என் மலர்
புதுச்சேரி

அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் பொதுமக்களுக்கு டெங்கு விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கிய காட்சி.
அமலோற்பவம் பள்ளி மாணவர்கள் டெங்கு விழிப்புணர்வு பிரசாரம்
- வீடு வீடாக சென்று விழிப்புணர்வூட்டும் பிரசாரத்தை கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.
- தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக தெருக்கள் மற்றும் வீடுகளைச் சுற்றி பள்ளி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
புதுச்சேரி:
புதுச்சேரி அமலோற்பவம் மேல்நிலைப் பள்ளி, புதுவை நகராட்சி, மாநில அரசின் மலேரியா,பைலேரியா நோய்த் தடுப்புத் துறை, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தியது.
இந்த விழிப்புணர்வு பிரசாரத்திற்கு வருகை தந்த சிறப்பு விருந்தினர்களை பள்ளி முதல்வர் லூர்து சாமி வரவேற்று பொன்னாடை அணிவித்து கவுரவித்தார். புதுவை மாநில என்.எஸ்.எஸ். அலுவலர் சதீஷ்குமார். சிறப்புரையாற்றினார்.
புதுச்சேரி திப்ரா யன்பேட்டை பகுதியில் உள்ள நகரப்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் ஆனந்தி டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் மற்றும் டெங்கு தடுப்பு முறைகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்து ரைத்தார். நகராட்சி டாக்டர் துளசிராமன் குடியிருப்பு பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் டெங்கு பரவலைத் தடுப்பதற்கான வழிமுறைகளை எடுத்துக்கூறினார்.
புதுச்சேரி நகராட்சி ஆணையர் சிவக்குமார் டெங்கு காய்ச்சலைத் தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் பள்ளி மற்றும் சுகாதாரத் துறையின் முயற்சிகளைப் பெரிதும் பாராட்டியதுடன், வீடு வீடாக சென்று விழிப்புணர்வூட்டும் பிரசாரத்தை கொடிய சைத்து தொடங்கி வைத்தார்.
பள்ளியின் என்.எஸ்.எஸ். மாணவர்கள் 150 பேர் கலந்து கொண்ட இவ்விழிப்பு ணர்வு பிரச்சாரத்தில், வாணரப்பேட்டை பகுதியில் உள்ள 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் மக்களை நேரில் சந்தித்து டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கான அறிவுரைகளை பொது மக்களுக்கு வழங்கினார்.
டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள், காரணங்கள் மற்றும் சிகிச்சை குறித்த தகவல்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் மற்றும் ஸ்டிக்கர்களையும் மாணவர்கள் பொது மக்களிடையே விநியோகித்தனர்.
மேலும், மக்கள் தங்கள் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ளவும். கொசு உற்பத்தி யாகும் சூழலைக் கட்டுப்ப டுத்தவும் அறிவு றுத்தினர். தூய்மை இயக்கத்தின் ஒரு பகுதியாக தெருக்கள் மற்றும் வீடுகளைச் சுற்றி பள்ளி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.






