என் மலர்
புதுச்சேரி
- 3-ம் ஆண்டு இறுதி பொறியியல் மாணவர்களுக்கு எம்.ஐ.டி. கல்லூரியில் சிறப்பு பயிலரங்கம் நடைபெற்றது.
- டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன அதிகாரி ஷேமா பிரகாஷ், விஜய் ஆகியோர் வழிநடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குளவிநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் வேலை வாய்ப்பு துறை மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இணைந்து 3-ம் ஆண்டு இறுதி பொறியியல் மாணவர்களுக்கு எம்.ஐ.டி. கல்லூரியில் சிறப்பு பயிலரங்கம் நடைபெற்றது.
இப்பயிலரங்கத்தை எம்.ஐ.டி. கல்லூரியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணைதலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்புரையாற்றினார். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன மேலாளர் கணேஷ் திருநாவுக்கரசு பயிலரங்கை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இப்பயிலரங்கத்தை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன அதிகாரி ஷேமா பிரகாஷ், விஜய் ஆகியோர் வழிநடத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் பேராசிரியர் மெய்யப்பன் செய்திருந்தார்.
- அமைச்சர் நமச்சிவயாம் வழங்கினார்
- மூத்த தலைவர் இளங்கோவன் உழவர்கரை மாவட்டத் தலைவர் நாகேஸ்வரன், தமிழ் மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
பிரதமர் மோடியின் பிறந்தநாளையொட்டி நெல்லித்தோப்பு தொகுதி பா.ஜனதா கட்சி சார்பில் அதன் தலைவர் உமாபதி தலைமையில் ராஜீவ் காந்தி மகளிர் மகப்பேறு ஆஸ்பத்திரியில் பிரதமர் மோடி பிறந்தநாளில் பிறந்த 15 குழந்தைகளுக்கு பராமரிப்பு பெட்டகம் பரிசளிக்கப்பட்டது.
இதில் சிறப்பு விருந்தினராக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ. ரிச்சர்ட், ஜான்குமார் பா.ஜனதா மாநில பொதுச் செயலாளர் மோகன் குமார், மூத்த தலைவர் இளங்கோவன் உழவர்கரை மாவட்டத் தலைவர் நாகேஸ்வரன், தமிழ் மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் நெல்லித்தோப்பு தொகுதி சார்பில் பூங்குன்றனார், ரேணுகாதேவி, மாதவி திலகவதி, பக்கிரிசாமி, செல்வராஜ் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சந்திராயன், ஜி20 மாநாடு வெற்றி ஆகியவற்றுக்கு பிரதமருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து பேசினார்.
- சபாநாயகரிடம் சிறிதுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை இன்று காலை கூடியது. இரங்கல் குறிப்புக்கு பிறகு எதிர்கட்சித்தலைவர் சிவா தலைமையில் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து பேசினர்.
எதிர்க்கட்சித்தலைவர் சிவா, மகளிருக்கு ரூ.ஆயிரம் வழங்கும் திட்டத்தை அனைத்து தொகுதிகளிலும் செயல்படுத்தாதது, தொகுதியளவில் நடைபெற வேண்டிய பணிகள், மக்கள் நல பணிகளை செயல்படுத்தாதது ஆகியவை குறித்து சபையில் விவாதிக்க வேண்டும்.
அனைத்து பிரச்சனைகளுக்கும் தலைமை செயலாளரும், அதிகாரிகளும்தான் காரணம் என கூறுகின்றனர். அதுகுறித்தும் விவாதிக்க வேண்டும் என கூறினார்.
இதைத்தொடர்ந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் இதே கருத்தை வலியுறுத்தினர். அப்போது சபாநாயகர் குறுக்கிட்டு, அலுவல் முடிந்தவுடன் பேச அனுமதிப்பதாகவும், உறுப்பினர்கள் அனைவரும் அமரும்படியும் கேட்டுக்கொண்டார். ஆனால் தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பேசினர். இதனால் சபையில் கூச்சல், குழப்பம் நிலவியது.
9.45 மணியளவில், சட்டசபையில் மக்கள் பிரச்சனைகளை பேச அனுமதிக்காததை கண்டித்து வெளிநடப்பு செய்வதாகக்கூறி எதிர்கட்சித்தலைவர் சிவா வெளிநடப்பு செய்தார். அவருடன் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாகதியாகராஜன், காங்கிரஸ் எல்.ஏ.க்கள் வைத்தியநாதன், ரமேஷ்பரம்பத் ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம், சந்திராயன், ஜி20 மாநாடு வெற்றி ஆகியவற்றுக்கு பிரதமருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்து பேசினார்.
அப்போது மீண்டும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் சிவா தலைமையில் சபைக்கு வந்தனர். அவர்கள் சபாநாயகர் இருக்கை முன்பு நின்று, அலுவல் பட்டியலில் இல்லாததை எப்படி பேசலாம்? என கேள்வி எழுப்பினர்.
அதற்கு சபாநாயகர், நன்றி அறிவிப்பு அலுவல் பட்டியலில் இடம்பெறாது என தெரிவித்தார். இதனால் சபாநாயகரிடம் சிறிதுநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
- முதல் நிகழ்வாக இரங்கல் குறிப்பை சபாநாயகர் வாசித்தார்.
- சட்டசபையில் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையை முதல்-அமைச்சர் ரங்கசாமி சமர்ப்பித்தார்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபை கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு கூடும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் மைய மண்டப படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். அவரை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சமாதானப்படுத்தி தன் அறைக்கு அழைத்து சென்றார். இதனால் சட்டசபை நிகழ்வுகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.
9.37 மணிக்கு சட்டசபை நிகழ்வுகள் தொடங்கியது. முதல் நிகழ்வாக இரங்கல் குறிப்பை சபாநாயகர் வாசித்தார். இதையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜி20 மாநாடை வெற்றிகரமாக நடத்தியுள்ளதற்கும் சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது ஆகியவற்றுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.
தொடர்ந்து சட்டசபையில் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையை முதல்-அமைச்சர் ரங்கசாமி சமர்ப்பித்தார்.
தொடர்ந்து 2023-ம் ஆண்டு புதுவை எம்.எல்.ஏ.க்கள் தகுதியிழத்தலை தடுத்தல் திருத்த சட்ட முன்வரைவை அமைச்சர் லட்சுமிநாராயணனும், சரக்கு மற்றும் சேவை வரி திருத்த முன்வரைவை முதல்-அமைச்சர் ரங்கசாமியும் தாக்கல் செய்தனர்.
இந்த மசோதாக்கள் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து காலை 10 மணிக்கு சபையை காலவரையின்றி ஒத்தி வைப்பதாக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் அறிவித்தார்.
புதுவை சட்டசபை 23 நிமிடத்தில் முடிவடைந்தது.
- காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு பல ஆண்டாக மனைப்பட்டா கோரி வருகிறோம்.
- எம்.எல்.ஏ.க்கள் கூறும் பணிகளை கலெக்டர் செய்வதில்லை என குற்றம்சாட்டினார்.
புதுச்சேரி:
புதுவை பா.ஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் தனது தொகுதியில் இலவச மனைப்பட்டா வழங்குவது உள்ளிட்ட வருவாய்த்துறை சார்ந்த பணிகள் நடைபெறவில்லை என குற்றம்சாட்டியிருந்தார்.
இதற்காக சட்டசபை கூடும் நாளில் தர்ணா போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்து சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் கடிதம் அளித்திருந்தார்.
இந்நிலையில் புதுவை சட்டசபை இன்று காலை கூடியது. காலை 9 மணிக்கு சட்டசபைக்கு வந்த பாஜனதா எம்.எல்.ஏ. கல்யாணசுந்தரம் சட்டசபையின் படிக்கட்டில் அமர்ந்து தர்ணா போராட்டத்தை தொடங்கினார்.
9.10 மணியளவில் சுயேச்சை எம்.எல்.ஏ. அங்காளன் சட்டசபைக்கு வந்தார். அவரும் கல்யாண சுந்தரத்துக்கு ஆதரவாக படிக்கட்டில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.
தனது தொகுதியிலும் இதே பிரச்சினை நிலவுவதாக குற்றம்சாட்டினார்.
9.30 மணிக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சட்ட சபைக்கு வந்தார். அவர் தர்ணாவில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.களை சமரசம் செய்து, தனது அறைக்கு கையோடு அழைத்துச்சென்றார். இதனால் எம்.எல்.ஏ.கள் தர்ணா ½ மணி நேரத்தில் முடிவடைந்தது.
முன்னதாக கல்யாண சுந்தரம் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறும்போது,
காலாப்பட்டு தொகுதி மக்களுக்கு பல ஆண்டாக மனைப்பட்டா கோரி வருகிறோம்.
ஆனால் அதற்கான பணிகள் எதுவும் நடைபெறவில்லை. வருவாய்த்துறை சார்ந்த எந்த பணிகளும் நடைபெறவில்லை. வருவாய்த்துறை செயலரான கலெக்டரை சந்திக்க முயற்சித்தால் அவர் எம்.எல்.ஏ.க்களை சந்திப்பது இல்லை. அவர் முதலமைச்சர் அருகிலேயே அமர்ந்து கொள்கிறார். எம்.எல்.ஏ.க்கள் கூறும் பணிகளை கலெக்டர் செய்வதில்லை என குற்றம்சாட்டினார்.
- அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவு
- புதுவையில் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து கவர்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்.
புதுச்சேரி:
விஸ்வகர்மா தினத்தை யொட்டி ஆலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் நடந்தது.
கவர்னர் தமிழிசை தலைமை தாங்கினார். தலைமை செயலர் ராஜீவ் வர்மா, வளர்ச்சி ஆணையர் ஜவகர், தொழிலாளர் நலத்துறை செயலர் முத்தம்மா, தொழில்துறை இயக்குநர் ருத்ர கவுடு மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் குமரன் மற்றும் வங்கி அதிகாரிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், விஷ்வகர்மா திட்டத்தை புதுவையில் சிறப்பாக செயல்படுத்துவது குறித்து கவர்னர் அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார். பின்னர், கவர்னர் தமிழிசை வழங்கிய ஆலோசனை வருமாறு:-
புதுவையில் விஸ்வகர்மா தொழில்களை அடையாளம் கண்டு அதன் தொழிலா ளர்கள் குறித்த முழுமையாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும். விஷ்வகர்மா தொழிலாளர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை விரைவில் நடத்த வேண்டும். விஷ்வகர்மா தொழிலாளர்கள் தங்களை பதிவு செய்து கொள்வ தற்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
விஸ்வகர்மா திட்டத்தைப் புதுவையில் விரைவாக செயல்படுத்த வேண்டும். விஸ்வகர்மா தொழிலாளர்களுக்கு மத்திய-மாநில அரசுகள் வழங்கும் உதவிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். விஸ்வகர்மா தொழில் மேளா நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
- பா.ஜனதா கூட்டணி முறிவை அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார். இது புதுவை மாநில அ.தி.மு.க. தொண்டர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பாகும்.அண்ணாமலை தனது சிறுபிள்ளைத்தனமான பேச்சுக்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும்.
புதுவையில் அ.தி.மு.க. தொண்டர்களின் அயராத உழைப்பால் என்ஆர்.காங்கிரஸ், பாரதீயஜனதா ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளது. அ.தி.மு.க.வின் முதுகில் குத்தியவர்கள் யார்? என்பது புதுவை மக்களுக்கு நன்றாக தெரியும்.
அ.தி.மு.க.வின் தயவு தேவையில்லை என்றால் ஆட்சியை கலைத்து விட்டு என்ஆர்.காங்கிரஸ் -பா.ஜனதா கூட்டணி அரசு தேர்தலை சந்திக்கட்டும். பா.ஜனதா கூட்டணி முறிவை அதிமுக தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
ஜெயலலிதாவின் மறுஉருவமாக திகழும் பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்த அறிவிப்பை அதிகாரப்பூர்வ மாக அறிவிக்க வேண்டும். இனி எந்த காலத்திலும் பா. ஜனதாவுடன் கூட்டணி இல்லை என அறிவிக்கும் நன்னாளை அ.தி.மு.க. தொண்டர்கள் எதிர்நோக்கியுள்ளனர்.
இவ்வாறு வையாபுரி மணிகண்டன் அறிக்கையில் கூறியுள்ளார்.
- சுற்றுலா பயணிகள் வீசி சென்ற 1.5 டன் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டது.
- தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
புதுச்சேரி:
கோட்டக்குப்பத்தை அடுத்த தந்திராயன்குப்பம் கடற்கரையில் தூய்மை பாரத நகர்ப்புற இயக்கம் 2.0 தூய்மைப்பணி நடந்தது.
கோட்டக்குப்பம் நகராட்சி சுகாதார பிரிவு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்கு நகர்மன்ற தலைவர் ஜெயமூர்த்தி, ஆணையர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணியை தொடங்கி வைத்தனர்.
கடற்கரையில் நடந்த தூய்மை பணி நிகழ்ச்சியில் தூய்மையே சேவை அடையாள சின்னம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தூய்மை உறுதி மொழி எடுக்கப்பட்டது. இந்த துப்புரவு பணியில் சுமார் 2 கிலோ மீட்டர் கடற்கரை பரப்பில் சுற்றுலா பயணிகள் வீசி சென்ற 1.5 டன் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகள் அகற்றப்பட்டது.
மேலும் மனிதக் கழிவுகளை மனிதர்கள் அல்ல கூடாது என்பதை வலியுறுத்தியும் இதற்காக உதவி செய்ய தமிழக அரசு வழங்கியுள்ள இலவச தொலைபேசி எண்ணான 14420 கடற்கரையில் மனித சங்கிலி போல் அமர்ந்து தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
- தட்டாஞ்சாவடி கம்பளி சுவாமி மடத்தில் மீனாட்சி தேவி பவனானி பிறந்த நாள் விழா நடந்தது.
- யோகாஞ்சலி சங்க நிர்வாகிகள், யோகா மாணவர்கள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி சித்தர் பூமி யோகாசன விளையாட்டு சங்கம் சார்பில் தட்டாஞ்சாவடி கம்பளி சுவாமி மடத்தில் மீனாட்சி தேவி பவனானி பிறந்த நாள் விழா நடந்தது.
இதில், யோகாஞ்சலி நாட்டியாலயா பொது மேலாளர் சண்முகத்திற்கு, மேஜர் தியான்சந் சிறந்த மூத்த அதிகாரி என்ற விருதை, மீனாட்சி தேவி பவனானி மற்றும் சங்க தலைவர் ஆனந்த பாலயோகி பவனானி இணைந்து வழங்கினர்.
நிகழ்ச்சியில் யோகாஞ்சலி சங்க நிர்வாகிகள், யோகா மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- வருகிற 22-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்பட உள்ளன.
- காலை 8 மணி முதல் ஊர்வலம் முடியும் வரை மதுக்கடைகள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி, புதுச்சேரியில் பல பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த சிலைகள் வருகிற 22-ந்தேதி ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு கரைக்கப்பட உள்ளன.
இந்த நிலையில், செப்டம்பர் 22-ந்தேதி ஊர்வலம் செல்லும் பகுதிகளில் மதுக்கடைகள் அடைக்கப்படுகின்றன. காலை 8 மணி முதல் ஊர்வலம் முடியும் வரை நேரு வீதி, காமராஜர் சாலை உள்ளிட்ட வழிகளில் மதுக்கடைகள் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- அமைச்சர் நமச்சிவாயம் வழங்கினார்
- அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார்.
புதுச்சேரி:
திருக்கனூரை அடுத்த கே.ஆர்.பாளையம் காமராஜர் விளையாட்டு கழகம் சார்பில் 15-ம் ஆண்டு கைப்பந்து போட்டி கடந்த 16-ந் தேதி தொடங்கியது.
புதுவை, தமிழகத்தை சேர்ந்த 35 அணிகள் பங்கேற்றன. இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
வில்லியனூர் மாவட்ட பா.ஜனதா செயலாளர் தங்கராசு தலைமை வகித்தார். திருநாவுக்கரசு வரவேற்றார். செந்தில் வாழ்த்தி பேசினார்.
விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு கோப்பையை வழங்கினார்.
விழுப்புரம் ராஜு பிரெண்ட்ஸ் அணிக்கு முதல் பரிசாக ரூ 25 ஆயிரமும், கோப்பையும், 2-வது பரிசாக கேஆர்.பாளையம் காமராஜர் விளையாட்டு கிளப் அணிக்கு ரூ 22 ஆயிரமும், 3-வது பரிசாக மயிலாடு துறை அணிக்கு ரூ.18 ஆயிரமும், 4-வது பரிசாக புதுகுப்பம் கே.ஜி. பிரெண்ட்ஸ் அணிக்கு ரூ. 15 ஆயிரமும், 5-வது பரிசாக வாதானூர் அணிக்கு. ரூ. 12 ஆயிரமும், 6-வது பரிசாக நரேஷ் பிரெண்ட்ஸ் அணிக்கு
விழாவில் பா.ஜனதா நிர்வாகிகள் கலிய பெருமாள், செல்வகுமார், கண்ணன், பாலச்சந்தர், காமராஜ், ராதாகிருஷ்ணன், மணிகண்டன், அருள்குமார், வினோத், ஜெயச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- காட்டேரிக்குப்பத்தில் 12 அடி, வில்லியனூரில் 10 அடி உயர விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
- இளைஞர்கள் சங்கங்கள் சார்பில் 100 க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று உற்சாகமாக கொண்டா டப்பட்டது.
இந்து முன்னணி, விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில் புதுவை முழுவதும் 150 இடங்களில் பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சாரம் அவ்வை திடலில் 21 அடி உயர விநாயகர் சிலைக்கு நேற்று மாலை பூஜை செய்யப்பட்டது.
விழா பேரவை தலைவர் குமரகுரு தலைமை வகித்தார். முன்னாள்
எம்.எல்.ஏ. ஓம்சக்திசேகர் வரவேற்றார். இதில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம்,
எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், சிவசங்கரன், பா.ஜனதா தலைவர் சாமிநாதன், விழா பேரவை பொதுச் செயலாளர் சனில்குமார், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
காலாப்பட்டில் 19 அடி, பெரியார் நகர், வைத்திக்குப்பத்தில் 14 அடி, கோரிமேடு, காட்டேரிக்குப்பத்தில் 12 அடி, வில்லியனூரில் 10 அடி உயர விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
புதுவை நகர், புறநகர் பகுதியில் 5 அடி முதல் 21 அடி வரை விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது. இதுதவிர ஆங்காங்கே குடியிருப்போர், ஆட்டோ உள்ளிட்ட வாகன ஒட்டுனர்கள், இளைஞர்கள் சங்கங்கள் சார்பில் 100 க்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள் அமைக்கப் பட்டுள்ளது.
புதுவையில் பல்வேறு பகுதி களில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை 3 இடங்களில் விஜர்சனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கிராமப்புற பகுதிகளில் இருந்து வரும் சிலைகள் நாளை (20-ந் தேதி) காலாப்பட்டு, நல்லவாடு ஆகிய கடற்கரை பகுதிகளில் விஜர்சனம் செய்யப்படுகிறது.
2-ம் கட்டமாக நகரப்பகுதி முழுவதும் உள்ள சிலைகள் வருகிற 22-ந் தேதி கடற்கரை சாலையில் விஜர்சனம் செய்யப்படுகிறது. 22-ந் தேதி மதியம் நகர பகுதியில் உள்ள சிலைகள் அனைத்தும் சாரம் அவ்வை திடலுக்கு கொண்டு வரப்படுகிறது. அங்கிருந்து நேருவீதி, காந்திவீதி, படேல் சாலை வழியாக கடற்கரை சாலைக்கு கொண்டு செல்லப்பட்டு விஜர்சனம் செய்யப்படுகிறது.






