search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "CENTAC"

    • வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது.
    • ரூ. ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 401 செலுத்த வேண்டும் என பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் 170-க்கும் மேற்பட்ட காலியாக உள்ள பி.டெக் சுயநிதி படிப்புகளுக்கு இன்று கலந்தாய்வு நடந்தது.

    புதுவை, பிற மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் இந்த கலந்தாய்வில் பங்கேற்றனர். கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில் உள்ள சென்டாக் அலுவலகத்தில் காலை 10 மணிக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடந்தது.

    10.30 மணிக்கு ஜே.இ.இ. தேர்வில் 50 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்ற மாணவர்களுக்கும், 11.30 மணிக்கு 50 மதிப்பெண்ணுக்கு குறைவாக பெற்ற மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடந்தது.

    காரைக்கால், மாகே, ஏனாமில் நோடல் அலுவலகத்தில் கலந்தாய்வு நடந்தது. கலந்தாய்வில் சேர்க்கை பெற்ற மாணவர்கள் தொழில்நுட்ப பல்லைக்கழக கலையரங்கில் இயங்கும் அலுவலகத்தில் சான்றிதழ்களை சமர்பித்து படிப்பில் உடனடியாக சேரலாம். சுயநிதி பாடங்களுக்கு ஆண்டு கட்டணமாக அட்டவணை இன மாணவர்களுக்கு ரூ.87 ஆயிரத்து 401, பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ரூ. ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 401 செலுத்த வேண்டும் என பல்கலைக்கழக துணைவேந்தர் மோகன் தெரிவித்துள்ளார்.

    ×