என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்
    X

    கோப்பு படம்.

    விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் ஆர்ப்பாட்டம்

    • புதுவை மாநில விளையாட்டு கவுன்சில், ராஜீவ்காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி ஆகியவற்றை தொடர்ந்து நடத்த வேண்டும்.
    • விளையாட்டு வீரர்களுக்கும் சமமான இட ஒதுக்கீடு வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-

    புதுவை அரசு தொடர்ந்து விளையாட்டு வீரர்களை புறக்கணித்து வருகிறது.

    புதுவை விளையாட்டு வீரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான கல்வித்துறையில் இருந்து விளையாட்டை தனியாக பிரித்து விளையாட்டிற்கு தனி இயக்குனரகம் அமைப்பது, ஏற்கனவே பலமுறை சட்டசபை கூட்டத் தொடரில் விளையாட்டிற்கு தனி இயக்குனரகம் அமைப்போம் என்று அறிவித்துவிட்டு விளையாட்டு வீரர்களை பல வருடங்களாக புதுவை அரசு ஏமாற்றி வருகிறது.

    அதேபோல் தனியாக விளையாட்டு வீரர்கள் நல வாரியம் அமைக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு இலவச பஸ் பாஸ், இலவச இன்சூரன்ஸ், இலவச விளையாட்டு உபகரணங்கள் ஆகியவற்றை புதுச்சேரி அரசு உடனே வழங்க வேண்டும்.

    புதுவை மாநில விளையாட்டு கவுன்சில், ராஜீவ்காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி ஆகியவற்றை தொடர்ந்து நடத்த வேண்டும்.

    மாநில விளையாட்டு கவுன்சிலில் ஊழல் செய்த அதிகாரி களை உடனடியாக பணி நீக்கம் செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோதமாக ஏற்படுத்தப்பட்ட புதுச்சேரி விளை யாட்டு வளர்ச்சி ஆணையத்தை கலைக்க வேண்டும். காரைக்கால், மாகி, யானம் ஆகிய பகுதிகளில் மண்டல விளையாட்டு கவுன்சில் ஏற்படுத்த வேண்டும். தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்க வேண்டிய உதவித்தொகை, ஊக்கத்தொகை மற்றும் விளையாட்டு சங்கங்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய நிலுவைத் தொகைகள் ஆகியவற்றை கால தாமதம் இன்றி உடனடியாக வழங்க வேண்டும்.

    கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் அனைத்து பிரிவு விளையாட்டு வீரர்களுக்கும் சமமான இட ஒதுக்கீடு வழங்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×