என் மலர்
புதுச்சேரி

எம்.ஐ.டி. கல்லூரியில் மாணவர்களுக்கான சிறப்பு பயிலரங்கம் நடந்த போது எடுத்த படம்.
எம்.ஐ.டி. கல்லூரியில் மாணவர்களுக்கான சிறப்பு பயிலரங்கம்
- 3-ம் ஆண்டு இறுதி பொறியியல் மாணவர்களுக்கு எம்.ஐ.டி. கல்லூரியில் சிறப்பு பயிலரங்கம் நடைபெற்றது.
- டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன அதிகாரி ஷேமா பிரகாஷ், விஜய் ஆகியோர் வழிநடத்தினர்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்த்தாள் குப்பம் மணக்குளவிநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் வேலை வாய்ப்பு துறை மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் இணைந்து 3-ம் ஆண்டு இறுதி பொறியியல் மாணவர்களுக்கு எம்.ஐ.டி. கல்லூரியில் சிறப்பு பயிலரங்கம் நடைபெற்றது.
இப்பயிலரங்கத்தை எம்.ஐ.டி. கல்லூரியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணைதலைவர் சுகுமாறன் மற்றும் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தார்.
கல்லூரி முதல்வர் மலர்க்கண் வரவேற்புரையாற்றினார். டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன மேலாளர் கணேஷ் திருநாவுக்கரசு பயிலரங்கை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இப்பயிலரங்கத்தை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன அதிகாரி ஷேமா பிரகாஷ், விஜய் ஆகியோர் வழிநடத்தினர்.
இதற்கான ஏற்பாடுகளை வேலை வாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் மற்றும் பேராசிரியர் மெய்யப்பன் செய்திருந்தார்.






