search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம்
    X

    கோப்பு படம்.

    சுதந்திர தின சிறப்பு கிராம சபை கூட்டம்

    • கூட்டத்தில் கிராம வளர்ச்சித் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும்.
    • பல்வேறு துறைகளில் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்கவும்.

    புதுச்சேரி:

    பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ந் தேதியில் பாகூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டம் கரையாம்புத்தூர் பஞ்சா யத்துக்கு, பனையடிகுப்பம் அரசு நடுநிலைப்பள்ளி, மணமேடு- மந்தவெளி திடலிலும், குருவிநத்தம் - ராஜீவ் காந்தி திருமண மண்டபத்திலும், சோரி யாங்குப்பம் - செங்கழுநீர் அம்மன் கோவில் திடலிலும், பரிக்கல்பட்டு - கொமந்தான் மேடு வீரன் கோவில் திடலிலும், பாகூர் மேற்கு- பூலோக மாரியம்மன் கோவில் திடலிலும், பாகூர் கிழக்கு - கமலா நேரு திருமண மண்டபத்தி லும், சேலியமேடு - மாரியம்மன் கோவில் திடல், குடியிருப்பு பாளையம் - கிராம பஞ்சாயத்து அலுவல கத்திலும், கிருமாம் பாக்கம் அரசு ஆரம்பப் பள்ளியிலும், பனித்திட்டு கலைய ரங்கத்திலும், பிள்ளை யார்குப்பம் - காட்டுக் குப்பம் அரசு ஆரம்ப பள்ளியிலும், மணப்பட்டு - கன்னிய கோவில் பச்சைவாழி அம்மன் கோவில் எதிரிலும், மதி

    கிருஷ்ணாபுரம் பெருமாள் கோவில் திடல் ஆகிய 14 கிராம பஞ்சாயத்துகளிலும் 10 மணியளவில் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

    இக்கிராம சபை கூட்டத்தில் கிராம வளர்ச்சித் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் அனைத்து துறைகளிலும் மேற்கொள்ளப்படும். வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.

    மேலும், அரசால் பல்வேறு துறைகளில் மூலமாக செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து பொது மக்களிடம் எடுத்துரைக்கவும், பொதுமக்களுக்குத் தேவையான விவரங்களை அளித்திடவும் அனைத்துத் துறைகளின் அலுவலர்களும், இக்கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.

    எனவே, பொதுமக்கள் அனைவரும் அந்தந்த பகுதிகளில் நடைபெறவுள்ள கிராமசபைக் கூட்டத்தில் திரளாக கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்டங்கள் பற்றி அறிந்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×