என் மலர்
சினிமா

ஆராய்ச்சிக்குழு மாணவர்களை சந்தித்த அஜித்
‘விஸ்வாசம்’ படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பிய அஜித்குமார், எம்ஐடியின் ‘தக்ஷா’ ஆராய்ச்சிக்குழு மாணவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். #AjithKumar #DakshaTeam
மெட்ராஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, சிறிய ரக விமான ஆராய்ச்சிகளுக்கான ஆலோசகராக அஜித்குமாரை நியமித்திருந்தது. அவருடைய ஆலோசனையில் இயங்கும் எம்ஐடியின் ‘தக்ஷா’ ஆராய்ச்சிக்குழு மாணவர்கள் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் வெற்றிபெற்றனர்.
இந்த குழு உருவாக்கிய விமானம் அதிக நேரம் பறந்து சாதனையும் படைத்துள்ளது. மாணவர்கள் வெற்றி பெற்று நாடு திரும்பிய சமயத்தில் அஜித் ‘விஸ்வாசம்’ படப்பிடிப்பில் இருந்தார். கடந்த வாரம் படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார்.
ஊர் திரும்பியதும் மாணவர்களை சந்தித்து முதல் வேலையாக வாழ்த்தியதோடு, அவர்கள் உருவாக்கிய டிரோனையும் இயக்கி பார்த்திருக்கிறார். அத்துடன் தொடர்ந்து அவர்களுக்கு ஆலோசனைகள் தருவதாக உறுதி அளித்துள்ளார். #AjithKumar #DakshaTeam
Next Story






