என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    மனைப்பட்டா வழங்க கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம்
    X

    கோப்பு படம்.

    மனைப்பட்டா வழங்க கோரி விடுதலை சிறுத்தை கட்சியினர் போராட்டம்

    • ஆதிராவிடர் நலத்துறையை கண்டித்தும், ஆண்டியார்பாளையம், நாணமேடு கிராமத்தில் இலவச மனைப்பட்டா வழங்கக்கோரியும் இந்த போராட்டம் நடந்தது.
    • போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர்.

    புதுச்சேரி:

    மணவெளி தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தட்டாஞ் சாவடியில் உள்ள ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகை போராட்டம் இன்று நடந்தது.

    சுடர்வாளன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் குமார், இமானுவேல், இளையராஜா, வீரகணல், சிவராமன், சுந்தரராசு, வினோத்குமார் முன்னிலை வகித்தனர். முதன்மை செயலாளர் தேவபொழிலன் கண்டன உரையாற்றினார்.

    தலையாரி, பொதினி வளவன், தமிழ்மாறன், செல்வ நந்தன், அரிமா தமிழன், ஆதவன், கார்முகில், எழில்மாறன், இளவரசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    மணவெளி தொகுதி திம்மநாயக்கன் பாளை யத்தில் இலவச மனைப்பட்டா வழங்கியும், அபிஷேகபாக்கத்தில் இடம் தேர்வு செய்தும் பயனாளி களிடம் ஒப்படைக்காமல் இருக்கும் ஆதிராவிடர் நலத்துறையை கண்டித்தும், ஆண்டியார்பாளையம், நாணமேடு கிராமத்தில் இலவச மனைப்பட்டா வழங்கக்கோரியும் இந்த போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தின் முன்பு தரையில் அமர்ந்து கோஷம் எழுப்பினர்.

    Next Story
    ×