search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MIT"

    • 53- வது தேசிய பொறியாளர்கள் தின விழா மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி கருத்தரங்ககூடத்தில் நடைபெற்றது.
    • மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி (எம்.ஐ.டி.) இந்திய பொறியாளர் அமைப்பு, இயந்திரவியல் துறை மாணவர் அமைப்பு இணைந்து 53- வது தேசிய பொறியாளர்கள் தின விழா மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி கருத்தரங்ககூடத்தில் நடைபெற்றது.

    மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் மலர்கண் வாழ்த்துரை வழங்கினார்.

    இந்திய பொறியாளர் அமைப்பின் புதுவை மாநில தலைவர் மற்றும் இயந்திரவியல் துறை தலைவர் ராஜாராமன் வரவேற்று பேசினார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக பொறியாளர் ராஜகுமாரன் வலுவான, பாதுகாப்பான மற்றும் எளிதில் கற்கும்படியான பொறியியல் நெகிழ்திறம் மிக்க எதிர்காலத்தை உருவாக்குதல் எனும் தலைப்பில் மாணவர்களிடையே உரையாற்றினார்.

    மணக்குள விநாயகர் தொழில்நுட்ப கல்லூரி இயந்திரவியல் துறை உதவி பேராசிரியர் கணேஷ்குமார் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, இயந்திரவியல் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.

    • புதுச்சேரி மாநில மையம் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறை தலைவர் டாக்டர் ராஜாராம் வரவேற்றார்.
    • புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கணினி துறை டாக்டர் லட்சுமி ஆகியோர் ஐ.ஓ.டி.யின் பயன்பாடுகள் குறித்து பேசினர்.

     புதுச்சேரி:

    புதுவை கலிதீர்த்தா ள்குப்பம், மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) மற்றும் புதுவை மாநில மையத்தின் கீழ் இயங்கும் இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ் (இந்தியா) நிறுவனத்தின் கணினி பொறியியல் பிரிவு வாரியதுடன் இணைந்து "எஸ்.டி.ஜி.13-க்கான சவால்கள் மற்றும் தணிப்பு உத்திகள்: ஐ.ஒ.டி.யின் வளர்ந்து வரும் போக்குகள்" என்ற தலைப்பில் 2 நாட்கள் அகில இந்திய கருத்தரங்கு நடைபெற்றது.

    கல்லூரியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை வகித்தார். செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன் மற்றும் கல்லூரி முதல்வர் டாக்டர் மலர்க்கண் வாழ்த்திப் பேசினர்.

    இன்ஸ்டிடியூஷன் ஆப் என்ஜினீயர்ஸ் (இந்தியா), புதுச்சேரி மாநில மையம் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் துறை தலைவர் டாக்டர் ராஜாராம் வரவேற்றார்.

    புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தகவல் தொழில்நுட்பத் துறைப் பேராசிரியர் டாக்டர் எழிலரசன் தலைமை விருந்தினராகப் பங்கேற்று, காலநிலை மாற்ற அச்சுறுத்தல்கள் தாக்கங்கள், தழுவல் மற்றும் பாதிப்புகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    டாக்டர் லோகநாதன் மற்றும் கணினி பொறியாளர்கள் பிரிவு வாரியம் பங்கேற்றார்.

    கருத்தரங்கின் ஒருங்கிணைப்பாளர்கள் டாக்டர் பூங்குழலி மற்றும் டாக்டர் ராஜலட்சுமி மற்ற பணியாளர்களுடன் இணைந்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தனர்.

    புதுச்சேரி தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சிவில் என்ஜினீயரிங் துறை டாக்டர் விஜயகுமார் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் கணினி துறை டாக்டர் லட்சுமி ஆகியோர் ஐ.ஓ.டி.யின் பயன்பாடுகள் குறித்து பேசினர்.

    காலநிலை மாற்றங்கள் குறித்து மாணவர்களால் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டது. சிறந்த கட்டுரை களுக்கு ரொக்க ப்பரிசு மற்றும் சான்றி தழ்கள் வழங்கப்பட்டன.

    • புதுவை மணக்குள விநாயகர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியும், அவர் ஹோல்டர்ஸ் பவுண்டேசன் அமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
    • வேலை வாய்ப்புத் துறை அதிகாரி ஜெயகுமார் மற்றும் துறை பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை மணக்குள விநாயகர் இன்ஸ்டிட்யூட் ஆப் டெக்னாலஜி கல்லூரியும், அவர் ஹோல்டர்ஸ் பவுண்டேசன் அமைப்பும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.

    அவர் ஷோல்டர்ஸ் பவுண்டேசன்' அமைப்பு கூகுள் 'கிரோவ் வித் கூகுள்' தலைப்பில் மாணவர்களின் தனித்திறமையை வெளிகொணர்தல், திறன் மேம்படுத்தல் உள்ளிட்ட விஷயங்களை செய்வ தற்கான ஒப்பந்தமாகும்.

    இந்த ஒப்பந்த நோக்கம், பொறியியல், மேலாண்மை துறை மாணவர்களுக்கு மதிப்பு கூட்டப்பட்ட படிப்புகள், திறன், வேலை வாய்ப்பு மேம்பாட்டு பயிற்சி, வேலைவாய்ப்பு உருவாக்கி தருவதாகும்.

    வேலை வாய்ப்புக்கு தேவையான திறன் சார்ந்த ஆன்லைன் சர்டிபிகேஷன் மற்றும் உதவித்தொகை பெறும் வசதிகளை நாஸ்காமோடு இணைந்து சேவை வழங்கப்படுகிறது.

    இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் குழும தலைவர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாரன், செயலாளர் டாக்டர் நாராயணசாமி கேசவன் ஆகியோர் தலைமை தாங்கினார்.

    வேலை வாய்ப்புத் துறை அதிகாரி ஜெயகுமார் மற்றும் துறை பேராசிரியர்கள் முன்னிலை வகித்தனர். எம்.ஐ.டி., கல்லூரி முதல்வர் மலர்கண், அவர் ஷோல்டர்ஸ் பவுண்டேசன் அமைப்பு சார்பில் மாணிக்கபாரதி, பிரேம் ஆனந்த், எஸ்.எஸ்.டி. இன்போ சொல்யூசன் உரிமையாளர் புகழேந்தி ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாறி கொள்ளப்பட்டது. 

    • M1 பிராசசரில் உள்ள பாதுகாப்பு குறைபட்டிற்கு பேக்மேன் என பெயரிட்டுள்ளனர்.
    • இந்த பாதுகாப்பு குறைபாட்டை சரி செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது.

    ஆப்பிளின் M1 சீரிஸ் சிலிக்கான் புராசசர்கள் அதன் மேக் மினி மற்றும் மேக் புக் ஆகியவற்றில் இருப்பது மட்டுமல்லாமல் நிறுவனத்தின் ஐபேடுகளிலும் உள்ளது. அவற்றின், SoC இல் உள்ள இணையப் பாதுகாப்பு பாதிப்பு பல நவீன ஆப்பிள் தயாரிப்புகள் பாதிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

    ஆப்பிள் WWDC 2022 இல் நிறுவனத்தின் புதிய M2 சிலிக்கான் புராசசர் அறிவித்த பிறகு, ஆப்பிள் M1 சிலிக்கான் இணையப் பாதுகாப்புத் துறையில் சமரசம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. அதுமட்டுமின்றி MIT ஆராய்ச்சியாளர்கள் தான் இந்த பாதுகாப்பு குறைபாட்டை கண்டறிந்துள்ளனர். சாப்ட்வேர் அப்டேட் மூலம் இந்த பாதுகாப்பு குறைபாட்டை சரி செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது.


    M1 பிராசசரில் உள்ள பாதுகாப்பு குறைபட்டிற்கு பேக்மேன் என பெயரிட்டுள்ளனர். M1 பிராசசரின் பாயிண்டர் அங்கீகாரக் குறியீடு (PAC) பாதுகாப்பு அமைப்பை மீறுவதனால், M1 இல் உள்ள பாதுகாப்புப் பாதிப்பிற்கு "PACMAN" என்று பெயரிடப்பட்டது.

    பாயிண்டர் அங்கீகாரக் குறியீடு என்பது ஒரு பாதுகாப்பு அம்சம், குறிப்பாக CPU ஐப் பாதுகாக்க உதவும் ஒரு பாதுகாப்பு அம்சமாகும். இதுதவிர பாயிண்டர்கள் மெமரி அட்ரஸ்களையும் சேமிக்கின்றன, MIT நடத்திய ஆய்வில் "PACMAN" வெற்றிகரமாக பாயின்டர் அங்கீகார குறியீடுகளை கண்டறிவதோடு இது ஹேக்கர்களுக்கும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

    ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய அஜித்குமார், எம்ஐடியின் ‘தக்‌ஷா’ ஆராய்ச்சிக்குழு மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். #AjithKumar #DakshaTeam
    மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சிறிய ரக விமான ஆராய்ச்சிகளுக்கான ஆலோசகராக அஜித்குமாரை நியமித்திருந்தது. அவருடைய ஆலோசனையில் இயங்கும் எம்ஐடியின் ‘தக்‌ஷா’ ஆராய்ச்சிக்குழு மாணவர்கள் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் வெற்றிபெற்றனர்.

    இந்த குழு உருவாக்கிய விமானம் அதிக நேரம் பறந்து சாதனையும் படைத்துள்ளது. மாணவர்கள் வெற்றி பெற்று நாடு திரும்பிய சமயத்தில் அஜித் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் இருந்தார். கடந்த வாரம் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார்.

    ஊர் திரும்பியதும் மாணவர்களை சந்தித்து முதல் வேலையாக வாழ்த்தியதோடு, அவர்கள் உருவாக்கிய டிரோனையும் இயக்கி பார்த்திருக்கிறார். அத்துடன் தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனைகள் தருவதாக உறுதி அளித்துள்ளார். #AjithKumar #DakshaTeam

    மசாசூட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் கம்ப்யூட்டர் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வகம் இணைந்து, மனிதர்கள் மனதில் நினைப்பதை செய்யும் ரோபோடிக் தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளன.

     



    மசாசூட்ஸ் தொழில்நுட்பக் கழகத்தின் (எம்.ஐ.டி.) கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வக பிரிவு சார்பில் கண்டறியப்பட்டு இருக்கும் புதிய தொழில்நுட்பம் மக்கள் ரோபோட்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய புதிய வழிமுறையை கண்டறிந்துள்ளனர்.

    அந்த வகையில் ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கும் புதிய தொழில்நுட்பம் மின்னலை மற்றும் கை அசைவுகளை கொண்டு ரோபோட்களுடன் தகவல் பரிமாற்றம் செய்ய முடியும். முந்தைய ஆய்வுகளில் ரோபோட்களை மிக எளிமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைக்க முடிந்தது.

    இந்நிலையில், புதிய அப்டேட் கொண்டு ரோபோட்களால் மேலும் பல்வேறு பணிகளை செய்து முடிக்க முடியும், இதனால் ரோபோட்களை குழுவாகவும் இயக்க முடியும். 

    புதிய தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பதை எம்.ஐ.டி.-யின் கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு ஆய்வக பிரிவு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், ரோபோட் நடவடிக்கைகளில் பிழையை மனிதன் கண்டறிந்தால் ரோபோட் குறிப்பிட்ட பணியை உடனடியாக நிறுத்திவிட்டு, மனிதரின் உதவியை கேட்கும்.



    கை அசைவுகளை கொண்டு ரோபோட்டில் இருக்கும் ஆப்ஷன்களை ஸ்கிரால் செய்து, ரோபோட் செய்யும் பிழையை திருத்த முடியும். என எம்.ஐ.டி. வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 

    இதுபோன்ற அதிநவீன திட்டத்தை உருவாக்க, எம்.ஐ.டி. குழுவினர் மூளையின் நடவடிக்கையை கண்டறிய எலெக்ட்ரோ-என்சி-ஃப்ளோகிராஃபி-யையும் (electroencephalography - EEG) உடல் தசை அசைவுகளை கண்டறிந்து கொள்ள எலெக்ட்ரோ-மியோகிராஃபியை (electromyography - EMG) பயன்படுத்தியுள்ளனர். இரண்டு தொழில்நுட்பங்களும் வெவ்வேறு அம்சங்களை கொண்டிருந்தாலும், இவை இரண்டும் இணையும் போது புதிதாய் பயன்படுத்துவோருக்கு மிக எளிமையான வழிமுறையாக இருக்கும் என வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    முன்னதாக எலெக்ட்ரோ-மியோகிராஃபியை பயன்படுத்தும் போது இருந்ததை விட எலெக்ட்ரோ-என்சி-ஃப்ளோகிராஃபி மற்றும் எலெக்ட்ரோ-மியோகிராஃபியை இணைக்கும் போது மனிதன் மற்றும் ரோபோட்களிடையே மிக இயற்கையான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ள முடியும். உடல் தசை அசைவுகளை புரிந்து கொள்ளக்கூடிய அம்சம் மூலம் ஜெஸ்ட்யூர்களை கொண்டு ரோபோட்களிடம் முன்பை விட சிறப்பாக பணியை செய்ய வைக்க முடியும். என எம்.ஐ.டி. கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப மையத்தின் இயக்குனர் டேனியல் ரஸ் தெரிவித்துள்ளார். 

    முன்னதாக இந்த தொழில்நுட்பம் மக்கள் பொதுவாக நினைக்கும் தகவல்களை புரிந்து கொள்ளாமல் இருக்கும்படி கட்டுப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் என்ன நினைக்க வேண்டும் என்பதை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது. இந்த இயந்திரம், ஒருவருக்கு ஏற்ற வகையில் மாற்றிக் கொள்ளும் என இந்த திட்டத்தில் பணியாற்றிய ஜோசப் டெல்பிரெடோ தெரிவித்தார்.

    புதிய தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பதை விளக்கும் வீடியோவை கீழே காணலாம்..,


    ×