என் மலர்
நீங்கள் தேடியது "lane work"
- மழை நீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதி
- இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்லும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
மதகடிப்பட்டு பகுதியில் விழுப்புரம் -நாகப்பட்டினம் 4வழி சாலை பணி நடந்து வருகிறது.
மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் திருக்கனூர் செல்லும் சாலை பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டது. தற்போது பெய்த மழையால் அந்த பள்ளத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனங்கள் இந்த பள்ளத்தில் ஊர்ந்து செல்கின்றன. மேலும் இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து செல்லும் நிலையும் ஏற்பட்டு வருகிறது.
இந்த பகுதி வழியாக அதிக அளவில் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் தொழி ற்சாலைக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் சென்று வருகின்றனர். இதனால் அடிக்கடி அப்பகுதியில் விபத்து ஏற்பட்டு வருகிறது.
இதனை தடுக்கும் வண்ணம் அப்பகுதியில் உள்ள சாலையை உடனடியாக சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






