என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
25 சதவீத இடஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்
- வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
- வெளிமாநிலங்களுக்கு சென்று கூடுலாக கட்டணம் செலுத்தி, தங்கி மேற்படிப்பை படித்து வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அதிமுக துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தேசியளவில் கல்வியில் முதலிடம் பிடித்து வருவதாக அரசு விழாக்களில் புதுவை முதல அமைச்சர் தற்பெருமை பேசி வருகிறார். ஆனால் புதுவை மாநிலத்தில் பட்டம் படித்த மாணவர்கள் பட்டமேற்படிப்பு படிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். வெளிமாநிலங்களுக்கு சென்று கூடுலாக கட்டணம் செலுத்தி, தங்கி மேற்படிப்பை படித்து வருகின்றனர்.
காலாப்பட்டு மத்திய பல்கலைக் கழகம் தொடர்ச்சியாக புதுவை மாநில மாணவர்கள் விரோத போக்குடன் செயல்பட்டு வருகிறது. பல்கலைக்கழகத்தில் உள்ள அனைப்பு பாடப்பிரிவு களிலும் இடஒதுக்கீடு வழங்க மறுப்பு தெரிவித்து வருகிறது.
பல்கலைக்கழகம் தொடங்கப்படும் போது அளித்த 21 பாடப் பிரிவுகளில் மட்டுமே 25 சதவீத இடஒதுக்கீடு புதுச்சேரி மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. 2013-ம் ஆண்டுக்கு பின் தொடங்கப்பட்ட பாடப் பிரிவுகளில் இடஒதுக்கீடு வழங்கவில்லை. உயர்கல்வி படிக்கும் வாய்ப்பை அளிக்கும் 36 முதுநிலை பாடப்பிரிவுகள், 10 ஒருங்கிணைந்த பாடப்பிரிவுகள், 2 முதல்நிலை பட்டய படிப்புகளுக்கு புதுவையை சேர்ந்த மாணவர்களுக்கு எந்த ஒதுக்கீடும் அளிப்பதில்லை.
இது புதுவை மாநில மாணவர்களை வஞ்சிக்கும் செயல்.மத்திய கல்வித்துறை இணை அமைச்சர், புதுவை பல்கலைக்கழகத்தில் சட்ட விதிமுறைகளின்படி குடியிருப்பு அடிப்படை யிலான இடஒதுக்கீடு வழங்க இயலாது. 25 சதவீத இடஒதுக்கீடு கோரி எந்த முன்மொழிவும் பரிசீலனைக்கு வரவில்லை என தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் இந்த பதில், மத்திய பல்கலைக்கழகம் புதுவை மாநில மாணவர்க ளுக்கு பொய்யான தகவல்களைக் கூறி துரோகம் இழைத்துள்ளதை உறுதிபடுத்தியுள்ளது. புதுவை மாநில மாணவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த இடஒதுக்கீடையும் பல்கலைக்கழகம் ரத்து செய்யும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
புதுவை கல்வி கேந்திரமாக விளங்குகிறது. பிரதமர் கூறியபடி, புதுவை கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகிறது என முதல அமைச்சர் மேடைக்கு மேடை வெறும் வாய்ப்பேச்சு பேசினால் மட்டும் போதாது, அதை செயலில் காண்பிக்க வேண்டும். புதுவை பல்கலைக்கழகத்தில் அனைத்து பாடப்பிரிவு களிலும் 25 சதவீதம் இடஒதுக்கீடை பெருந்தலை வர் காமராஜர் வழியில் முதல அமைச்சர் புதுவை மண்ணின் மைந்தர்களுக்கு கட்டாயம் பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






