என் மலர்
புதுச்சேரி
- வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை பி.காம், கார்ப்பரேட் செகரட்டரிசிப் படிப்பு களுக்கு சேர்க்கை நடந்தது.
- கணிதம் படிப்புகளுக்கும், மதியம் அனைத்து படிப்புகளுக்கும் சேர்க்கை நடக்கிறது.
புதுச்சேரி:
புதுவையில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு 2-ம் கட்ட கலந்தாய்வு நடத்தி சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பாரதிதாசன் அரசு பெண்கள் கல்லூரியில் 2-ம் கட்ட கலந்தாய்வில் சீட் கிடைத்த மாணவிகளுக்கு மாணவர் சேர்க்கை அட்டவணை வெளி யிடப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை பி.காம், கார்ப்பரேட் செகரட்டரிசிப் படிப்பு களுக்கு சேர்க்கை நடந்தது.
இன்று மதியம் 2 முதல் 5 மணிவரை பி.ஏ. பொருளாதாரம், வரலாறு, தமிழ் படிப்புகளுக்கு சேர்க்கை நடக்கிறது. வரும் 14-ம் தேதி காலை 10 முதல் மதியம் ஒரு மணி வரை பி.ஏ. பிரெஞ்சு, ஆங்கிலம் படிப்புகளுக்கும், மதியம் 2 முதல் மாலை 5 மணி வரை பி.எஸ்.சி. தாவரவியல், விலங்கியல், கிளினிக்கல் நியூட்ரீஷியன், டயாபடீஸ், இயற்பியல் படிப்புகளுக்கும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. வரும் 17-ந் தேதி காலையில் பி.எஸ்.சி கம்ப்யூட்டர் சயின்ஸ், வேதியியல், கணிதம் படிப்புகளுக்கும், மதியம் அனைத்து படிப்புகளுக்கும் சேர்க்கை நடக்கிறது.
- காங்கிரஸ் கூட்டத்தில் தீர்மானம்
- கூட்டத்தில் தொகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது, வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அதிக வாக்குகள் பெறுவதற்கு ஆலோசனை செய்தனர்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தவளக்குப்பத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏ, மாநில துணை தலைவர் அனந்தராமன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சுரேஷ், எழில்ராஜா, சேகர், பெஸ்ட் முருகன், வீரப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தொகுதியில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்துவது, வரும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அதிக வாக்குகள் பெறுவதற்கு ஆலோசனை செய்தனர்.
பின்னர் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட்டது. அதில், அபிஷேக பாக்கத்தில் இலவச மனை பட்டா அரசு உடனடியாக வழங்க வேண்டும். டி.என். பாளையத்தில் இலவச மனைபட்டா வழங்கியவர்களுக்கு அதை பயன்படுத்தி வீடு கட்டிக் கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மணவெளி தொகுதியில் உள்ள பல சாலைகள் சேதமடைந்தும் தெரு விளக்குகள் எரியாமல் இருப்பதை உடனடியாக சரி செய்ய வேண்டும்.
தவளக்குப்பம் 4 முனை சந்திப்பில் புதிய மதுக்கடை திறக்க அனுமதிக்க கூடாது. சின்ன வீராம்பட்டினம் கடற்கரையில் சுற்றுலா பயணிகளிடம் வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் தொகுதி முக்கிய நிர்வாகிகளான ஜெயராமன், ராஜேந்திரன், தண்டபாணி, பாபு, பாலச்சந்தர், கலியபெருமாள், குமார், ஜெயலட்சுமி உள்ளிட்ட 100 பேர் கலந்து கொண்டனர்.
- மதுக்கடை அருகே ஒருவர் மயங்கிய நிலையில் வாயிலும் மூக்கிலும் நுரை தள்ளிய நிலையில் படுத்து கிடந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகூர்:
புதுவை அடுத்த கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மதுக்கடை அருகே நேற்று காலை ஒருவர் மயங்கிய நிலையில் வாயிலும் மூக்கிலும் நுரை தள்ளிய நிலையில் படுத்து கிடந்தார்.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் விஷம் குடித்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கிருமாம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் அவரை பரிசோதித்த போது பாக்கெட்டில் இருந்த ஆதார் கார்டை வைத்து அடையாளம் கண்டனர். விசாரணையில் இறந்து கிடந்தவர் கடலூர் முட்லூரை சேர்ந்த தாமரைச்செல்வன் (வயது 39) என்பதும். கடலூர் மாவட்டம் மேல் புவனகிரியில் வி.ஏ.ஓ.வாக பணிபுரிந்து வந்ததும் திருமணமாகி தீபா கவுரி (28) என்ற மனைவியும் 1 ½ வயதில் மகன் இருப்பதும் தெரிய வந்தது.
மேலும் கடன் வாங்கியதில் மன உளைச்சல் இருந்ததாகவும் இதனால் பூச்சி மருந்தை மதுவுடன் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.
இதைதொடர்ந்து பிணத்தை புதுவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து கிருமாமாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுவை மாநிலம் மாகி பிராந்தியத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியதாக கூறப்படுகிறது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
புதுச்சேரி:
கேரள மாநிலம் வடகரா பகுதியை சேர்ந்தவர் இந்திரா (வயது 52). அங்குள்ள ஓட்டலில் பணி செய்து வருகிறார். இவருக்கும், வயநாடு பகுதியை சேர்ந்த முகமது ரியாஷ் (30) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.
சம்பவத்தன்று அவர்கள் புதுவை மாநிலம் மாகி பிராந்தியத்தில் உள்ள ஒரு ஓட்டலில் அறை எடுத்து தங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். போதை தலைக்கேறியதால் அசதியில் 2 பேரும் தூங்கி விட்டனர்.
மறுநாள் காலையில் இந்திரா கண் விழித்து பார்த்த போது அவரது 3 பவுன் செயினை காணவில்லை. முகமது ரியாசும் மாயமாகி இருந்தார். குடிபோதையில் தூங்கியபோது முகமது ரியாஷ் 3 பவுன் செயினை பறித்து சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்திரா மாகி போலீசில் புகார் செய்தார்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது முகமது ரியாஷ் வயநாடு பகுதியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- புதுவை-கடலூர் உயர் மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி தலைமை வகித்தார்.
- காட்டுமன்னார் கோவில் எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
புதுச்சேரி:
தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கக்கோரி கண்டன அறப்போராட்டம் சுதேசி மில் அருகே நடந்தது.
பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் ஆசியுடன் நடந்த இந்த போராட்டத்துக்கு புதுவை-கடலூர் உயர் மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி தலைமை வகித்தார்.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காட்டுமன்னார் கோவில் எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
போராட்டத்தில் புதுவை, கடலூர் உயர் மறை மாவட்ட எஸ்.சி, எஸ்.டி. பணிக்குழு, கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம், தேசிய தலித் கிறித்தவர் பேரவை, இந்திய கிறித்தவ சபைகளின் பேரவை, தலித் கிறித்தவர் விடுதலை இயக்கம், தலித் கிறித்தவர் இயக்கங்களின் கூட்டமைப்பு, ஆசிரிய அலுவலர் நலச்சங்கம், அனைத்து திருச்சபை அமைப்புகள், மக்கள் மேம்பாட்டு கழகம், துரும்பர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். செயலர் தெய்வநாயகம் நன்றி கூறினார்.
- மாநில தலைவர் சாமிநாதன் தகவல்
- பா.ஜனதா தேசிய உணர்வோடு நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நாட்டு மக்கள் அனைவரும் உணரும் வகையில் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
இதையேற்று என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு கடந்த ஆண்டு 2 ½ லட்சம் தேசியக்கொடி வழங்கியது.
புதுவை மாநிலத்தில் ஒரு லட்சம் தேசியக் கொடியை வரும் சுதந்திர தினத்தில் ஏற்ற பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரிவினைவாதத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து பா.ஜனதா சார்பில் மாவட்டந்தோறும் மவுன ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. இனிவரும் காலங்களில் ஒரு பிடி மண்ணைக்கூட எடுக்க முடியாது.
என் தேசம், என் மக்கள் என்ற கோஷத்தை பிரதமர் முன்வைத்துள்ளார். இதை வலியுறுத்தும் வகையில் உழவர்கரையில் நடைபெறும் மவுன ஊர்வலத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்துகொள்கிறார்.
புதுவை மாநில பா.ஜனதா சார்பில் பிரிவினைவாதத்தை கண்டித்து தேசிய கொடியுடன் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. வருகிற 13, 14, 15-ந் தேதிகளில் அனைத்து தொகுதியிலும் வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது.
தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசு தேசியக் கொடியை வழங்கக்கூட முன்வரவில்லை. தி.மு.க. கொடியேற்றும் அரசு தேசியக்கொடி ஏற்ற முன்வரவில்லை. பா.ஜனதா தேசிய உணர்வோடு நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
காங்கிரஸ் 50 ஆண்டாக செய்ய முடியாததை என்தேசம், என் மக்கள் என்ற தேசிய உணர்வை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார்.
புதுவையில் பாரதியார், பாரதிதாசன் வாழ்ந்த இடங்கள், கீழூர் நினைவிடம் உட்பட 5 இடங்களில் மண் எடுத்து 5 கலசங்களை டெல்லிக்கு அனுப்பி வைக்க உள்ளோம்.
நாடு முழுவதும் 25 ஆயிரம் அமிர்த கலசங்களை சேகரித்து டெல்லியில் ஒருங்கிணைத்து தேச பற்றை வளர்க்க உள்ளனர். புதுச்சேரியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா நிர்வாகிகள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு விசேஷ அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
- கோவிலில் ஆடி மாத தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றான செங்கழுநீர் அம்மன் கோவில் அரியாங்குப்பத்தை அடுத்த வீராம்பட்டினம் மீனவ கிராமத்தில் அமைந்துள்ளது.
இந்த கோவிலில் ஆடி மாத தேர் திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 18-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தேரோட்டம் நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணி அளவில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு விசேஷ அலங்காரத்தில் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து கொடிமரம் அருகில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அம்மன், விநாயகர் உள்ளிட்ட சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று கொடி யேற்றமும் நடந்தது.
தொடர்ந்து கொடி மரத்திற்கு பஞ்சமுக மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பாஸ்கர் எம்.எல்.ஏ, உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவல் குழு தலைவர் பரமானந்தன், துணைத் தலைவர் உதயசங்கர், செயலாளர் கஜேந்திரன், பொருளாளர் இருசப்பன், உறுப்பினர் முத்துவேல், விழா குழுவினர், மக்கள் குழுவினர் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
- கூட்டத்தில் கிராம வளர்ச்சித் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும்.
- பல்வேறு துறைகளில் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்கவும்.
புதுச்சேரி:
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது:-
சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ந் தேதியில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் கரையாம்புத்தூர் பஞ்சா யத்துக்கு, பனையடிகுப்பம் அரசு நடுநிலைப்பள்ளி, மணமேடு- மந்தவெளி திடலிலும், குருவிநத்தம் - ராஜீவ் காந்தி திருமண மண்டபத்திலும், சோரி யாங்குப்பம் - செங்கழுநீர் அம்மன் கோவில் திடலிலும், பரிக்கல்பட்டு - கொமந்தான் மேடு வீரன் கோவில் திடலிலும், பாகூர் மேற்கு- பூலோக மாரியம்மன் கோவில் திடலிலும், பாகூர் கிழக்கு - கமலா நேரு திருமண மண்டபத்தி லும், சேலியமேடு - மாரியம்மன் கோவில் திடல், குடியிருப்பு பாளையம் - கிராம பஞ்சாயத்து அலுவல கத்திலும், கிருமாம் பாக்கம் அரசு ஆரம்பப் பள்ளியிலும், பனித்திட்டு கலைய ரங்கத்திலும், பிள்ளை யார்குப்பம் - காட்டுக் குப்பம் அரசு ஆரம்ப பள்ளியிலும், மணப்பட்டு - கன்னிய கோவில் பச்சைவாழி அம்மன் கோவில் எதிரிலும், மதி
கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில் திடல் ஆகிய 14 கிராம பஞ்சாயத்துகளிலும் 10 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இக்கிராம சபை கூட்டத்தில் கிராம வளர்ச்சித் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும். வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
மேலும், அரசால் பல்வேறு துறைகளில் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்கவும், பொதுமக்களுக்குத் தேவையான விவரங்களை அளித்திடவும் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும், இக்கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
எனவே, பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தில் திரளாக கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மாநில அளவிலான யோகாசன சாம்பியன் ஷிப் போட்டியை நடத்தியது.
- தேசியஅளவிலான யோகாசன போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி:
சித்தர்பூமி புதுச்சேரி யோகாசன விளையாட்டு கூட்டமைப்பு மற்றும் யோகாசன பாரதம் இணைந்து மாநில அளவிலான யோகாசன சாம்பியன் ஷிப் போட்டியை நடத்தியது.
பல்வேறு பிரிவில் நடைபெற்ற இப்போட்டியில் கல்லூரி மாணவர்கள் பலர் பங்கேற்றனர். இதில் ஜோடி கலைப்பிரிவில் ஆறுபடை வீடு மருத்துவமனை பிசியோதெரபி கல்லூரி மாணவர்கள் அரவிந்த்ராஜ், தரணி ஆகியோர் முதல் பரிசும், பாரம்பரிய பிரிவில் புஷ்பராஜ் 3-ம் பரிசும் பெற்றனர். மேலும் இவர்கள் தேசியஅளவிலான யோகாசன போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஆறுபடை வீடு மருத்துவ கல்லூரி வேந்தர் டாக்டர் கணேசன், கல்லூரி டீன் டாக்டர் ராகேஷ் சேகல்,
பிசியோதெரபி கல்லூரி முதல்வர் டாக்டர் முரளிசங்கர் மற்றும் பேராசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டினர்.
- இளைஞர் காங்கிரசார் ஊர்வலமாக சென்று அண்ணா சாலையில் இளைஞர் காங்கிரஸ் கொடியேற்றி கொண்டாடினார்கள்.
- தேசிய செயலாளர் ஜோஸ்வா ஜெராட் முன்னிலை வகித்தார்.
புதுச்சேரி:
இந்திய இளைஞர் காங்கிரஸ் 63-வது தொடக்க நாளை முன்னிட்டு புதுவை காங்கிரஸ் அலுவலகத்தில் கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து இளைஞர் காங்கிரசார் ஊர்வலமாக சென்று அண்ணா சாலையில் இளைஞர் காங்கிரஸ் கொடியேற்றி கொண்டாடினார்கள்.
நிகழ்ச்சிக்கு புதுவை மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆனந்த்பாபு நடராஜன் தலைமை வகித்தார். தேசிய செயலாளர் ஜோஸ்வா ஜெராட் முன்னிலை வகித்தார்.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் எம்.எல்.ஏ, மாநில ஒரு ங்கிணைப்பாளர் தேவதாஸ், முன்னாள் துணை சபாநாயகர் பாலன், வக்கீல் பிரிவு தலைவர் மருது பாண்டியன், மாநில பொதுச் செயலா ளர்கள் திருமுருகன், இளைய ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் பாபு லால், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் செயல் தலைவர் வேல்முருகன், துணைத் தலைவர் ரகுபதி மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் கோவலன் மாநில பொதுச் செய லாளர்கள் பெருமாள், சதீஷ்குமார், குருமூர்த்தி, விக் னேஷ்,சையத், சத்யநாராயணன், பிரியா, சுந்தரம், பிரதீப், சித்திக், மாவட்ட தலைவர் பிரகாஷ், ஐயப்பன் ஊடகப்பிரிவு ஒரு ங்கி ணை ப்பாளர்கள் தமிழரசன், மனோஜ்குமார், கென்னடி, ஜனாஅரவிந்தம், தொகுதி தலைவர்கள், சரண்குமார், சுரேஷ் ராஜ், ராஜேஷ், பிரசன்னா, வீரமணிகண்டன். மாவட்ட நிர்வாகிகள், அன்பரசன், பாலா, மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் திருமுருகன், மதன், நவ்பல், மற்றும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- இத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மிக குறைவு.
- இ.பி.எஸ். 95 ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் பாராளு மன்றத்தில் பேசியதாவது:-
இ.பி.எஸ். 95 ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பயன்பெறும் ஓய்வூதியதாரர்கள் 70 லட்சத்திற்கும் மேல் உள்ளனர். இத்திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் மிக குறைவு. சராசரியாக ரூ.ஆயிரத்து 174 வழங்கப்படுகிறது. மருத்துவ செலவுக்கு எந்த உதவியும் வழங்குவதில்லை.
இதனால் வயதான காலத்தில் ஆதரவின்றி தவிக்கின்றனர். இதை கருத்தில்கொண்டு இ.பி.எஸ். 95 ஓய்வூதியதாரர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். இலவச மருத்துவ உதவியும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- முதலாமாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் புதுவை மாணவர்கள் ஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவர்கள் 3 பேருக்கு சீட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
- பிரச்சினை பெரும் பூதாகரமாகி உள்ளதால் புதுவை மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை அரசு மருத்துவக்கல்லுரி மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரி ஆகியவற்றில் மாணவர் சேர்க்கையில் புதுவை அரசு ஒதுக்கீடாக 370 இடங்கள் உள்ளது.
இவற்றில் 2023-24 எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நீட் தரவரிசை பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 162 மாணவர்களும், கேரளாவை சேர்ந்த 36 மாணவர்களும் இடம் பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதற்கிடையே இருவேறு மாநிலங்களில் இரட்டை குடியுரிமை அடிப்படையில் தற்போது ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் புதுவை மாணவர்கள் ஒதுக்கீட்டில் வெளி மாநில மாணவர்கள் 3 பேருக்கு சீட் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு புதுவை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக புதுவை கவர்னர் தமிழிசையிடம் சமூக அமைப்பினர் புகார் தெரிவித்துள்ளனர்.
ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் புதுவை மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவர்கள் இடம் பெற்றுள்ளது புதுவையில் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இப்பிரச்சினை பெரும் பூதாகரமாகி உள்ளதால் புதுவை மாணவர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தந்த மாநிலத்திற்கான இட ஒதுக்கீட்டின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.






