என் மலர்
புதுச்சேரி
- பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ அங்காளனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
- உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர்கள் பாஸ்கர், மனோகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
திருபுவனை அருகே உள்ள மதகடிப்பட்டு பாளையம், திருபுவனை பாளையம் ஆகிய பகுதிகளில் குடிநீர் பற்றாக்குறை இருந்து வந்தது.
இப்பகுதிக்கு புதிய ஆழ்துளை குழாய் அமைத்து குடிநீர் பற்றாக்குறையை போக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் தொகுதி எம்.எல்.ஏ அங்காளனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியின் குடிநீர் தேவையை போக்க பொதுப்பணி துறையின் மூலம் ரூ.12 லட்சத்து 84 நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணி தொடங்கப்பட்டு தற்பொழுது பொது மக்களின் பயன் பாட்டிற்காக திறந்து வைக்கப்
பட்டது. இந்நிகழ்ச்சியில் அங்காளன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், கிராம குடிநீர் திட்ட உதவி பொறியாளர் பீனாரணி, இளநிலை பொறியாளர் சுதர்சனம், மண்ணாடி பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர்கள் பாஸ்கர், மனோகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- தாசில்தாரிடம் கென்னடி எம்.எல்.ஏ. வேண்டுகோள்
- பள்ளி- கல்லூரி மாணவர்கள் உயர் கல்வி பயில சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. கென்னடி புதுவை தாசில்தார் பிரதிவியை அவரது அலுவலத்தில் சந்தித்து பேசினார்.
அப்போது உப்பளம் தொகுதியில் முதியோர், விதவை, முதிர்கன்னி, கணவனால் கைவிடப்பட்டோர் மற்றும் பள்ளி- கல்லூரி மாணவர்கள் உயர் கல்வி பயில சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே பொதுமக்கள் கஷ்டம் இல்லாமல் விண்ணப்பம் அளித்த சில நாட்களிலேயே சான்றிதழ் வழங்க வேண்டும் என்று தாசில்தாரிடம் கென்னடி எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.
இந்த சந்திப்பின் போது தொகுதி தி.மு.க. செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர் ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- கோட்டகுப்பத்தில் உள்ள பிரியாணி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
- பழைய சிக்கன் 65, 6 கிலோ என மொத்தம் 11 கிலோ பழைய சிக்கனை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
நாமக்கல்லில் சவர்மா சிக்கன் சாப்பிட்டு சிறுமி உயிர் இழந்தார், உடல் நலம் பாதிக்கப்பட்டு 43 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து விழுப்புரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் சுகந்தன் உத்தரவின் பேரில், கோட்டகுப்பத்தில் உள்ள பிரியாணி கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
வானூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் மோகன் வட்டார உணவு பாதுகாப்பு ஆய்வாளர்கள் ரவி சரவணன் கோட்டகுப்பம் சுகாதார பிரிவு அதிகாரிகள் தின்னாயிரம், பழனி மற்றும் ஊழியர்கள் கோட்டகுப்பம் காந்தி வீதியில் உள்ள ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகள் பிரியாணி கடைகள் ஆகியவற்றில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர்.
அங்கு கறிக்கடையில் இருந்த 5 கிலோ பழைய கோழிக்கறி, பிரியாணி கடைகளில் விற்பனைக்காக சமைத்து வைக்கப்பட்ட பழைய சிக்கன் 65, 6 கிலோ என மொத்தம் 11 கிலோ பழைய சிக்கனை பறிமுதல் செய்தனர்.
- சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாற்றுத்திறனாளி பெண் அம்மை நோயால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம், சுதானா நகரை சேர்ந்தவர் குமரேசன் (43).
இவரும், இவரது தம்பி கதிரேசனும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவரது தாயார் லட்சுமியும், தங்கை சுதாவும் (33), தர்மாபுரி கங்கையம்மன் கோயில் வீதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்தனர். அவ்வப்போது அண்ணன், தம்பி இருவரும் தாயையும், சகோதரியையும் வந்து பார்த்துவிட்டு செல்வார்கள்.
மாற்றுத் திறனாளியான சுதாவுக்கு, திருமணமாகாத நிலையில் வீட்டிலேயே தனது தாய்க்கு உதவியாக இருந்து வந்தார். அவருக்கு சில தினங்களுக்கு முன்பு அம்மை நோய் பாதித்தது. அவர் வெளியே செல்லாமல் வீட்டிலேயே தங்கியிருந்தார்.
வாந்தி எடுத்ததால் சோர்வுடன் காணப்பட்ட அவரை குமரேசனும், உறவினர்களும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த சுதா நேற்றிரவு உயிரிழந்தார்.
மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் குமரேசன் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த வாரம் புதுச்சேரியில் தரமாபுரி, ரெட்டியார்பாளையம் பகுதியில் 2 பெண்கள் டெங்கு வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருந்தனர்.
இந்த நிலையில் மாற்றுத்திறனாளி பெண் அம்மை நோயால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- தற்பொழுது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
- விவசாய நிலத்தில் விதை நெல் விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் தற்பொழுது மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இதனால் விவசாயிகள் இந்த பகுதியில் விவசாயம் செய்வதற்கு ஏற்றவாறு மழை நீர் கிடைப்பதால் தங்கள் வயல்களில் நெல் விதைகளை விட்டு நெல் நடவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மதகடிப்பட்டு அருகே உள்ள குச்சிபாளையம் பகுதியில் உள்ள விவசாயிகள் தங்களது விவசாய நிலத்தில் விதை நெல் விடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- ஆதிராவிடர் நலத்துறையை கண்டித்தும், ஆண்டியார்பாளையம், நாணமேடு கிராமத்தில் இலவச மனைப்பட்டா வழங்கக்கோரியும் இந்த போராட்டம் நடந்தது.
- போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர்.
புதுச்சேரி:
மணவெளி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தட்டாஞ் சாவடியில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகை போராட்டம் இன்று நடந்தது.
சுடர்வாளன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் குமார், இமானுவேல், இளையராஜா, வீரகணல், சிவராமன், சுந்தரராசு, வினோத்குமார் முன்னிலை வகித்தனர். முதன்மை செயலாளர் தேவபொழிலன் கண்டன உரையாற்றினார்.
தலையாரி, பொதினி வளவன், தமிழ்மாறன், செல்வ நந்தன், அரிமா தமிழன், ஆதவன், கார்முகில், எழில்மாறன், இளவரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மணவெளி தொகுதி திம்மநாயக்கன் பாளை யத்தில் இலவச மனைப்பட்டா வழங்கியும், அபிஷேகபாக்கத்தில் இடம் தேர்வு செய்தும் பயனாளி களிடம் ஒப்படைக்காமல் இருக்கும் ஆதிராவிடர் நலத்துறையை கண்டித்தும், ஆண்டியார்பாளையம், நாணமேடு கிராமத்தில் இலவச மனைப்பட்டா வழங்கக்கோரியும் இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர்.
- அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேட்டி
- தேசிய கட்சியின் மாநில தலைவராக செயல்படக்கூடிய தகுதி அண்ணாமலைக்கு இல்லை.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது தகுதி, வயதை, அனுபவம் எதையும் புரிந்து கொள்ளாமல் பேசி வருகிறார். அ.தி.மு.க. கூட்டணி கட்சி என நினைக்காமல் கட்சியின் தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்வதை புதுவை மாநில அதிமுக வன்மையாக கண்டிக்கிறது.
மலிவு விளம்பரத்திற்காக பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை பற்றி அண்ணாமலை அவ்வப்போது விமர்சனம் செய்கிறார். இது இந்திய நாட்டின் பிரதமராக மோடி வரக்கூடாது என்ற அண்ணமாலையின் சதிசெயலாக உள்ளது.
தேசிய கட்சியின் மாநில தலைவராக செயல்படக்கூடிய தகுதி அண்ணாமலைக்கு இல்லை. அவர் மீது கட்சி உரிய நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து இவ்வாறு பேசி வருகிறார். அண்ணாமலை புதுவைக்கு வரும்போது அ.தி.மு.க. பதிலடி தரும்.
வருகிற பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அமையும் கூட்டணி புதுவை உட்பட 40 தொகுதியிலும் வெற்றி பெறும். அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லாவிட்டால் தென்னிந்தியாவிலேயே பா.ஜனதா என்ற ஒரு கட்சி இடம் தெரியாமல் போயிருக்கும். ங
கட்டுப்படுத்த வேண்டும்
கர்நாடகத்தில் இருந்த பா.ஜனதா ஆட்சியை தேர்தல் பொறுப்பாளர் அண்ணாமலையால்தான் இழந்தது என்பதை பா.ஜனதா தலைவர்கள் உணர வேண்டும். அண்ணாமலையை ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கட்டுப்படுத்த வேண்டும்.
புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் ரங்கசாமி தலைமையில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டோம். பா.ஜனதாவால்தான் புதுவையில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது.
என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பாஜகவை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாகவும், சபாநாயகராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருக்க அ.தி.மு.க. தொண்டர்களின் வாக்குதான் என்பதை
தமிழகத்தில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு புதுவைக்கும் பொருந்தும். புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையேற்றுள்ளார். எங்களை பொறுத்தவரை என்.ஆர்.காங்கிரசுடன் எங்கள் கூட்டணி தொடரும்.
கூட்டணி குறித்து எடப்பாடியார் முடிவின்படி புதுவை அ.தி.மு.க. செயல்படும். எங்கள் தலைமை பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லையென்று அறிவித்துள்ளது. அது மிக்க சந்தோஷமான செய்தியாகும். அ.தி.மு.க. தொண்டர்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியாக உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில இணை செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணை செயலாளர்கள் நாகமணி, காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.
- சந்திராயன், ஆதித்யா விண்கலங்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஜி-20 மாநாடை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடிக்கும் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.
- தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து எதிர்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் ஆகியவையும் சட்டசபையில் பிரச்சினையை கிளப்ப முடிவெடுத்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மார்ச் 31-ந் தேதியுடன் முடிவடைந்தது.
6 மாதத்திற்கு ஒரு முறை சட்டசபையை கூட்ட வேண்டும் என்ற விதி உள்ளது. இந்த விதியின் அடிப்படையில் நாளை (செவ்வாய்க்கிழமை) சட்டசபை கூடுகிறது. நாளை காலை 9.30 மணிக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்வுகளை தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்படுகிறது.
பின்னர், சந்திராயன், ஆதித்யா விண்கலங்களை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், ஜி-20 மாநாடை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடிக்கும் பாராட்டு தெரிவிக்கப்படுகிறது.
புதுவையில் மருத்துவ கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசு, பிரதமர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு பாராட்டும், நன்றியும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையே உறுதியளித்தபடி கோரிக்கைகளை நிறைவேற்றாத அரசுக்கு எதிராக சட்டசபையில் உண்ணாவிரதம் இருப்பேன் என பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாண சுந்தரம் அறிவித்துள்ளார். சட்டசபை கூடும் நாளை அவர் உண்ணாவிரதம் இருப்பாரா? என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதோடு, என்.ஆர்.காங்கிரஸ் அரசு அமைந்து 2 ஆண்டுகளை கடந்தும் ரேஷன் கடைகளை திறக்கவில்லை, அறிவித்த திட்டங்களை அரசு செயல்படுத்தாதது, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது ஆகியவற்றை கண்டித்து எதிர்கட்சிகளான தி.மு.க., காங்கிரஸ் ஆகியவையும் சட்டசபையில் பிரச்சினையை கிளப்ப முடிவெடுத்துள்ளது.
இத்தகைய பரபரப்பான சூழ்நிலையில் நாளை காலை சட்டமன்றம் கூடுகிறது.
- போதை புகையிலை பொருட்கள் விற்பதாக, நெடுங்காடு போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது.
- நெடுங்காடு நல்லாதூர் குரும்பகரம் பகுதியைச்சேர்ந்த ஷாஜகானை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த நெடுங்காடு நல்லாத்தூர் சாலையில் உள்ள மளிகை கடையில், புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக, நெடுங்காடு போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், ரோந்து போலீசார், குறிப்பிட்ட கடைக்கு சென்று சோதனை செய்தபோது, புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட ரூ.11 ஆயிரத்து 640 மதிப்பிலான போதை புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கபட்டு பறிமுதல் செய்யபட்டது. மேலும், கடை உரிமையாளர், நெடுங்காடு நல்லாதூர் குரும்பகரம் பகுதியைச்சேர்ந்த ஷாஜகானை (வயது42) போலீசார் கைது செய்தனர்.
- 53- வது தேசிய பொறியாளர்கள் தின விழா மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி கருத்தரங்ககூடத்தில் நடைபெற்றது.
- மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி (எம்.ஐ.டி.) இந்திய பொறியாளர் அமைப்பு, இயந்திரவியல் துறை மாணவர் அமைப்பு இணைந்து 53- வது தேசிய பொறியாளர்கள் தின விழா மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி கருத்தரங்ககூடத்தில் நடைபெற்றது.
மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்கண் வாழ்த்துரை வழங்கினார்.
இந்திய பொறியாளர் அமைப்பின் புதுவை மாநில தலைவர் மற்றும் இயந்திரவியல் துறை தலைவர் ராஜாராமன் வரவேற்று பேசினார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக பொறியாளர் ராஜகுமாரன் வலுவான, பாதுகாப்பான மற்றும் எளிதில் கற்கும்படியான பொறியியல் நெகிழ்திறம் மிக்க எதிர்காலத்தை உருவாக்குதல் எனும் தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார்.
மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி இயந்திரவியல் துறை உதவி பேராசிரியர் கணேஷ்குமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
- காரைக்காலில் பணம் வைத்து சீட்டு ஆடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
- 3 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.2500 பணத்தை பறிமுதல் செய்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் பறவைபேட் குப்பை கிடங்கு பின்புறம், சிலர் பணம் வைத்து சீட்டு ஆடுவதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றபோது, சீட்டு ஆடிய 3 பேர் தப்பி ஓடினர். போலீசார் 3 பேரையும் மடக்கி பிடித்து சோதனைச் செய்தபோது, 3 பேரிடம் ரூ.2,500 பணம், சீட்டு கட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 3 செல்போன்கள், 3 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ரூ.2500 பணத்தை பறிமுதல் செய்தனர்.
- காரைக்காலில் போதை பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்காரர் கைது செய்யப்பட்டார்.
- ரூ.1000 மதிப்பிலான போதை புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கபட்டு பறிமுதல் செய்யபட்டது.
புதுச்சேரி:
காரைக்கால் மாதாகோவில் வீதியில் உள்ள ஒரு கடையில் புதுச்சேரி அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார், குறிப்பிட்ட கடையில், சில சாட்சிகள் முன்னிலையில் சோதனை செய்தபோது, ரூ.1000 மதிப்பிலான போதை புகையிலை பொருட்கள் மறைத்து வைத்திருப்பது கண்டுபிடிக்கபட்டு பறிமுதல் செய்யபட்டது. மேலும், கடை உரிமையாளர் காரைக்கால் பெருமாள் கோவில் வீதியைச்சேர்ந்த முகம்மது சகாபுதினை போலீசார் கைது செய்தனர்.






