search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை., என்.ஆர்.காங்கிரஸ் உறவு தொடரும்! - அ.தி.மு.க.
    X

    கோப்பு படம்.

    பா.ஜ.க. உடன் கூட்டணி இல்லை., என்.ஆர்.காங்கிரஸ் உறவு தொடரும்! - அ.தி.மு.க.

    • அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் பேட்டி
    • தேசிய கட்சியின் மாநில தலைவராக செயல்படக்கூடிய தகுதி அண்ணாமலைக்கு இல்லை.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை தனது தகுதி, வயதை, அனுபவம் எதையும் புரிந்து கொள்ளாமல் பேசி வருகிறார். அ.தி.மு.க. கூட்டணி கட்சி என நினைக்காமல் கட்சியின் தலைவர்களை தொடர்ந்து விமர்சனம் செய்வதை புதுவை மாநில அதிமுக வன்மையாக கண்டிக்கிறது.

    மலிவு விளம்பரத்திற்காக பெரியார், பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகியோரை பற்றி அண்ணாமலை அவ்வப்போது விமர்சனம் செய்கிறார். இது இந்திய நாட்டின் பிரதமராக மோடி வரக்கூடாது என்ற அண்ணமாலையின் சதிசெயலாக உள்ளது.

    தேசிய கட்சியின் மாநில தலைவராக செயல்படக்கூடிய தகுதி அண்ணாமலைக்கு இல்லை. அவர் மீது கட்சி உரிய நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து இவ்வாறு பேசி வருகிறார். அண்ணாமலை புதுவைக்கு வரும்போது அ.தி.மு.க. பதிலடி தரும்.

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் அமையும் கூட்டணி புதுவை உட்பட 40 தொகுதியிலும் வெற்றி பெறும். அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லாவிட்டால் தென்னிந்தியாவிலேயே பா.ஜனதா என்ற ஒரு கட்சி இடம் தெரியாமல் போயிருக்கும். ங

    கட்டுப்படுத்த வேண்டும்

    கர்நாடகத்தில் இருந்த பா.ஜனதா ஆட்சியை தேர்தல் பொறுப்பாளர் அண்ணாமலையால்தான் இழந்தது என்பதை பா.ஜனதா தலைவர்கள் உணர வேண்டும். அண்ணாமலையை ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் கட்டுப்படுத்த வேண்டும்.

    புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் ரங்கசாமி தலைமையில் சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டோம். பா.ஜனதாவால்தான் புதுவையில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது.

    என்.ஆர்.காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில் பாஜகவை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாகவும், சபாநாயகராகவும், எம்.எல்.ஏ.வாகவும் இருக்க அ.தி.மு.க. தொண்டர்களின் வாக்குதான் என்பதை

    தமிழகத்தில் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு புதுவைக்கும் பொருந்தும். புதுவையில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையேற்றுள்ளார். எங்களை பொறுத்தவரை என்.ஆர்.காங்கிரசுடன் எங்கள் கூட்டணி தொடரும்.

    கூட்டணி குறித்து எடப்பாடியார் முடிவின்படி புதுவை அ.தி.மு.க. செயல்படும். எங்கள் தலைமை பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லையென்று அறிவித்துள்ளது. அது மிக்க சந்தோஷமான செய்தியாகும். அ.தி.மு.க. தொண்டர்கள் இந்த அறிவிப்பால் மகிழ்ச்சியாக உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாநில இணை செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான கணேசன், பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில துணை செயலாளர்கள் நாகமணி, காந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

    Next Story
    ×