search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரூ.15 லட்சம் செலவில் குடிநீர் திட்ட  பணிகள்
    X

    கொம்பாக்கம் வார்டில் குடிநீர் திட்ட பணிகளை எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்த காட்சி.

    ரூ.15 லட்சம் செலவில் குடிநீர் திட்ட பணிகள்

    • எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்
    • குடிநீர் பிரிவு மூலம் ரூ.11 லட்சத்து 30 ஆயிரம் செலவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கொம்பாக்கம்பேட், மாதா கோவில் வீதியில் பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டத்தின் குடிநீர் பிரிவு மூலம் ரூ.11 லட்சத்து 30 ஆயிரம் செலவில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது.

    இந்த பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது. சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதேபோல், கொம்பாக்கம் வார்டுக்குட்பட்ட முத்துக்குமரன் நகர், சத்குரு நகர், ஜெயகணபதி நகர் மக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் வகையில் பொதுப்பணி த்துறை பொது சுகாதாரக் கோட்டம் மூலம் ரூ. 4 லட்சத்து 50 ஆயிரம் செலவில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணியினையும் எதிர்க்கட்சித் தலைவர் சிவா தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிகளில் பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்ட உதவிப் பொறியாளர் வாசு, இளநிலைப் பொறியாளர் கோபாலகிருஷ்ணன், மற்றும் தி.மு.க. தொகுதி செயலாளர் மணிகண்டன், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமசாமி, சோமசுந்தரம், செல்வநாதன், தர்மராஜ், தொகுதி துணைச் செயலா ளர்கள் ஜெகன்மோகன், ஹரி கிருஷ்ணன், பொருளாளர் கந்தசாமி, ம.தி.மு.க. மாநில செயலாளர் கபிரியேல், கம்யூனிஸ்ட்டு அந்தோணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×