகேடுகளும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. ஆட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள வர்களும், அவர்களுக்கு கைக்கூலியாக செயல்படும் சில அரசியல்வாதிகளும், சென்டாக் கலந்தாய்வு நடத்தும் அதிகாரிகளும் இணைந்து மருத்துவ கல்லூரி இடங்களை முறைகேடாக அபகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது.

    வருவாய் சான்றிதழ், ஜாதி சான்றிதழ், குடியிருப்பு சான்றிதழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பி னருக்கான சான்றிதழ், மத்திய அரசு அலுவலக பணியிட மாற்று சான்றிதழ் என பல போலி சான்றிதழ்களை கொடுத்து மருத்துவ இடங்களை அபகரிக்கின்றனர். மருத்துவ கல்லூரி இடங்களை வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு பெற்றுத்தருவதில் ஊழல், முறைகேடுகள் நடக்கிறது.

    சட்ட விதிகளின்படி புதுவை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவ இடங்கள் சிலரின் சுயலாப நோக்கால் தட்டிப்பறிக்கப்படுகிறது. எனவே புதுவையில் நடைபெறும் இந்த மாபெரும் ஊழல், முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ. முழுமையான விசாரணை நடத்த வேண்டும்.

    மாணவர்களுக்கு போலியாக சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள், அதிகாரிகளுக்கு துணை செல்லும் ஆட்சியாளர்கள், இடைத்தரகர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • ஆணைய தலைவர் அறிவுறுத்தல்
    • பல்வேறு அமைப்புகளின் ஆலோசனை, கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் சசிதரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    புதுவையில் அனைத்து பிரிவினருக்கும் தகுந்த அரசியல் பிரதிநிதித்துவம் அளிக்க சுப்ரீம்கோர்ட் அறிவுறுத்தலின்பேரில் புதுவை அரசு ஆணையம் அமைத்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு எந்த விகிதத்தில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் பல்வேறு அமைப்புகளின் ஆலோசனை, கருத்துக்கள் பெறப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையின் கீழ் உள்ள அங்கன்வாடி ஊழியர்கள் மூலம் வீடுதோறும் சென்று தகவல், தரவுகள் சேகரிக்கப்பட உள்ளது. வீடு தேடி ரும் கணக்கெடுப்பாளர்களிடம் பொதுமக்கள் தேவையான தகவல்களை அளித்து ஒத்துழைப்பு தர வேண்டும். இதன் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட சமுதாய அரசியல் பங்கேற்பு, பிரதிநிதித்துவம் குறித்து ஆணையம் பரிந்துரைக்க உள்ளது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • முன்னாள் எம்.பி ராமதாஸ் கடும் தாக்கு
    • மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் அல்லது இப்பணியில் ஏற்கனவே ஈடுபட்ட பன்னீர்செல்வம் குழுவிடம் அளித்திருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் உள்ளாட்சி தேர்தலுக்காக தேவைப்படும் பிற்படுத்தப்பட்டோர் புள்ளி விபரத்தை சேகரிக்க அங்கன்வாடி ஊழியர்களை நியமித்துள்ளனர்.

    இது உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் ஒரு யுக்தியாகவும், தவறான அணுகுமுறையாகவும் உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்க என்ன காரணங்களை கண்டறிய முடியுமோ, அதை கண்டுபிடித்து அதன்மூலம் தேர்தலை தள்ளி போடு வதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மிக திறமை யானவர். இந்த கணக்கெடுப்பு நடத்துவது அவசியமானது.

    இப்பணியை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் அல்லது இப்பணியில் ஏற்கனவே ஈடுபட்ட பன்னீர்செல்வம் குழுவிடம் அளித்திருக்க வேண்டும்.

    3 மாதத்தில் இப்பணியை செய்திருக்கலாம். ஆனால் முதல்-அமைச்சர் தனி நபர் ஆணையத்தை அமைத்து உள்ளாட்சிகளில் 33.5 சதவீதத்தை பிற்படுத்த ப்பட்டோருக்கு அளித்து அறிக்கையை 6 மாதத்தில் அளிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தனி நபர் ஆணையம் 13 மாதத்திற்கு பிறகு வீடு, வீடாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எல்லோ ருக்கும் தெரிந்த விஷயத்தை அறிவித்து ள்ளது.

    இப்போது 20 மாதத்திற்கு பிறகு அங்கன்வாடி ஊழியர்களால் பணி தொடங்கப்படுகிறது. இந்த பணி முடிவடைய இன்னும் 15 மாதங்களாகும். எனவே உள்ளாட்சிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்யும் பணி இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளாகும். அதுவரை உள்ளாட்சி தேர்தல் நடக்காது என்பதை முதல்-அமைச்சர் மகிழ்ச்சியோடு உறுதி செய்துள்ளார். பிரதமர் சொன்னாலும், இங்கே தேர்தல் நடத்தாமல், முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்த்துக்கொள்வார். இது அவரின் தலையாய அரசியல் கடமை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவை மாநில விளையாட்டு கவுன்சில், ராஜீவ்காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி ஆகியவற்றை தொடர்ந்து நடத்த வேண்டும்.
    • விளையாட்டு வீரர்களுக்கும் சமமான இட ஒதுக்கீடு வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புதுவை அரசு தொடர்ந்து விளையாட்டு வீரர்களை புறக்கணித்து வருகிறது.

    புதுவை விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கல்வித்துறையில் இருந்து விளையாட்டை தனியாக பிரித்து விளையாட்டிற்கு தனி இயக்குனரகம் அமைப்பது, ஏற்கனவே பலமுறை சட்டசபை கூட்டத் தொடரில் விளையாட்டிற்கு தனி இயக்குனரகம் அமைப்போம் என்று அறிவித்துவிட்டு விளையாட்டு வீரர்களை பல வருடங்களாக புதுவை அரசு ஏமாற்றி வருகிறது.

    அதேபோல் தனியாக விளையாட்டு வீரர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு இலவச பஸ் பாஸ், இலவச இன்சூரன்ஸ், இலவச விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை புதுச்சேரி அரசு உடனே வழங்க வேண்டும்.

    புதுவை மாநில விளையாட்டு கவுன்சில், ராஜீவ்காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி ஆகியவற்றை தொடர்ந்து நடத்த வேண்டும்.

    மாநில விளையாட்டு கவுன்சிலில் ஊழல் செய்த அதிகாரி களை உடனடியாக பணி நீக்கம் செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக ஏற்படுத்தப்பட்ட புதுச்சேரி விளை யாட்டு வளர்ச்சி ஆணையத்தை கலைக்க வேண்டும். காரைக்கால், மாகி, யானம் ஆகிய பகுதிகளில் மண்டல விளையாட்டு கவுன்சில் ஏற்படுத்த வேண்டும். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகை, ஊக்கத்தொகை மற்றும் விளையாட்டு சங்கங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகள் ஆகியவற்றை கால தாமதம் இன்றி உடனடியாக வழங்க வேண்டும்.

    கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அனைத்து பிரிவு விளையாட்டு வீரர்களுக்கும் சமமான இட ஒதுக்கீடு வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • கென்னடி எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்
    • செயற்பொறியளர் சிவபாலன், உதவி பொறி யாளர் யுவராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவையில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவின் ஒரு அங்கமாக என்னுடைய மண், என்னுடைய தேசம் என்ற நிகழ்ச்சி கம்பன் கலையரங்கத்தில் நடந்தது.

    உப்பளம் தொகுதி கென்னடி எம்.எல்.ஏ. நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    பின்னர் சுதந்திர வீரர்களை நினைவு கூறும் வகையில் அவர்களின் தியாகத்தைப் பற்றி பேசினார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் சிவகுமார், டாக்டர் துளசிராமன், செயற்பொறியளர் சிவபாலன், உதவி பொறி யாளர் யுவராஜ், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மேலாண்மை கணக்காளர் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்
    • கல்லுாரி நிறுவனமும் முழு ஒத்துழைபபை அளிக்க வேண்டும்

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் கல்லுாரியின் வணிகவியல் துறை மாணவர்கள், பட்டயக் கணக்காளர் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் வணிகவியல் துறை முதலாமாண்டு மாணவர்கள் இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம் நடத்திய பட்டயக் கணக்காளர் மற்றும் சான்றளிக்கப்பட்ட மேலாண்மை கணக்காளர் முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர்

    பட்டயக் கணக்காளர் (சி.ஏ ) தேர்வில் வெற்றி பெற மாணவர்கள் முழு ஆற்றலை கொண்டு உழைப்பதுடன் அதற்கு கல்லுாரி நிறுவனமும் முழு ஒத்துழைபபை அளிக்க வேண்டும்.

    அதன்படி மணக்குள விநாயகா கல்விக் குழுமம், சென்னை ஹயக்கிரீவர் கல்வி நிறுவனத்துடன் இணைந்து வணிகவியல் துறை மாணவர்களை பட்டயக் கணக்காளர் தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற செயதுள்ளது.

    வெற்றி பெற்ற மாணவர்கள் மணக்குள விநாயகா கல்வி அறக்கட்டளையின் தலைவர் தனசேகரன் துணைத் தலைவர் சுகுமாறன் செயலாளர் நாராயணசாமி பொருளாளர் ராஜராஜன் கல்லுாரியின் இயக்குனர் வெங்கடாசலபதி கலை அறிவியல் கல்லுாரி டீன் முத்துலடசுமி பதிவாளர் அப்பாஸ் மொயதீன் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்று நன்றி தெரிவித்தனர். தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார் மற்றும் டீன்கள் மாணவர்களை வாழ்த்தினர்.

    • ரோபோடிக் முறையில் கணைய புற்றுநோய்க்கு இந்தியாவிலேயே முதல் முறையாக ஜிப்மரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
    • சிறு துவாரங்கள் மூலம் ரோபோடிக் முறையில் ஆபரேஷன் செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் வயிற்று வலி காரணமாக 38 வயது பெண் அனுமதிக்கப்பட்டார். சி.டி.ஸ்கேன் பரிசோதனையில் அவருக்கு கணைய புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.

    மேலும் அந்த புற்றுநோய் கல்லீரல் மற்றும் இரைப்பைக்கு ரத்தம் கொண்டு செல்லும் 'சீலியாக் ஆக்ஸிஸ்' எனப்படும் ரத்த நாளத்தை பாதித்து இருப்பது தெரியவந்தது.

    இதைத் தொடர்ந்து புற்று நோய் எதிர்ப்பு மருந்து கொடுக்கப்பட்டது. 3 சுற்று சிகிச்சைக்கு பிறகு அவருக்கு புற்றுநோய் அளவு குறைந்தது. இருந்தபோதிலும் புற்றுநோயினால் பாதிக்கப்பட்ட ரத்த நாளத்தில் எந்தவித முன்னேற்றமும் இல்லை.

    இதைத்தொடர்ந்து டாக்டர்கள் கணையம், மண்ணீரல் மற்றும் சீலியாக் ஆக்ஸிஸ் ரத்த நாளம் ஆகியவற்றை எடுக்கும் அறுவை சிகிச்சையை செய்ய முடிவு செய்தனர்.

    பொதுவாக இந்த அறுவை சிகிச்சை 25 முதல் 30 செ.மீ. அளவுக்கு வயிற்று பகுதி கிழிக்கப்பட்டு திறந்த முறையில் (ஓபன் சர்ஜரி) செய்யப்படும். ஆனால், ஜிப்மர் குடலியல் அறுவை சிகிச்சை தலைவர் டாக்டர் கலையரசன் மற்றும் டாக்டர் பிஜூ போட்டாக் கட் தலைமையிலான குழுவினர் கணைய புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சையை ரோபோடிக் முறையில் 10 மணி நேரம் மேற்கொண்டனர்.

    அதாவது, சிறு துவாரங்கள் மூலம் ரோபோடிக் முறையில் ஆபரேஷன் செய்தனர். சிகிச்சை முடிந்த 6-வது நாள் பெண் நோயாளி முழுவதுமாக குணமாகி வீடு திரும்பினார்.

    'ரோபோடிக்' அறுவை சிகிச்சையில் குடலியல் அறுவை சிகிச்சை துறை முன்னோடியாக திகழ்வதாகவும், இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை உலகில் சிலமருத்துவ மனைகளில் மட்டுமே செய்யப்படுவதாகவும் ஜிப்மர் இயக்குனர்ராகேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

    ரோபோடிக் முறையில் கணைய புற்றுநோய்க்கு இந்தியாவிலேயே முதல் முறையாக ஜிப்மரில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், ரோபோடிக் முறையில் இதர புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைகள் இதுவரை 1,400-க்கும் மேற்பட்டவை செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவ கண்காணிப்பாளர் துரைராஜன் கூறினார்.

    ×