என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • லோகநாதன் ஆன்லைனில் கொடுத்த இலக்கை முடித்தால் பணம் இரட்டிப்பாக தரப்படும் என கூறியதை நம்பி ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை அனுப்பினார்.
    • பாலாஜி ஆன்லைனில் சம்பாதிக்க அதிகவாய்ப்பு என்ற வாட்ஸ்அப் தகவலை நம்பி ரூ.2 ¾ லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டார்.

    புதுச்சேரி:

    புதுவை மூலகுளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியத்திடம் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக மோசடிக்காரர்கள் கூறினர்.

    இதனை நம்பி அவர்களின் வங்கி கணக்கில் ரூ.9 லட்சத்து 13 ஆயிரத்து 274 செலுத்தினார். அதன்பின் தொடர்பு கொள்ள முடியாததால் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

    இதேபோல லோகநாதன் ஆன்லைனில் கொடுத்த இலக்கை முடித்தால் பணம் இரட்டிப்பாக தரப்படும் என கூறியதை நம்பி ரூ.4 லட்சத்து 64 ஆயிரத்தை அனுப்பினார். அவருக்கு பணம் திரும்பி வரவில்லை.

    வாணரப்பேட்டையை சேர்ந்த பாலாஜி ஆன்லைனில் சம்பாதிக்க அதிகவாய்ப்பு என்ற வாட்ஸ்அப் தகவலை நம்பி ரூ.2 ¾ லட்சம் செலுத்தி ஏமாற்றப்பட்டார். நெல்லித்தோப்பு ரமேஷ் ஆன்லைன் வீடியோவை பார்த்து லைக் செய்தால் பணம் கிடைக்கும் என கூறியதை நம்பி ரூ.1.3/4 லட்சம் செலுத்தி ஏமாந்தார்.

    ஏனாம் பிராந்தியம் தீபக்குமார் ஆன்லைன் முதலீடு ஆசை வார்த்தையை நம்பி ரூ.2 ¾ லட்சம் முதலீடு செய்து ஏமாந்தார். முத்தியால்பேட்டை பிரபாகரன் பான்கார்டு புதுப்பித்தல் என நம்பி வங்கி தகவலை தெரிவித்ததால் ரூ.24 ஆயிரத்து 986 இழந்தார்.

    இவர்கள் உட்பட கடந்த 2 நாட்களில் மட்டும் புதுவை முழுவதும் 19 பேர் ஆன்லைன் மோசடி கும்பலிடம் ரூ.30 லட்சத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதுதவிர புதுவை நிறுவனத்தில் முதலீடு செய்தால் பணம் இரட்டிப்பாகும் என நம்பி ரூ.5.72 லட்சம் முதலீடு செய்தார். இந்த நிறுவனத்தில் 40-க்கும் மேற்பட்டேர் ரூ.2 கோடி வரை செலுத்தி ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

    இதுகுறித்தும் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஜென்மராக்கினி மாதா கோவில் அருகிலிருந்து ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை பல்கலைக் கழகத்தில் மத்திய அரசு வழங்கிய நிதியில் நடந்த முறைகேடுகள் குறித்து சி.பி.ஐ விசாரணைக்கு ஐகோர்ட் உத்தர விட்டுள்ளது.

    சி.பி.ஐ விசாரணைக்கு உள்ளான புதுவை பல்கலைக்கழக துணை வேந்தரை பணிநீக்கம் செய்யக்கோரி அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

    இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆம்பூர் சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் சலீம் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ நாராகலைநாதன், நிர்வாகிகள் சேதுசெல்வம், அபிஷேகம், கீதநாதன், மார்க்சிஸ்ட்டு பிராந்திய செயலாளர் ராஜாங்கம், முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலர் தேவபொழிலன் ஆகியோர் பங்கேற்றனர்.

    பல்கலைக்கழக துணைவேந்தருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். முன்னதாக ஜென்மராக்கினி மாதா கோவில் அருகிலிருந்து ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    • மாநில தலைவர் சாமிநாதன் மரக்கன்று நட்டார்
    • என் மண் என் தேசம் என்ற நிகழ்ச்சி முதலியார்பேட்டை தொகுதியில் அமைந்துள்ள அன்னை சிவகாமி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    புதுச்சேரி:

    இந்தியா முழுவதும் 76 -ம் ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டம் நடந்து வருகிறது.

    அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி மாநில பா.ஜனதா இளைஞரணி சார்பில் இளைஞரணி தலைவர் கோவேந்தன் கோபதி தலைமையில் என் மண் என் தேசம் என்ற நிகழ்ச்சி முதலியார்பேட்டை தொகுதியில் அமைந்துள்ள அன்னை சிவகாமி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

    விழாவில் மரம் நடுவிழா மற்றும் சுதந்திர தின உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதனைத் தொடர்ந்து பா.ஜனதா இளைஞரணி சார்பில் புதுச்சேரி முழுவதும் அனைத்து தொகுதிகளிலும் சுதந்திர போராட்ட தியாகிகளை கவுரவப்படுத்துதல் மற்றும் அனைத்து பகுதிகளிலிருந்து மண் சேகரிக்கப்பட்டு புதுடெல்லியில் அமையவி ருக்கும் நினைவுச் சின்னத்திற்கு கொண்டு செல்லும் பணி நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன் அசோக் பாபு எம்.எல்.ஏ.ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மேலும் இந்நிகழ்ச்சியில் மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார் மாநில துணைத்தலைவர்கள், செல்வம், முருகன் மாநில செயலாளர், அகிலன் கூட்டுறவு பிரிவின் அமைப்பாளர், வெற்றிச்செல்வம் ,வல்லுனர் பிரிவு தலைவர் ரமேஷ் , மாநில இளைஞரணி துணைத் தலைவர் சபரகிரிசன், மாநில பொதுச் செயலாளர், அமல்ராஜ்மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் ராஜ்குமார், சுரேஷ், வெங்கட்ரா மன், வேல்முருகன், வாசுகி, நெல்லித்தோப்பு இளைஞ ரணி தொகுதி தலைவர் மகேந்திரன், உப்பளம் தொகுதி தலைவர் பார் புகழ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை இளைஞரணி நகர மாவட்ட தலைவர் பாலகுரு செய்திருந்தார். 

    • உருளையன்பேட்டை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
    • தனக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொல்லக்கூடாது என்று சூர்யாவை போன் மற்றும் நேரில் சென்று கார்த்திக் மிரட்டி உள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை சாரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (31). சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதால், உருளையன்பேட்டை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

    இந்த வழக்கில் கார்த்திக் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த வழக்கு மீதான குற்றப்பத்திரிகை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டு, சாட்சிகள் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் வெண்ணிலா நகரை சேர்ந்த சூர்யா என்பவர் சாட்சிகளில் ஒருவர். இந்த நிலையில் தனக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சி சொல்லக்கூடாது என்று சூர்யாவை போன் மற்றும் நேரில் சென்று கார்த்திக் மிரட்டி உள்ளார்.

    இதுகுறித்து உருளை யன்பேட்டை காவல்நிலையத்தில் சூர்யா புகார் தெரிவித்தார்.

    இதன் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து, கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சாலை வசதி மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தர அரசுக்கு வலியுறுத்தி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
    • மறு டெண்டர் விட்டு சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    ஏம்பலம் தொகுதியில் கந்தன் பேட் விரிவாக்கம் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் சிஎம் எ நகர் சப்தகிரி நகர் உள்ளது.இந்நகருக்கு கடந்த பல ஆண்டுகளாக சாலை வசதி மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தர அரசுக்கு வலியுறுத்தி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாலை வசதி அமைக்க பூமி பூஜை போடப்பட்டு இதுவரை தொடங்கப்படவில்லை. இது சம்பந்தமாக பாட்கோ அதிகாரிகள் கூறும்போது டெண்டர் எடுத்தவர் தற்போது விலைவாசி அதிகமாகி விட்டதால் சாலை போட முன்வரவில்லை என தெரிவித்தனர்.

    இது சம்பந்தமாக தொகுதி எம்.எல்.ஏ லட்சுமிகாந்தனிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கந்தன்பேட் விரிவாக்கமான சிஎம்ஏ நகர், சப்தகிரி நகருக்கு விரைவாக மறு டெண்டர் விட்டு சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.

    • வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
    • வெளிமாநிலங்களுக்கு சென்று கூடுலாக கட்டணம் செலுத்தி, தங்கி மேற்படிப்பை படித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தேசியளவில் கல்வியில் முதலிடம் பிடித்து வருவதாக அரசு விழாக்களில் புதுவை முதல அமைச்சர் தற்பெருமை பேசி வருகிறார். ஆனால் புதுவை மாநிலத்தில் பட்டம் படித்த மாணவர்கள் பட்டமேற்படிப்பு படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வெளிமாநிலங்களுக்கு சென்று கூடுலாக கட்டணம் செலுத்தி, தங்கி மேற்படிப்பை படித்து வருகின்றனர்.

    காலாப்பட்டு மத்திய பல்கலைக் கழகம் தொடர்ச்சியாக புதுவை மாநில மாணவர்கள் விரோத போக்குடன் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் உள்ள அனைப்பு பாடப்பிரிவு களிலும் இடஒதுக்கீடு வழங்க மறுப்பு தெரிவித்து வருகிறது.

    பல்கலைக்கழகம் தொடங்கப்படும் போது அளித்த 21 பாடப் பிரிவுகளில் மட்டுமே 25 சதவீத இடஒதுக்கீடு புதுச்சேரி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 2013-ம் ஆண்டுக்கு பின் தொடங்கப்பட்ட பாடப் பிரிவுகளில் இடஒதுக்கீடு வழங்கவில்லை. உயர்கல்வி படிக்கும் வாய்ப்பை அளிக்கும் 36 முதுநிலை பாடப்பிரிவுகள், 10 ஒருங்கிணைந்த பாடப்பிரிவுகள், 2 முதல்நிலை பட்டய படிப்புகளுக்கு புதுவையை சேர்ந்த மாணவர்களுக்கு எந்த ஒதுக்கீடும் அளிப்பதில்லை.

    இது புதுவை மாநில மாணவர்களை வஞ்சிக்கும் செயல்.மத்திய கல்வித்துறை இணை அமைச்சர், புதுவை பல்கலைக்கழகத்தில் சட்ட விதிமுறைகளின்படி குடியிருப்பு அடிப்படை யிலான இடஒதுக்கீடு வழங்க இயலாது. 25 சதவீத இடஒதுக்கீடு கோரி எந்த முன்மொழிவும் பரிசீலனைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.

    அமைச்சரின் இந்த பதில், மத்திய பல்கலைக்கழகம் புதுவை மாநில மாணவர்க ளுக்கு பொய்யான தகவல்களைக் கூறி துரோகம் இழைத்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளது. புதுவை மாநில மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடையும் பல்கலைக்கழகம் ரத்து செய்யும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    புதுவை கல்வி கேந்திரமாக விளங்குகிறது. பிரதமர் கூறியபடி, புதுவை கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகிறது என முதல அமைச்சர் மேடைக்கு மேடை வெறும் வாய்ப்பேச்சு பேசினால் மட்டும் போதாது, அதை செயலில் காண்பிக்க வேண்டும். புதுவை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவு களிலும் 25 சதவீதம் இடஒதுக்கீடை பெருந்தலை வர் காமராஜர் வழியில் முதல அமைச்சர் புதுவை மண்ணின் மைந்தர்களுக்கு கட்டாயம் பெற்றுத்தர வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • அன்பழகன் பேட்டி
    • அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நடப்பு கல்வ ஆண்டிலேயே இட ஒதுக்கீடை வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருத்துவ க்கல்வியில் புதுவை அரசு பள்ளி மாணவர்க ளுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடை இந்த ஆண்டே வழங்க முதல்-அமைச்சர் உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும்.

    சென்டாக் மூலம் உத்தேச தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    இதனால் அரசு பள்ளி மாணவர்களிடையே எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நடப்பு கல்வ ஆண்டிலேயே இட ஒதுக்கீடை வழங்க வேண்டும்.

    இதற்காக தலைமை செயலர், அரசு செயலரை மத்திய சுகாதாரத்துறை, மனித வள மேம்பாட்டுத்து றைக்கு நேரில் அனுப்பி 5 நாட்களுக்குள் உள் ஒதுக்கீடை பெறவேண்டும்.

    அதன்பிறகு சென்டாக் கவுன்சிலிங் நடத்த வேண்டும். இதில் எந்த சமரசத்து க்கும் அரசு இடம் தரக்கூடாது.

    பருவம் தவறி பெய்த பருவ மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்- அமைச்சர் ரங்கசாமி நிவா ரணம் அறிவித்தி ருந்தார். பல மாதமாகியும் இந்த நிவாரணம் வழங்கவில்லை. இதைஉட னடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன் ரூ.14 கோடியை அரசு தள்ளுபடி செய்தது. அந்த கடனுக்கான தொகையை கூட்டுறவு வங்கிக்கு திருப்பி செலுத்தவில்லை. இதனால் புதிதாக விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கியால் கடன் வழங்க முடியவில்லை.

    இது விவசாயிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இரட்டை குடியுரிமை பிரச்சினை பூதாகரமாகி யுள்ளது. ஒரு சிலர் திட்டமிட்டு இந்த விவகாரத்தை பெரிதுப டுத்துகின்றனர். மத்திய அரசு துறை, நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் 2 அல்லது 3 ஆண்டு பணியாற்றினால் அவர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்ற அரசாணை உள்ளது.

    மேலும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் குடியுரிமை வழங்கப்படும் விதிகள் வேறுவிதமாக உள்ளது. இதில் தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆரம்பத்திலேயே சரிசெய்ய வேண்டும். இல்லாவிட்டால் 1996-ம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையை அரசு ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் குழந்தைகள் வேறு எங்கு படிக்க முடியும்?

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சக்தி சம்பால் திட்டத்தின் கீழ் புதுவையில் ஒன் ஸ்டாப் சென்டர் நிறுவப்பட்டுள்ளது.
    • ஒன் ஸ்டாப் மையத்துக்கு 28 பணியிடங்கள் மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மகளிர் மேம்பா ட்டுத்துறை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    பெண்களின் பாதுகாப்பு, மறுவாழ்வு, அதிகாரம் அளித்தலுக்கு மிஷன் சக்தி திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்துள்து.

    இத்திட்டம் சம்பால், சாமர்த்தியா என்ற 2 துணை திட்டங்களை கொண்டுள்ளது. சக்தி சம்பால் திட்டத்தின் கீழ் புதுவையில் ஒன் ஸ்டாப் சென்டர் நிறுவப்பட்டுள்ளது.

    இத்திட்டம் வீடு, வேலை, சமூகம், தனியார், பொது இடத்தில் துஷ்பிர யோகத்துக்கு ஆளாகும் பெண்களுக்கு உதவுவதை நோக்கமாக கொண்டது. பாலியல், உடல் உளவியல், உணர்ச்சி, பொருளாதார துஷ்பிரயோகத்தால் பாதிக்கும் பெண்களுக்கு அவர்களின் சாதி, மதம், இனம், வகுப்பு, கல்வி நிலை, வயது, கலாச்சாரம், திருமண நிலை பொருட்படுத்தாமல் உதவி செய்து கை கொடுக்கிறது.

    புதுவையில் ஒன் ஸ்டாப் மையத்துக்கு 28 பணியிடங்கள் மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான தகுதி, விண்ணப்பங்கள் பற்றிய விபரங்களை அரசின் இணையதள முகவரியில் பெறலாம். வருகிற 28-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மைய நிர்வாகி பணிக்கு ரூ.25 ஆயிரம், கேஸ் ஒர்க்கர், சோசியல் கவுன்சிலர், அலுவலக உதவியாளர் பணிக்கு தலா ரூ.15 ஆயிரம், வக்கீல் பணிக்கு ரூ.12 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்
    • வகுப்பறைகள் புனரமைப்பு செய்வதற்கான பூமி பூஜை பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. தலைமையில் பள்ளி வளாகத்தில் நடந்தது.

    புதுச்சேரி:

    முத்தியால்பேட்டை தொகுதி சோலை நகர் வீதியில் அமைந்துள்ள சின்னாத்தா மேல்நிலை ப்பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பறைகளும் பழுதடைந்து இருந்தது.

    இதுகுறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் தொகுதி எம்.எல்.ஏ பிரகாஷ்குமாரிடம் வகுப்பறைகளை புனரமைப்பு செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர். உடனே பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ கல்வித்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை அழைத்து சின்னாத்தா மேல்நிலைப்பள்ளி கட்டிட ங்களின் ஸ்திரத்தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    பழுந்தடைந்த அனைத்து வகுப்பறை கட்டிடங்களை யும் சரிசெய்ய பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. அரசுக்கு கோரிக்கை வைத்து நிலையில், ரூ.45 லட்சம் மதிப்பில் வகுப்பறைகள் புனரமைப்பு செய்வதற்கான பூமி பூஜை பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. தலைமையில் பள்ளி வளாகத்தில் நடந்தது. அவர் பூமி பூஜை செய்து வைத்து பணியை தொடங்கி வைத்தார்.

    இதில், சின்னதா மேல்நிலைப்பள்ளி முதல்வர் சாய்வர்கீஸ் மற்றும் ஆசிரியர்கள், கல்வித்துறை, பொதுப்பணித்துறை சிறப்பு கட்டிடம் கோட்டம் 2 செயற்பொறியாளர் மாணிக்கவாசகம், உதவி பொறியாளர் கண்ணன், இளநிலை பொறியாளர் ராமதாசன் பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
    • இதைதொடர்ந்து பிணத்தை புதுவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அடுத்த கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மதுக்கடை அருகே  ஒருவர் மயங்கிய நிலையில் வாயிலும் மூக்கிலும் நுரை தள்ளிய நிலையில் படுத்து கிடந்தார்.

    இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் விஷம் குடித்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    போலீசார் அவரை பரிசோதித்த போது பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டை வைத்து அடையாளம் கண்டனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் கடலூர் முட்லூரை சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது 39) என்பதும். கடலூர் மாவட்டம் மேல் புவனகிரியில் வி.ஏ.ஓ.வாக பணிபுரிந்து வந்ததும் திருமணமாகி தீபா கவுரி (28) என்ற மனைவியும் 1 ½ வயதில் மகன் இருப்பதும் தெரிய வந்தது.

    மேலும் கடன் வாங்கியதில் மன உளைச்சல் இருந்ததாகவும் இதனால் பூச்சி மருந்தை மதுவுடன் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

    இதைதொடர்ந்து பிணத்தை புதுவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து கிருமாமாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் விசாரணை
    • சம்பவத்தன்று வீட்டிலிருந்து மாணவி திடீரென மாயமானார்.

    புதுச்சேரி:

    புதுவை அருகே தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இங்கு துருவை கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டிலிருந்து மாணவி திடீரென மாயமானார். அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடியும் மாணவியை காணவில்லை.

    இது குறித்து மாணவியின் தாய் ஆரோவில் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் அடிப்படையில் இன்ஸ்பெ க்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், காணாமல் போன அன்று மாணவியை அதே கல்லூரியில் படிக்கும் ராயபுதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாணவனும் அவரது நண்பர் ஒருவரும் பைக்கில் கடத்திச் சென்றது தெரியவந்தது. இது குறித்து 2 பேர் மீதும் கடத்தல் பிரிவில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான மாணவியை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

    • மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதி
    • இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்லும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு பகுதியில் விழுப்புரம் -நாகப்பட்டினம் 4வழி சாலை பணி நடந்து வருகிறது.

    மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் திருக்கனூர் செல்லும் சாலை பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. தற்போது பெய்த மழையால் அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் இந்த பள்ளத்தில் ஊர்ந்து செல்கின்றன. மேலும் இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்லும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.

    இந்த பகுதி வழியாக அதிக அளவில் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் தொழி ற்சாலைக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சென்று வருகின்றனர். இதனால் அடிக்கடி அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு வருகிறது.

    இதனை தடுக்கும் வண்ணம் அப்பகுதியில் உள்ள சாலையை உடனடியாக சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×