search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Angst"

    • 11 மீனவ கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத் தார்கள் ஆலோசனைக் கூட்டம், காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறை முகத்தில் நடைபெற்றது.
    • புதுச்சேரி முதலமைச்சர், மீன்வளத்துறை அமைச்சர், மாவட்ட மீன் வளத்துறை அலுவகலத் திற்கு அனுப்பி வைத்தனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மாவட்டத் தில் உள்ள காரைக்கால் மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரி மேடு, மண்ட பத்தூர், பட்டினச்சேரி உள்ளிட்ட 11 மீனவ கிராமத்தை சேர்ந்த பஞ்சாயத் தார்கள் ஆலோசனைக் கூட்டம், காரைக்காலில் உள்ள மீன்பிடித் துறை முகத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் முடிவில், மீன்பிடித் துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும், காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தை ஒட்டிய கடற்கரை முகத்து வாரத்தை தூர்வார வேண்டும், மீனவ கிராம சாலைகளை சரிசெய்ய வேண்டும், அடிப்படை வசதிகளை செய்துதர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (22.9.23) முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டு, அதன் நகலை, புதுச்சேரி முதல மைச்சர், மீன்வளத்துறை அமைச்சர், மாவட்ட மீன் வளத்துறை அலுவகலத் திற்கு அனுப்பி வைத்தனர். மேலும், 22-ந் தேதி முதல், மீன்பிடி படகுகளை, மீன்பிடித் துறைமுகத்தி லிருந்து கொண்டு சென்று, கடற்கரை சாலையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகம் முன்பு உள்ள அரசலாற்றில் நிறுத்திவைக்கப்படும் என்றும் மீனவர்கள் தெரி வித்துள்ளனர்.

    ×