search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடுவதில் ரங்கசாமி திறமையானவர்
    X

    கோப்பு படம்.

    உள்ளாட்சி தேர்தலை தள்ளிப்போடுவதில் ரங்கசாமி திறமையானவர்

    • முன்னாள் எம்.பி ராமதாஸ் கடும் தாக்கு
    • மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் அல்லது இப்பணியில் ஏற்கனவே ஈடுபட்ட பன்னீர்செல்வம் குழுவிடம் அளித்திருக்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவையில் உள்ளாட்சி தேர்தலுக்காக தேவைப்படும் பிற்படுத்தப்பட்டோர் புள்ளி விபரத்தை சேகரிக்க அங்கன்வாடி ஊழியர்களை நியமித்துள்ளனர்.

    இது உள்ளாட்சி தேர்தலை தாமதப்படுத்தும் ஒரு யுக்தியாகவும், தவறான அணுகுமுறையாகவும் உள்ளது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் இருக்க என்ன காரணங்களை கண்டறிய முடியுமோ, அதை கண்டுபிடித்து அதன்மூலம் தேர்தலை தள்ளி போடு வதில் முதல்-அமைச்சர் ரங்கசாமி மிக திறமை யானவர். இந்த கணக்கெடுப்பு நடத்துவது அவசியமானது.

    இப்பணியை மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் அல்லது இப்பணியில் ஏற்கனவே ஈடுபட்ட பன்னீர்செல்வம் குழுவிடம் அளித்திருக்க வேண்டும்.

    3 மாதத்தில் இப்பணியை செய்திருக்கலாம். ஆனால் முதல்-அமைச்சர் தனி நபர் ஆணையத்தை அமைத்து உள்ளாட்சிகளில் 33.5 சதவீதத்தை பிற்படுத்த ப்பட்டோருக்கு அளித்து அறிக்கையை 6 மாதத்தில் அளிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. தனி நபர் ஆணையம் 13 மாதத்திற்கு பிறகு வீடு, வீடாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என எல்லோ ருக்கும் தெரிந்த விஷயத்தை அறிவித்து ள்ளது.

    இப்போது 20 மாதத்திற்கு பிறகு அங்கன்வாடி ஊழியர்களால் பணி தொடங்கப்படுகிறது. இந்த பணி முடிவடைய இன்னும் 15 மாதங்களாகும். எனவே உள்ளாட்சிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு செய்யும் பணி இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளாகும். அதுவரை உள்ளாட்சி தேர்தல் நடக்காது என்பதை முதல்-அமைச்சர் மகிழ்ச்சியோடு உறுதி செய்துள்ளார். பிரதமர் சொன்னாலும், இங்கே தேர்தல் நடத்தாமல், முதல்-அமைச்சர் ரங்கசாமி பார்த்துக்கொள்வார். இது அவரின் தலையாய அரசியல் கடமை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×