என் மலர்
புதுச்சேரி

புதுவை தலைமை அஞ்சலகத்தில் தேசியக்கொடி விற்பனையை பா.ஜனதா மாநில தலைவர் சாமிநாதன் தொடங்கி வைத்த காட்சி. அருகில் பா.ஜனதா பட்டியலின அணி தலைவர் தமிழ்மாறன் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.
பா.ஜனதா சார்பில் 1 லட்சம் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற ஏற்பாடு
- மாநில தலைவர் சாமிநாதன் தகவல்
- பா.ஜனதா தேசிய உணர்வோடு நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில பா.ஜனதா தலைவர் சாமிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
சுதந்திரத்தின் முக்கியத்துவத்தை நாட்டு மக்கள் அனைவரும் உணரும் வகையில் வீடுகளில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
இதையேற்று என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு கடந்த ஆண்டு 2 ½ லட்சம் தேசியக்கொடி வழங்கியது.
புதுவை மாநிலத்தில் ஒரு லட்சம் தேசியக் கொடியை வரும் சுதந்திர தினத்தில் ஏற்ற பா.ஜனதா சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிரிவினைவாதத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள இழப்பு குறித்து பா.ஜனதா சார்பில் மாவட்டந்தோறும் மவுன ஊர்வலம் நடத்தப்பட உள்ளது. இனிவரும் காலங்களில் ஒரு பிடி மண்ணைக்கூட எடுக்க முடியாது.
என் தேசம், என் மக்கள் என்ற கோஷத்தை பிரதமர் முன்வைத்துள்ளார். இதை வலியுறுத்தும் வகையில் உழவர்கரையில் நடைபெறும் மவுன ஊர்வலத்தில் மத்திய மந்திரி எல்.முருகன் கலந்துகொள்கிறார்.
புதுவை மாநில பா.ஜனதா சார்பில் பிரிவினைவாதத்தை கண்டித்து தேசிய கொடியுடன் கருத்தரங்கு நடத்தப்படுகிறது. வருகிற 13, 14, 15-ந் தேதிகளில் அனைத்து தொகுதியிலும் வீடுகள் தோறும் தேசியக்கொடி ஏற்ற ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது.
தமிழகத்தில் ஆளும் தி.மு.க. அரசு தேசியக் கொடியை வழங்கக்கூட முன்வரவில்லை. தி.மு.க. கொடியேற்றும் அரசு தேசியக்கொடி ஏற்ற முன்வரவில்லை. பா.ஜனதா தேசிய உணர்வோடு நாடு முழுவதும் தேசியக்கொடி ஏற்ற நடவடிக்கை எடுத்துள்ளது.
காங்கிரஸ் 50 ஆண்டாக செய்ய முடியாததை என்தேசம், என் மக்கள் என்ற தேசிய உணர்வை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார்.
புதுவையில் பாரதியார், பாரதிதாசன் வாழ்ந்த இடங்கள், கீழூர் நினைவிடம் உட்பட 5 இடங்களில் மண் எடுத்து 5 கலசங்களை டெல்லிக்கு அனுப்பி வைக்க உள்ளோம்.
நாடு முழுவதும் 25 ஆயிரம் அமிர்த கலசங்களை சேகரித்து டெல்லியில் ஒருங்கிணைத்து தேச பற்றை வளர்க்க உள்ளனர். புதுச்சேரியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், பா.ஜனதா நிர்வாகிகள் வீடுகளில் தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.






