என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • முற்போக்கு கழக மாநாட்டில் தீர்மானம்
    • பெண்கள் அனைத்து பஸ்களிலும் இலவசமாக பயணிக்க அறிவிப்பு செய்ய வேண்டும்.

    புதுச்சேரி:

    அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் புதுவை மாநில 9-வது மாநாடு புதுவை தமிழ் சங்கத்தில் நடந்தது.

    மாநாட்டிற்கு மல்லிகா, மீனாட்சி, அற்புத மேரி தலைமை வகித்தனர். அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக புதுவை மாநில செயலாளர் விஜயா வரவேற்றார். மாநாடை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மார்க்சிஸ்ட்டு - லெனினிஸ்ட் மாநில செயலர் புருஷோத்தமன் தொடங்கி வைத்தார். தேசிய தலைவர் டாக்டர் ரத்திராவ் சிறப்புரையாற்றினார். மத்திய கமிட்டி உறுப்பினர் முருகன், மாவட்ட செயலர் முருகன் ஆகியோர் பேசினர். வேலை அறிக்கையை மாநில செயலாளர் விஜயா சமர்பித்தார்.

    மாநாட்டில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    மகளிர் ஆணையத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். மகளிர் உரிமைத்தொகை அனைத்து பெண்களுக்கும் வழங்க வேண்டும். பெண்கள் அனைத்து பஸ்களிலும் இலவசமாக பயணிக்க அறிவிப்பு செய்ய வேண்டும்.

    உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும். ரேஷன்கடைகளை திறக்க வேண்டும். நகர்ப்புற வேலை உறுதி திட்டம் கொண்டுவர வேண்டும். பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீட்டை செயல்படுத்தும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    • பா.ம.க. அறிக்கை
    • அதிகபட்சமாக பட்டியல் இனத்தவர் கலந்து கொள்ள இருக்கின்றார்கள் இவர்கள் ஏற்கனவே இட ஒதுக்கீட்டு அடிப்படையில் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநில பா.ம.க. மாநில அமைப்பாளர் கணபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    புதுவை மாநிலத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்க ளுக்கான பணி உயர்விலும் எம்.பி.சி. இட ஒதுக்கீடு பின்பற்ற வேண்டும். புதுவை மாநிலத்தில் நடக்க இருக்கின்ற காவல் துறைக்கான பதவி உயர்வு தேர்வில் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்காக கலந்து கொள்கின்ற காவல்துறையில் பணி யாற்றும் தலைமை காவலர் மற்றும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் எந்த அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள்?

    இதில் அதிகபட்சமாக பட்டியல் இனத்தவர் கலந்து கொள்ள இருக்கி ன்றார்கள் இவர்கள் ஏற்கனவே இட ஒதுக்கீட்டு அடிப்படை யில் பதவி உயர்வு பெற்று ள்ளனர்.

    மற்ற மாநிலங்க ளில் இட ஒதுக்கீடு வேலை வாய்ப்பில் ஒரு முறை தான் பயன்படுத்த ப்படுகின்றது.

    ஆனால் நமது புதுவை மாநிலத்தில் ஒவ்வொரு முறையும் பதவி உயர்வின் போது பட்டியல் இனத்தவர்க்கு மட்டும் இட ஒதுக்கீடு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது அவர்களின் உரிமை இதில் ஏதும் தவறு இல்லை ஆனால் இதனால் நீண்ட நாட்கள் பணிபுரியும் மிகவும் பின்தங்கிய சமுதாய பணியாளர்களின் இந்த வாய்ப்பு பறிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

    மேலும் பணிக்கு வந்து சில ஆண்டுகளே ஆன ஊழியர்கள் மூத்த பணியாளர்களை விட பதவி உயர்வு பெற்று இட ஒதுக்கீடு அடிப்படையில் உயர் பதவி அடைகிறார்கள். ஆதலால் நமது புதுவை மாநிலத்தில் மிகவும் பின்தங்கிய வகுப்பினராக உள்ளவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.

    பொருளாதார ரீதியாகவும் புதுவையில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பின் தங்கிய உள்ளனர்.மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ,பட்டியல் இனத்தவர் போன்றே பொருளாதார ரீதியில் சமமாகவே பின்தங்கிய உள்ளனர். என்பதை அரசு மேலான கவனத்தில் கொண்டு இந்த பணி உயர்விலும் எம் பி சி இட ஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் .

    • வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது.
    • ரூ. ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 401 செலுத்த வேண்டும் என பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 170-க்கும் மேற்பட்ட காலியாக உள்ள பி.டெக் சுயநிதி படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு நடந்தது.

    புதுவை, பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்றனர். கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது.

    10.30 மணிக்கு ஜே.இ.இ. தேர்வில் 50 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும், 11.30 மணிக்கு 50 மதிப்பெண்ணுக்கு குறைவாக பெற்ற மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடந்தது.

    காரைக்கால், மாகே, ஏனாமில் நோடல் அலுவலகத்தில் கலந்தாய்வு நடந்தது. கலந்தாய்வில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் தொழில்நுட்ப பல்லைக்கழக கலையரங்கில் இயங்கும் அலுவலகத்தில் சான்றிதழ்களை சமர்பித்து படிப்பில் உடனடியாக சேரலாம். சுயநிதி பாடங்களுக்கு ஆண்டு கட்டணமாக அட்டவணை இன மாணவர்களுக்கு ரூ.87 ஆயிரத்து 401, பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ. ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 401 செலுத்த வேண்டும் என பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் தெரிவித்துள்ளார்.

    • அதிகாரி எச்சரிக்கை
    • நிலுவைத்தொகை, மின் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை மின்துறை கிராம கோட்டம் (தெற்கு) செயற்பொறியாளர் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மின்துறை தீவிர மின் துண்டிப்பு மேற்கொள்ள இருப்பதால் கிராமம் (தெற்கு) கோட்டம் அலுவலகத்துக்கு உட்பட்ட அரியாங்குப்பம், தவளகுப்பம், கிருமாம்பாக்கம், பாகூர், கரிக்கலாம்பாக்கம், வடமங்கலம், திருவண்டார்கோவில், வாதானூர், கரியமாணிக்கம், கரையாம்புத்தூர் ஆகிய பிரிவு அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர்கள் அனைவரும் தங்களின் நிலுவைத்தொகை, மின் கட்டணத்தை உரிய நேரத்தில் செலுத்தி மின் இணைப்பு துண்டிப்பை தவிர்க்க வேண்டும். நிலுவைத்தொகை முழுமையாக செலுத்திய பிறகே மின் இணைப்பு வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஊழியராக பணியாற்றி வந்தார்.
    • குடித்துக் கொண்டு வேலைக்கு செல்லாமல் இருந்தால் எப்படி எனக்கும் தங்கைக்கும் திருமண நடக்கும் என்று ஆதங்கமாக பேசி இருந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை காலாப்பட்டு பிள்ளைசாவடி பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார் (வயது 48).

    பல்கலைகழக ஊழியர் இவர் காலாப்பட்டு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு 2 மகள்கள் ஒரு மகன் உள்ளனர். புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்க ழகத்தில் பணியாற்றி வரும் அய்யனார் அங்குள்ள அரசு குடியிருப்பு பகுதியில் குடும்பத்தோடு வசித்து வந்தார்.  பல்கலைக்கழகத்திற்கு வேலைக்கு செல்லாமல் காலை முதலே மது அருந்தி வந்துள்ளார்.

    இதனால் அய்யனாருக்கும் அவரது மனைவி அமுதாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. காலையில் வேலைக்குச் சென்று இரவு வீட்டுக்கு திரும்பிய ஐயனாரின் மகன் அருண் தந்தையிடம் ஏன் இப்படி குடித்துக் கொண்டி ருக்கிறாய்? திருமண வயதில் நானும் தங்கையும் உள்ளோம். இப்படி குடித்துக் கொண்டு வேலைக்கு செல்லாமல் இருந்தால் எப்படி எனக்கும் தங்கைக்கும் திருமண நடக்கும் என்று ஆதங்கமாக பேசி இருந்தார். இன்றுடன் மது குடிப்பதை நிறுத்தி விடுகிறேன் என அய்யனார் கூறிவிட்டு இரவு முழுவதும் மொட்டை மாடியில் மது குடித்துள்ளார்.

    இரவு சாப்பாட்டுக்கு கூட வீட்டிற்கு வரவில்லை. திடீரென நேற்று அதிகாலை சத்தம் கேட்டு அங்கு அருணும் அமுதாவும் சென்று பார்த்த போது அய்யனார் வீட்டின் 2-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து அக்கம் பக்கத்தினர் காலாப்பட்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி அரசு கதிர்காம மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து காலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்திவருகிறார்.

    • அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
    • முதலமைச்சர் ரங்கசாமியின் அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை என்.ஆர்.காங்கிரஸ், பா.ஜனதா கூட்டணி அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

    பெண்களுக்கு ரூ.1000 உதவித்தொகை, கியாஸ் மானியம், பெண் குழந்தைகளுக்கு ரூ.50 ஆயிரம் வைப்புத்தொகை என புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த கல்வி ஆண்டு முதல் புதுவையில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மத்திய அரசின் அனுமதி பெற்று அரசாணை வெளியிடப்பட்டது.

    இதன்படி புதுவையில் அரசு மருத்துவக்கல்லூரி, தனியார் மருத்துவ கல்லூரிகளில் மொத்தம் உள்ள 370 அரசு இடங்களில் 37 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு கலந்தாய்வு தொடங்கியுள்ளது. தனியார் பள்ளிகளில் படிக்க வைக்க வசதி இல்லாதவர்கள் அரசு பள்ளிகளில் படிக்கின்றனர்.

    எனவே மருத்துவக்கல்விக்கு தேர்வாகும் மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும் என பல்வேறு அரசியல்கட்சிகள், அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.

    இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமி அரசு பள்ளி மாணவர்ளுக்கு இலவச மருத்துவ கல்வி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

    அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ கல்வி படிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களின் பெற்றோர் கல்வி கட்டணம் செலுத்த சிரமப்படுகின்றனர்.

    எனவே முழு கல்வி கட்டணத்தையும் அரசே ஏற்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் கோரிக்கை வைத்தனர். பெற்றோர்களும் தங்களின் சிரமத்தை தெரிவித்தனர்.

    இதையேற்று அரசு பள்ளி மாணவர்கள் உள் ஒதுக்கீட்டில் மருத்துவ கல்வி படிக்க இடம் பெறும் மாணவர்களுக்கு கல்லூரிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணம் முழுவதையும் புதுவை அரசே செலுத்தும். தனியார் கல்லூரி நிர்வாகங்கள் அரசு பள்ளி மாணவர்களிடம் கட்டணம் கேட்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் அறிவித்துள்ளார்.

    முதலமைச்சர் ரங்கசாமியின் இந்த அறிவிப்பு அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தடையாக இருக்கும் அதிகாரிகளால் எம்.எல்.ஏ.க்கள் நலன் பாதிக்கப்படுகிறது.
    • கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர், முதலமைச்சரிடம் கூறிவிட்டோம்.

    புதுச்சேரி:

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், ரிச்சர்ட் ஜான் குமார், ராமலிங்கம், மற்றும் பா.ஜனதா ஆதரவு சுயேச்சை எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கரன், கொல்ல பள்ளி ஸ்ரீனிவாஸ் அசோக் உள்பட 7 எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினர்.

    அப்போது புதுவை மாநிலத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த அரசு அதிகாரிகள் தடையாக உள்ளனர். அவர்கள் முழு ஒத்துழைப்பு தருவது இல்லை. இதனால் தொகுதி வளர்ச்சிப்பணிகள் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

    எனவே ஒத்துழைப்பு தராத அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் தெரிவித்தனர். இதனை கேட்ட கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று எம்.எல்.ஏ.க்களிடம் உறுதியளித்தார்.

    தொடர்ந்து சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறும் போது, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த தடையாக இருக்கும் அதிகாரிகளால் எம்.எல்.ஏ.க்கள் நலன் பாதிக்கப்படுகிறது.

    எனவே அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கவர்னர், முதலமைச்சரிடம் கூறிவிட்டோம். அதிகாரிகள் தொடர்ந்து தவறுகள் செய்தால் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதி பெற்று என்னுடைய அதிகாரத்தை பயன்படுத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
    • 20 அடி உயரமுள்ள சிலை வைக்கப்பட்ட டிராக்டர் வாகனத்தை ஓட்டினார்.

    புதுச்சேரி:

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி பெரிய காலாப்பட்டு செல்லியம்மன் நகரில் விநாயகர் சதுர்த்தி ஒருங்கிணைப்பு பேரவை சார்பில் 20 அடி உயரமுள்ள விநாயகர் சிலை வைக்கப்பட்டது.

    18-ந் தேதி தொடங்கி சிறப்பு அபிஷேகங்களும் பூஜைகளும் செய்யப்பட்டது. தினமும் ஆன்மீக சொற்பொழிவு பெண்க ளுக்கு கோல போட்டிகள் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

    இந்த ஒருங்கிணைப்பு குழு சார்பில், நெசல், கொடூர், வில்வநத்தம், சின்ன காலப்பட்டு, பிள்ளை சாவடி, தலகாணிகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை வைத்து வழிபட்டு வந்தனர்.

    இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி 3-ம் நாளான நேற்று பல்வேறு பகுதிகளில் இருந்து ஊர்வமாக எடுத்துவரப்பட்ட விநாயகர் சிலைகள் செல்லியம்மன் நகரில் ஒன்றிணைந்தது. பெரிய விநாயகர் முன்பு செல்ல மற்ற ஊர்களில் இருந்து வந்த விநாயகர் அனைத்தும் பேரணியாக வாகனங்களில் வந்தது.

    விநாயகர் சதுர்த்தி ஒருங்கிணைப்பு பேரவையின் பொருளாளர் கண்ணன் தலைமையில் நடந்த விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார். அவர் 20 அடி உயரமுள்ள சிலை வைக்கப்பட்ட டிராக்டர் வாகனத்தை ஓட்டினார்.

    பேரணியாக வந்த விநாயகர் சிலைகள் பங்களா வீதி வழியாக புதுவை காலாப்பட்டு கடற்கரைக்கு கொண்டு வரப்பட்டு அங்கு அனைத்து சிலைகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

    20 அடி உயரமுள்ள விநாயக சிலை தத்ரூபவமாக பக்தர்களுக்கு காட்சியளிக்கும் வகையில் கிரேன் மூலம் கடலில் கரைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விநாயகர் சதுர்த்தி ஒருங்கிணைப்பு பேரவை நிர்வாகிகளும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த முக்கியஸ்தர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

    • ஊட்டச்சத்து விழிப்புணர்வு பதாகைகள், மற்றும் சீர்வரிசை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.
    • குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் நலதிட்டம் சார்பில் சமத்துவ வளையல் அணி விழா குருமாம்பேட் பகுதியில் அமைந்துள்ள சமுதாய நலக்கூடத்தில் கோலாகலமாக கொண்டா டப்பட்டது. நிகழ் ச்சிக்கு இயக்குனர் முத்துமீனா, துணை இயக்குனர் அமுதா, திட்ட அதிகாரி கருணாநிதி, குழந்தைகள் மேம்பாட்டு திட்ட அதிகாரி பாலாஜி ஆகியோர் தலைமை தாங்கினர். ஊட்டச்சத்து விழிப்புணர்வு பதாகைகள், மற்றும் சீர்வரிசை ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    இதனை தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு நலுங்கு வைக்கப்பட்டது. இதில் திரளான பொதுமக்கள், உறவினர்கள் கலந்து கொண்டு கர்ப்பிணிகளுக்கு நலுங்கு வைத்து அச்சதை தூவி ஆசி வழங்கினர்.

    பின்னர் கர்ப்பிணிகள் உண்ண வேண்டிய உணவு குறித்து ஊட்டச்சத்து விழிப்புணர்வு குறித்து விளக்க்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் நலத்திட்டம் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • வீடு வீடாக சென்று விழிப்புணர்வூட்டும் பிரசாரத்தை கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.
    • தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக தெருக்கள் மற்றும் வீடுகளைச் சுற்றி பள்ளி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி, புதுவை நகராட்சி, மாநில அரசின் மலேரியா,பைலேரியா நோய்த் தடுப்புத் துறை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது.

    இந்த விழிப்புணர்வு பிரசாரத்திற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களை பள்ளி முதல்வர் லூர்து சாமி வரவேற்று பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். புதுவை மாநில என்.எஸ்.எஸ். அலுவலர் சதீஷ்குமார். சிறப்புரையாற்றினார்.

    புதுச்சேரி திப்ரா யன்பேட்டை பகுதியில் உள்ள நகரப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஆனந்தி டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் டெங்கு தடுப்பு முறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்து ரைத்தார். நகராட்சி டாக்டர் துளசிராமன் குடியிருப்பு பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் டெங்கு பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறினார்.

    புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் டெங்கு காய்ச்சலைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பள்ளி மற்றும் சுகாதாரத் துறையின் முயற்சிகளைப் பெரிதும் பாராட்டியதுடன், வீடு வீடாக சென்று விழிப்புணர்வூட்டும் பிரசாரத்தை கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.

    பள்ளியின் என்.எஸ்.எஸ். மாணவர்கள் 150 பேர் கலந்து கொண்ட இவ்விழிப்பு ணர்வு பிரச்சாரத்தில், வாணரப்பேட்டை பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான அறிவுரைகளை பொது மக்களுக்கு வழங்கினார்.

    டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை குறித்த தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் ஸ்டிக்கர்களையும் மாணவர்கள் பொது மக்களிடையே விநியோகித்தனர்.

     மேலும், மக்கள் தங்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவும். கொசு உற்பத்தி யாகும் சூழலைக் கட்டுப்ப டுத்தவும் அறிவு றுத்தினர். தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக தெருக்கள் மற்றும் வீடுகளைச் சுற்றி பள்ளி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

    • புதிய கலங்கரை விளக்கம் வம்பா கீரப்பாளையத்தில் துறைமுகம் அருகே கட்டப்பட்டது.
    • இன்று மட்டும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    இந்தியாவில் கலங்கரை விளக்கங்களை பராமரித்தல் மற்றும் கட்டுப்படுத்துதல் தொடர்பான சட்டம்

    1927-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந் தேதி கொண்டு வரப்பட்டது.

    "கலங்கரை விளக்கச் சட்டம்" என்ற பெயரில் இது அழைக்கப்படுகிறது. இதனை நினைவு கூறும் வகையில் கலங்கரை விளக்க சட்ட தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து கலங்கரை விளக்கங்களும் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் மின்னும்.

    புதுவையில் 2 கலங்கரை விளக்கங்கள் உள்ளன. பழைய கலங்கரை விளக்கம் கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே பிரெஞ்ச் ஆட்சி காலத்தில் 19-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. அது தற்பொழுது பயன்பாட்டில் இல்லை.

    புதிய கலங்கரை விளக்கம் வம்பா கீரப்பாளையத்தில் துறைமுகம் அருகே கட்டப்பட்டது. இந்த கலங்கரை விளக்கம் தற்போது மின்னொளியில் ஜொலிக்கிறது.

    இன்று முதல் 3 நாட்களுக்கு கலங்கரை விளக்கம் மின்னொளியில் ஜொலிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலங்கரை விளக்கத்தை பார்வையிட நபர் ஒருவருக்கு ரூ. 10 கட்டணமாக வசூலிக்கப்ப டுகிறது. ஆனால் இன்று மட்டும் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கலெக்டர் வல்லவன் தொடங்கி வைத்தார்
    • பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் செய்தி ருந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் அரங்கம் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் 7 நாள் சிறப்பு முகாம்  தொடங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் ரத்தின ஜனார்த்தனன் தலைமை தாங்கினார். தலைமை விருந்தினராக புதுவை மாவட்ட கலெக்டர் வல்லவன் கலந்துகொண்டு முகாமினை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

    சிறப்பு விருந்தி னர்களாக மாநில அளவிலான நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கி ணைப்பாளர் சதீஷ்குமார், பள்ளி அளவிலான நாட்டு நல பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் மதிவாணன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு நாட்டு நல பணித்திட்ட சீருடை மற்றும் குறிப்பேடுகள் வழங்கி னார்கள்.

    புதுச்சேரி மாநில கோஜுரியோ கராத்தே சங்க மாநிலச் செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் வாழ்த்துரை வழங்கினார்.

    மேலும் கடந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று மருத்துவக் கல்லூரியில் பயில உள்ள மாணவர் நாகதேவாவுக்கு ஸ்டெதஸ்கோப் வழங்கினார்.

    ரத்தினவேல் காமராஜ், ரங்கநாயகி வளவன் முன்னிலை வகித்தனர்.

    பள்ளி முதல்வர் கவிதா சுந்தர்ராஜன், பள்ளியின் துணை முதல்வர் வினோலியா பள்ளியின் ஆலோசகர் ரத்தின பிரியா அருண்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை பள்ளியின் நாட்டு நல பணித்திட்ட அலுவலர் ஜெயந்தி, பள்ளியின் பொறுப்பாளர் ஜஸ்டின் மற்றும் பள்ளியின் அனைத்து ஆசிரியர்களும் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும் செய்திருந்தனர்.

    ×