என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 2 வாலிபர்கள் கைது
- சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து அவர்களது சட்டைப்பையில் சோதனை நடத்தினர்.
- போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவையில் கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
ஆனாலும் கஞ்சா விற்பனையை முற்றிலுமாக தடுக்க முடியவில்லை. புற்றீசல் போல ஆங்காங்கே கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. இந்த நிலையில் ரெட்டியார் பாளையம் கம்பன் நகர் சந்திப்பில் மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ரெட்டியார் பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையில் போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த 2 வாலிபர்களை பிடித்து அவர்களது சட்டைப்பையில் சோதனை நடத்தினர்.
அவர்களது சட்டைப்பையில் சிறு சிறு பொட்டலங்களாக கஞ்சா இருந்தது. மொத்தம் 300 கிராம் கஞ்சாவை அவர்கள் பதுக்கி வைத்திருந்தனர். விசாரணையில் அவர்கள் உழவர்கரை வயல்வெளி தெருவை சேர்ந்த லெனின் பிஷப் (21) மற்றும் ரெட்டியார் பாளையம் கம்பன் நகரை சேர்ந்த ஹரீஷ் (22) என்பது தெரியவந்தது.
இவர்கள் இருவரும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சாவை விற்று வந்துள்ளனர். இதை தொடர்ந்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






