என் மலர்
நீங்கள் தேடியது "work-public demand"
- சாலை வசதி மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தர அரசுக்கு வலியுறுத்தி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
- மறு டெண்டர் விட்டு சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.
புதுச்சேரி:
ஏம்பலம் தொகுதியில் கந்தன் பேட் விரிவாக்கம் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் சிஎம் எ நகர் சப்தகிரி நகர் உள்ளது.இந்நகருக்கு கடந்த பல ஆண்டுகளாக சாலை வசதி மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தர அரசுக்கு வலியுறுத்தி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சாலை வசதி அமைக்க பூமி பூஜை போடப்பட்டு இதுவரை தொடங்கப்படவில்லை. இது சம்பந்தமாக பாட்கோ அதிகாரிகள் கூறும்போது டெண்டர் எடுத்தவர் தற்போது விலைவாசி அதிகமாகி விட்டதால் சாலை போட முன்வரவில்லை என தெரிவித்தனர்.
இது சம்பந்தமாக தொகுதி எம்.எல்.ஏ லட்சுமிகாந்தனிடம் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். கந்தன்பேட் விரிவாக்கமான சிஎம்ஏ நகர், சப்தகிரி நகருக்கு விரைவாக மறு டெண்டர் விட்டு சாலை மற்றும் கழிவு நீர் வாய்க்கால் அமைத்து தர கோரிக்கை வைத்துள்ளனர்.






