search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    காவிரி நீரை அளவிடும் இடத்தை மாற்ற வேண்டும்- ஆணைய கூட்டத்தில் புதுவை அதிகாரிகள் வலியுறுத்தல்
    X

    காவிரி நீரை அளவிடும் இடத்தை மாற்ற வேண்டும்- ஆணைய கூட்டத்தில் புதுவை அதிகாரிகள் வலியுறுத்தல்

    • ஆகஸ்டு மாத நீர்த்தேவையின் அளவு 1.050 டி.எம்.சி. ஆகும். ஆனால் இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை.
    • மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பு பொறியாளர், காவிரி மற்றும் தென் நதிகள் அமைப்பு ஆய்வு செய்து பரிந்துரைத்துள்ளது.

    புதுச்சேரி:

    காவிரி ஆணைய கூட்டம் டெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த கூட்டத்தில் புதுவை பொதுப்பணித்துறை செயலாளர் மணிகண்டன், தலைமை பொறியாளர் பழனியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் புதுவை அரசு சார்பில் அவர்கள் வலியுறுத்தி பேசியதாவது:-

    ஜூன், ஜூலை மாதத்துக்கான காவிரி நீர் ஒதுக்கப்பட்ட 0.250 டி.எம்.சி.க்கு பதிலாக கடந்த மாதம் 31-ந் தேதி வரை ஒட்டு மொத்தமாக 0.181 டி.எம்.சி. மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. பற்றாக்குறை 0.0690 டி.எம்.சி. ஆகும்.

    ஆகஸ்டு மாத நீர்த்தேவையின் அளவு 1.050 டி.எம்.சி. ஆகும். ஆனால் இதுவரை தண்ணீர் கிடைக்கவில்லை.

    காரைக்கால் பகுதியின் தேவையை பூர்த்தி செய்ய போதிய தண்ணீரை திறக்க கர்நாடக மாநிலத்திற்கு உத்தர விடவேண்டும். காரைக்கால்பகுதி புதுவையின் நெல் சாகுபடிக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.

    தற்போது காவிரி நீரை நம்பியுள்ள விவசாயிகளுக்கு குறுவை பயிர் பருவத்துக்கு தண்ணீர் இல்லாமல் போகும் நிலை உள்ளது.

    காரைக்கால் பிராந்தியத்திற்கு காவிரி நீரை பெறுவதற்கான உண்மையான மதிப்பீட்டை உறுதி செய்வதற்காக தண்ணீரை அளவிடும் அமைப்பினை காரைக்கால் மண்டலத்தின் நுழைவுப் பகுதியில் மாற்றியமைக்க வேண்டும்.

    அதாவது பேரளம் மற்றும் தென்குடி ஆகியவை முறையே கண்ணாப்பூர் மற்றும் மேலப் போலகத்தில் புதிய இடங்களுக்கு மாற்ற மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பு பொறியாளர், காவிரி மற்றும் தென் நதிகள் அமைப்பு ஆய்வு செய்து பரிந்துரைத்துள்ளது.

    புதுவை தள அலுவலகங்களுக்கு ஒதுக்கப்படும் நிலத்தை இறுதி செய்ய புதுச்சேரி முழு ஒத்துழைப்பை அளிக்கும். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி போதிய அளவு தண்ணீர் வழங்கவேண்டும்.

    இவ்வாறு அவர்கள் வலியுறுத்தினார்கள்.

    தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில், புதுவை அதிகாரிகள் கூட்டத்தில் முடியும் வரை பங்கேற்றனர்.

    Next Story
    ×