என் மலர்
புதுச்சேரி

போராட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசிய போது எடுத்த படம்.
எஸ்.சி. பட்டியலில் சேர்க்க கோரி தலித் கிறிஸ்தவர்கள் போராட்டம்
- புதுவை-கடலூர் உயர் மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி தலைமை வகித்தார்.
- காட்டுமன்னார் கோவில் எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
புதுச்சேரி:
தலித் கிறிஸ்தவர்களை எஸ்.சி. பட்டியலில் சேர்க்கக்கோரி கண்டன அறப்போராட்டம் சுதேசி மில் அருகே நடந்தது.
பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் ஆசியுடன் நடந்த இந்த போராட்டத்துக்கு புதுவை-கடலூர் உயர் மறைமாவட்ட முதன்மை குரு குழந்தைசாமி தலைமை வகித்தார்.
முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, காட்டுமன்னார் கோவில் எம்.எல்.ஏ. சிந்தனை செல்வன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
போராட்டத்தில் புதுவை, கடலூர் உயர் மறை மாவட்ட எஸ்.சி, எஸ்.டி. பணிக்குழு, கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கம், தேசிய தலித் கிறித்தவர் பேரவை, இந்திய கிறித்தவ சபைகளின் பேரவை, தலித் கிறித்தவர் விடுதலை இயக்கம், தலித் கிறித்தவர் இயக்கங்களின் கூட்டமைப்பு, ஆசிரிய அலுவலர் நலச்சங்கம், அனைத்து திருச்சபை அமைப்புகள், மக்கள் மேம்பாட்டு கழகம், துரும்பர் விடுதலை இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். செயலர் தெய்வநாயகம் நன்றி கூறினார்.






