என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
அம்மை நோய் தாக்கி மாற்றுத்திறனாளி பெண் பலி
- சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மாற்றுத்திறனாளி பெண் அம்மை நோயால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி:
புதுவை முருங்கப்பாக்கம், சுதானா நகரை சேர்ந்தவர் குமரேசன் (43).
இவரும், இவரது தம்பி கதிரேசனும் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். இவரது தாயார் லட்சுமியும், தங்கை சுதாவும் (33), தர்மாபுரி கங்கையம்மன் கோயில் வீதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்தனர். அவ்வப்போது அண்ணன், தம்பி இருவரும் தாயையும், சகோதரியையும் வந்து பார்த்துவிட்டு செல்வார்கள்.
மாற்றுத் திறனாளியான சுதாவுக்கு, திருமணமாகாத நிலையில் வீட்டிலேயே தனது தாய்க்கு உதவியாக இருந்து வந்தார். அவருக்கு சில தினங்களுக்கு முன்பு அம்மை நோய் பாதித்தது. அவர் வெளியே செல்லாமல் வீட்டிலேயே தங்கியிருந்தார்.
வாந்தி எடுத்ததால் சோர்வுடன் காணப்பட்ட அவரை குமரேசனும், உறவினர்களும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லாரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சையில் இருந்த சுதா நேற்றிரவு உயிரிழந்தார்.
மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்தில் குமரேசன் அளித்த புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே கடந்த வாரம் புதுச்சேரியில் தரமாபுரி, ரெட்டியார்பாளையம் பகுதியில் 2 பெண்கள் டெங்கு வைரஸ் பாதிப்பால் உயிரிழந்திருந்தனர்.
இந்த நிலையில் மாற்றுத்திறனாளி பெண் அம்மை நோயால் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






