என் மலர்
புதுச்சேரி
- கலெக்டர் வல்லவன் தொடங்கி வைத்தார்
- பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் செய்தி ருந்தனர்.
புதுச்சேரி:
புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் 7 நாள் சிறப்பு முகாம் தொடங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக புதுவை மாவட்ட கலெக்டர் வல்லவன் கலந்துகொண்டு முகாமினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
சிறப்பு விருந்தி னர்களாக மாநில அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கி ணைப்பாளர் சதீஷ்குமார், பள்ளி அளவிலான நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நாட்டு நல பணித்திட்ட சீருடை மற்றும் குறிப்பேடுகள் வழங்கி னார்கள்.
புதுச்சேரி மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
மேலும் கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் பயில உள்ள மாணவர் நாகதேவாவுக்கு ஸ்டெதஸ்கோப் வழங்கினார்.
ரத்தினவேல் காமராஜ், ரங்கநாயகி வளவன் முன்னிலை வகித்தனர்.
பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளியின் துணை முதல்வர் வினோலியா பள்ளியின் ஆலோசகர் ரத்தின பிரியா அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளியின் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் ஜெயந்தி, பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் செய்திருந்தனர்.
- அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்
- கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இதை யொட்டி மாவட்டத்தில் திருநகர், பெ ரியபேட் , ஒப்பிலார் மணியர் கோவில் வீதி, கோவில்பத்து, நே ருநகர், கோட்டுச்சேரி, தருமபுரம், மதகடி, ஏழை மாரியம்மன் கோவில் மற்றும் பொதுஇடங்களில் 54 விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. காரைக்கால் சக்தி விநாயகர் கமிட்டி மற்றும் இந்து முன்னணி அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலத்தை சிறப்பு பூஜைக்கு பிறகு அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் காரைக்கால் இந்து முன்னணி பொது செயலர் விஜயன், மாவட்ட தலைவர் கணேஷ், நகர தலைவர் ராஜ்குமார், பா.ஜ.க. மாநில துணை தலைவர் அருள்முருகன், மாவட்ட தலைவர் சேனாதிபதி, முன்னாள் மாவட்ட தலைவர் மீனாட்சிசுந்தரம் மற்றும் சக்தி விநாயகர் விழா கமிட்டி நிர்வாகிகள் உள்பட திரளான இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலம் காரைக்காலின் முக்கிய வீதிகள் வழியாக கிளிஞ்சல்மேடு கடற்கரைக்கு சென்றது.
அங்கு கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலையில் விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
- கவர்னருக்கு மாணவர் பெற்றோர் நலச்சங்கம் கோரிக்கை
- மாணவர்கள் தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலையில் காலியாக உள்ள இடங்க ளிலும் விண்ணப்பித்து பயன்பெற ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
புதுச்சேரி:
புதுவை மாநில மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா கவர்னருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
முதுநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்பிற்கு அகில இந் திய அளவில் நடைபெற உள்ள 3-ம் கட்ட மாப்-அப் கலந்தாய்வுக்கு பி.ஜி. நீட் நுழைவுத்தேர்வு 2023-24 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்திருந்தா லும் விண்ணப்பிக்கலாம் என ஆணையை பிறப்பித் துள்ளது.
எனவே தற்போது புதுவை மாநில அரசால் சென்டாக் கமிட்டி மூலம் நடத்தப்பட்ட 2-ம் கட்ட முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை முடிவடையும் நிலையில், 3-ம் கட்ட மற்றும் மாப்-அப் கலந்தாய்விற்கு புதுவை மாநிலத்தை இருப்பிடமாகக் கொண்டு, சென்டாக் மூலம் விண்ணப்பிக்க ஒரு வாய்ப்பை பெற்றுள்ளனர்.
அதேபோல், எம்.சி.சி.யால் நடத்தப்படவுள்ள 3-ம் கட்ட மாப்-அப் கலந்தாய் வில் அகில இந்திய ஒதுக் கீட்டில் இதுவரை நிரப்பப் படாமல் காலியாக உள்ள மாணவர்கள் விரும்பி பயிலும் இருதய நோய்சார்ந்த படிப்பு, குழந்தைநல மருத்துவம், எலும்பு சம்மந்தப்பட்ட மருத்துவ படிப்பு, தோல் சிகிச்சை, நுண் கதிரியியல், ரேடியாலஜி, மன நோய், நரம்பியல் போன்ற முக்கியமான பாடப்பிரிவு களுக்கு புதுவை மாநிலத் தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மாணவர்கள் அகில இந்திய அளவில் காலியாக உள்ள அரசு ஒதுக்கீட்டிலும், பணம் படைத்த செல்வந்தர் மாணவர்கள் தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலையில் காலியாக உள்ள இடங்க ளிலும் விண்ணப்பித்து பயன்பெற ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
எனவே, புதுவை அரசும், புதுவை சுகா தாரத்துறையும், திருத்தப் பட்ட புதிய மதிப்பெண் அடிப்படையில் முது நிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான 3-ம் கட்ட மாப்-அப் கலந்தாய்வினை சென்டாக் மூலம் நடத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மருத்துவ நிபுணர் அலெக்ஸ் சக்காரியா பங்கேற்பு
- ஒரு மூச்சு எண்ணிக்கை கணக் கீடு மூலம் மன இறுக்கம் குறைக்கலாம் இவ்வாறு அவர் பேசினார்.
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவ மனையில், மன அழுத்தத்தை குறைப்பது தொடர் பான தொடர் மருத்துவ கருத்தரங்கு நடந்தது. சமுதாய மருத்துவ துறை மற்றும் மருத்துவ கல்வி பிரிவு இணைந்து நடத்திய இக்கருத்தரங் கிற்கு சமுதாய மருத்துவ துறை தலைவர் ராஜேஷ் வரவேற்றார்.
பிரபல பொது மருத் துவ நிபுணரான அலெக்ஸ் சக்காரியா, மன அழுத் தம் தொடர்பான செயலியை தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசியதாவது:-
மன அழுத்தத்தை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் 'ரெமர்சய்ஸ்' செயலியில் குறிப்பிட்ட பயிற்சிகள் மூலம் நம்மால் குறைக்க முடியும்.
கனி வான பேச்சு, சீரான உடற் பயிற்சி, மூச்சு பயிற்சி உள்ளிட்ட பல்வேறு சின்ன சின்ன பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும்.
மேலும் அதற்குரிய செயலி நமக்கு நினைவூட்டும். மருத்துவ மற்றும் செவிலிய மாணவ-மாணவிகள் பல குழுக்களாக இணைந்து ஒரு மூச்சு எண்ணிக்கை கணக் கீடு மூலம் மன இறுக்கம் குறைக்கலாம் இவ்வாறு அவர் பேசினார்.
பின்னர், மருத்துவ மாணவர்களுடன் கலந்து ரையாடினார். அவருக்கு, பொது மருத்துவ நிபுணர் சுவாமிநாதன், மகப்பேறு மருத்துவர் பத்மா ஆகியோர் நினைவு பரிசு வழங்கினர்.
நிகழ்ச்சியை பேராசிரியர் ஜாய் தொகுத்து வழங்கினார்.
- பொதுமக்கள் வலியுறுத்தல்
- தற்போது மதகடிப்பட்டிலிருந்து திருக்கனூர் செல்லும் சாலை முற்றிலுமாக அடைக்கப்பட்டு சர்வீஸ் சாலை போடும்பணி நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
விழுப்புரம்- நாகப் பட்டினம் தேசிய நெடுஞ் சாலை பணி தற்போது நடை பெற்று வருகிறது. இதற்காக மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படுகிறது.
இந்த மேம்பாலத்தில் இருபுறங்களிலும் சர்வீஸ் சாலை போடப்பட்டு வரும் நிலையில் தற்போது மதகடிப்பட்டிலிருந்து திருக்கனூர் செல்லும் சாலை முற்றிலுமாக அடைக்கப்பட்டு சர்வீஸ் சாலை போடும்பணி நடைபெற்று வருகிறது.
இதனால் புதுச்சேரியில் இருந்து மதகடிப்பட்டு வழியாக திருக்கனூர் செல்லும் அனைத்து வாக னங்களும் மேம்பாலத்தின் மேல் சென்று அங்குள்ள தனியார் மருத்துவ கல்லூரி வழியாக அனைத்து வாக னங்களும் திருப்பி விடப் பட்டுள்ளன.
இதனால் 2 சக்கர வாகனத்தில் செல்வோர் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி யுள்ளனர். கல்லூரி மற்றும் பள்ளிக்கு செல்லும் மாணவ- மாணவிகள் தொலை தூரம் சென்று வரவேண்டிய சூழல் உள்ளது.
எனவே போர்க்கால அடிப்படையில் சர்வீஸ் சாலை பணியை முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் நடைபெற்றது.
- செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினர்.
புதுச்சேரி:
புதுவை மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியில் அமைந்துள்ள வேளாண் மற்றும் தோட்டக்கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பாடப்பிரிவு தொடக்க விழா நடை பெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு தக்சஷீலா பல்கலைக்கழக வேந்தரும் மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலான் இயக்குநர் தனசேகரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுகுமாறன் செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினர்.
கல்லூரியின் இயக்குனரும் மற்றும் முதல்வருமான டாக்டர் வெங்கடாசலபதி வரவேற்புரையாற்றினார்.
கல்லூரியின் பதிவாளர் அப்பாஸ் மொய்தின் தேர்வு கட்டுப்பாட்டாளர் ஜெயக்குமார் அகாடமிக் டீன்கள் அன்புமலர் அறிவழகர் கல்லூரியின் ஆராய்ச்சித் துறை டீன் வேல்முருகன் வேலைவாய்ப்புத்துறை அதிகாரி கைலாசம் ஸ்கூல் ஆப் ஆக்கிடெச்சர் முதல்வர் மனோகரன் கலை அறிவியல் கல்லூரி டீன் முத்துலட்சுமி அலைடு ஹெல்து சயின்ஸ் டீன் கோபால், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை டீன் முகமது யாசின் சட்ட கல்வித்துறை டீன் சந்திர சேகர், பிசியோதெரபி டீன் சிதம்பரம், பார்மசி டீன் தனலட்சும் மற்றும் எஸ்.எம்.வி. முதல்வர் அனிதா உள்பட அனைத்து கல்லூரியின் துறைத்தலை வர்கள் பேராசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முடிவில் வேளாண் கல்லூரியின் டீன் முகமது யாசின் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் உள்பட 500-க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் ஆணையரை சந்தித்து கென்னடி எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் ஆணையரை சந்தித்து கென்னடி எம்.எல்.ஏ. அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று கொசு மருந்து அடிக்கும் பணி உப்பளம் தொகுதியில் தொடங்கப்பட்டது.
இதனை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். மேலும் இப்பணியின் பொழுது அதிகாரிகள் வீடு, வீடாக சென்று டெங்கு கொசு தடுப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
- 11 மீனவ கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத் தார்கள் ஆலோசனைக் கூட்டம், காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறை முகத்தில் நடைபெற்றது.
- புதுச்சேரி முதலமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர், மாவட்ட மீன் வளத்துறை அலுவகலத் திற்கு அனுப்பி வைத்தனர்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத் தில் உள்ள காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி மேடு, மண்ட பத்தூர், பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத் தார்கள் ஆலோசனைக் கூட்டம், காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறை முகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை ஒட்டிய கடற்கரை முகத்து வாரத்தை தூர்வார வேண்டும், மீனவ கிராம சாலைகளை சரிசெய்ய வேண்டும், அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (22.9.23) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டு, அதன் நகலை, புதுச்சேரி முதல மைச்சர், மீன்வளத்துறை அமைச்சர், மாவட்ட மீன் வளத்துறை அலுவகலத் திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், 22-ந் தேதி முதல், மீன்பிடி படகுகளை, மீன்பிடித் துறைமுகத்தி லிருந்து கொண்டு சென்று, கடற்கரை சாலையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகம் முன்பு உள்ள அரசலாற்றில் நிறுத்திவைக்கப்படும் என்றும் மீனவர்கள் தெரி வித்துள்ளனர்.
- அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமையை வெளிக்கொண்டு வர உதவி செய்வது என் வாழ்க்கையில் மிகப் பெரிய பேராக அமையும்.
- மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு பயிற்சி வழங்கப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரி அரசு பள்ளி மாணவர்களுக்கான "திறன் அறிதல்" நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கவர்னர் தமிழசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.
பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் அரசு பள்ளி மாணவர்கள் 10 பேர் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை தனித்தனியாக வெளிப்படுத்தினர்.
இதில் பரத நாட்டியம், சிலம்பாட்டம், குரலிசை, வாத்திய இசை, கழிவுப் பொருட்களில் இருந்து கலைப்பொருட்கள் செய்வது, அறிவியல் செய்முறைகள் போன்ற திறமைகளை நிகழ்த்திக் காட்டினர்.
இதனை பார்த்து மகிழ்சியடைந்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு திறமையை வெளிக்கொண்டு வர உதவி செய்வது என் வாழ்க்கையில் மிகப் பெரிய பேராக அமையும்.
குழந்தைகளின் உடல் நலம் போலவே மனநலமும் பாதிக்கப்படுகிறது. மன அழுத்தத்தை போக்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.
மாணவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளும் அளவுக்கு பயிற்சி வழங்கப்படும். இதற்கு கவர்னர் மாளிகை மாணவர்களுக்கு உதவி செய்யும்.
இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார்.
- பெண்களுக்கு சட்டமன்றம், பாராளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிரதமர் முடிவெடுத்துள்ளார்.
- தெலுங்கானா கவர்னர் மாளிகையில் கூட அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்க உள்ளது.
புதுச்சேரி:
தமிழிசை சவுந்தரராஜன் புதுவை கோரிமேடு அருகே உள்ள ஆலங்குப்பம் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளியை பார்வையிட்டார்.
ஸ்மார்ட் வகுப்பறையை பார்வையிட்ட அவர், மாணவர்களோடு கலந்துரையாடி பாடம் நடத்தினார். மேலும் மாணவர்களுக்கு மதிய உணவினையும் பரிமாறினார்.
அதைத்தொடர்ந்து கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெண்களுக்கு சட்டமன்றம், பாராளுமன்றத்தில் 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிரதமர் முடிவெடுத்துள்ளார். இது பெண்கள் பொது வாழ்க்கைக்கு வர உதவியாக இருக்கும்.
இந்த இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும்போது, புதுவை மாநிலத்தில் 11 பெண் எம்.எல்.ஏ.க்களும், தமிழகத்தில் 77 பெண் எம்.எல்.ஏ.க்களும், 13 பெண் எம்.பி.க்களும் இருப்பார்கள்.
கவர்னர் உண்மையாக மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று அடிப்படையில் என்னிடம் வரும் கோப்புகள், அதிகாரிகளிடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில்தான் சிலவற்றை தெரிவிக்கிறேன். அதற்காக பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
குடும்ப தலைவிகளுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் நல்ல எண்ணத்தோடு தொடங்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் மிகவும் கடுமையாக முயற்சித்து மருத்துவ கல்வியில் 10 சதவீத இடஒதுக்கீட்டை பெற்றுள்ளோம். அதற்காக நன்றி தெரிவித்து பிரதமருக்கு மாணவிகள் கடிதமும் எழுதியுள்ளனர்.
தெலுங்கானா கவர்னர் மாளிகையில் கூட அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களின் திறன் மேம்பாட்டு பயிற்சி நடக்க உள்ளது. கல்வி சாரா செயல்பாடுகளில் விளையாட்டு, கலை, பண்பாடு ஆகியவற்றில் மாணவர்களுடைய திறமையை மேம்படுத்துவதற்காகவும், மற்ற குழந்தைகளை ஊக்கப்படுத்துவதற்கும் எல்லா விதத்திலும் உறுதுணையாக இருப்பதற்கும், பொது போட்டிகளில் அவர்கள் கலந்து கொள்ள உதவி செய்யும் நோக்கத்தில் இந்த திட்டத்தை தொடங்குகிறோம்.
அரசு ஆஸ்பத்திரிகளும், அரசு பள்ளிகளும் சாமானிய மக்களுக்கு பலன் தர வேண்டும் என்பது தான் என்னுடைய அடிப்படையான ஆசை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கால் பாதத்தின் முன்பகுதி செயல்படாமல் காலை இழுத்து நடக்க வேண்டிய நிலை உருவானது.
- வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இதில் தீர்ப்பு கூறப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை அருகே தமிழக பகுதியான கோட்டக்குப்பத்தை அடுத்த நடுக்குப்பத்தை சேர்ந்தவர் ஆறமுகம். அவரது மனைவி அமுதா (வயது 53). இவருக்கு கடந்த 2006-ம் ஆண்டு வலது கால் முட்டியின் பின்புறம் நீர்க்கட்டி ஏற்பட்டது.
இதனை சரி செய்ய இவர், புதுவை புஸ்சி வீதியில் தனியார் கிளினிக் நடத்தி வரும் டாக்டர் ஒருவரிடம் சிகிச்சை பெற்று வந்தார்.
தொடர்ந்து அவரை கடந்த 6-9-2006 அன்று தனியார் ஆஸ்பத்திரியில் சேர்ந்து நீர்க்கட்டியை நீக்குவதற்கான சிகிச்சையை மேற்கொண்டார். ஆனால் அவரது வலது கால் பாதத்தின் முன்பகுதி செயல்படாமல் காலை இழுத்து நடக்க வேண்டிய நிலை உருவானது.
இதனால் அதிர்ச்சிய டைந்த அமுதா 2007-ம் ஆண்டு ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
தனியார் டாக்டரின் கவனக்குறைவு மற்றும் சேவை குறைபாடு காரணமாக தனக்கு பல்வேறு கஷ்டங்கள் மற்றும் மனஉளைச்சல் ஏற்பட்டதாக கூறி புதுவை நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்தவழக்கு விசாரணை மாவட்ட நுகர்வோர் ஆணையத்தின் தலைவர் முத்துவேல், உறுப்பினர்கள் கவிதா, ஆறுமுகம் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இதில் தீர்ப்பு கூறப்பட்டது. மருத்துவ சிகிச்சையில் கவனக்குறைபாடு உள்ளதாக கருதி அமுதாவுக்கு ரூ.2 லட்சத்துக்கு 50 ஆயிரமும், மன உளைச்சல் மற்றும் பாதிப்புக்கு ரூ.1 லட்சமும், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது. தீர்ப்பின் நகலை பெற்ற 45 நாட்களுக்குள் அமுதாவுக்கு நஷ்டஈடு வழங்கா விட்டால் தீர்ப்பு தொகைக்கு ஆண்டுக்கு 9 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- 50-க்கும் மேற்பட்ட மக்காச்சோளம் மூட்டைகள் சாலையில் சிதறி கிடந்தன.
- கடலூர் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:
விழுப்புரம்- நாகப்பட்டி னம் 4 வழி சாலை பணிகள் திருபுவனை பகுதியில் நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் விருத்தாசலத்தில் இருந்து மக்கா சோளம் ஏற்றி வந்த லாரி திருபுவனை-கடலூர் சாலையில் திரும்பும் போது லாரி சாலையோர பள்ளத்தில் சாய்ந்து நின்றது.
இதனால் லாரியில் இருந்த 50-க்கும் மேற்பட்ட மக்காச்சோளம் மூட்டைகள் சாலையில் சிதறி கிடந்தன. அதனை பொதுமக்கள் வாரி சென்றனர்.
அதைத் தொடர்ந்து திருவாண்டார்கோவிலில் உள்ள கோழி தீவன தொழிற்ச்சாலையின் ஊழியர்கள் அந்த பகுதிக்கு வந்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் உதவியுடன் இன்னொரு லாரியில் கோழி தீவன மூட்டைகளை மாற்றி எடுத்துச் சென்றனர்.
இதனால் புதுச்சேரி- விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருபுவனை- கடலூர் சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் முற்றிலும் துண்டிக்கப்பட்ட நிலையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






