என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • 9 நாட்கள் நடக்கிறது
    • ஓய்வு பெற்ற துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    திருவண்டார்கோவிலில் உள்ள செயின்ட் ஜோசப் மேல்நிலை ப்பள்ளியில் நவராத்திரி கொலு திருவிழா கொண்டாடும் வகையில் பள்ளி வளா கத்தில் கொலு பொம்மை கள் வைக்க ப்பட்டு நவராத்திரி ஹோமங்கள் நடைபெற்றது.

    கணபதி பூஜையுடன் விழா தொடங்கியது. விழாவினை பள்ளியின் சேர்மன் அந்தோணிராஜ், பள்ளியின் முதல்வர் மிஸ்டிகன் ஆண்டோ ரிச்சர்ட் மற்றும் ஓய்வு பெற்ற துணை முதல்வர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி

    வைத்தனர். விழாவில் முப்பெரும் தேவியர்களுக்கு அர்ச்சனை மலர்கள், பழங்கள், நைவேத்தியம் கொண்டு பூஜைகள் செய்யப்பட்டன.

    மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    ெகாலு திருவிழா தொடர்ந்து 9 நாட்கள் நடைபெறுகிது. விழாவி ற்கான ஏற்பா டுகளை பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் மற்றும் அலுவலர் ஊழியர்கள் செய்திருந்தனர். 

    • நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங் கினர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.
    • ஏற்பாடுகளை கல் லுாரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக் குமார் செய்திருந்தார்.

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லுாரியில் மிட்சோகோ நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன் தலைமை தாங்கினர். கல்லுாரி முதல்வர் மலர்க்கண் வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்தார்.

    நிறுவன மனிதவளத் துறை மேலாளர் ரஞ்சித் நிறுவனத்தின் விவரங்கள், வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிகோள்கள், சம்பளம் உள்ளிட்ட விவரங்களை விளக்கினார். ஆன்லைன் எழுத்து தேர்வு மற்றும் நேர்முகதேர்வு ஆகிய சுற்றுக்களாக வளாக வேலை வாய்ப்பு முகாம் நடந்தது.

    கல்லுாரியின் அனைத்து துறையை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கிணைப்பா ளர்கள், கல்லுாரியின் இறு தியாண்டு பொறியியல் படிக்கும் மாணவ-மாண விகள் கலந்து கொண்ட னர். ஏற்பாடுகளை கல்லுாரி வேலை வாய்ப்பு துறை தலைவர் ஜெயக் குமார் செய்திருந்தார்.

    • காந்தியின் நாடு வேண்டுமா? கோட்சேவின் நாடு வேண்டுமா? என மக்களிடம் கேட்க வேண்டும்.
    • தமிழகத்தில் நடைபெறும் இந்தியா கூட்டணி ஆட்சியில் பெண்கள் பஸ்சில் இலவசமாக செல்ல முடிகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியை சேர்ந்த பல்வேறு கட்சியினர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. காங்கிரசில் இணைந்தவர்களை சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது அவர் பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தல் 100 நாட்களுக்குள் அறிவிக்கப்படும். பிப்ரவரி 1-ந்தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம். பா.ஜ.க.வின் 5 ஆண்டு கால ஆட்சியில் பட்ட கஷ்டங்களுக்கு விடுதலை கிடைக்க 100 நாட்கள் நாம் கடுமையாக பணியாற்ற வேண்டும்.

    காந்தியின் நாடு வேண்டுமா ? கோட்சேவின் நாடு வேண்டுமா? என மக்களிடம் கேட்க வேண்டும். தற்போது நடக்கும் மோடியின் ஆட்சியின் தான் கோட்சே ஆட்சி. காந்தியின் கொள்கைக்கு எதிரான ஆட்சி. தமிழகத்தில் நடைபெறும் இந்தியா கூட்டணி ஆட்சியில் பெண்கள் பஸ்சில் இலவசமாக செல்ல முடிகிறது. மகளிர் உரிமை தொகையை பெற முடிகிறது. ஆனால் புதுச்சேரியில் அறிவித்த திட்டங்கள் ஒரு பெண்ணுக்கு கூட போய் சேரவில்லை.

    இதே தான் மோடி ஆட்சியின் நிலையும். இங்கே சின்ன மோடி. அங்கே பெரிய மோடி. இருவரும் பீலர்.. பொய்யர்.. இவர்களை தூக்கி எறிய எல்லா மட்டத்திலும் இறங்கி வேலை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • புதுவை மற்றும் தமிழக வனத்துறையினர் தொடர்ந்து பறவைகளை வேட்டையாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    • வேறு வழியில்லாமல் வடிவேலை வனத்துறை யினர் வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டு துப்பாக்கியும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை கூடப்பாக்கம் பகுதியில் ஊசுட்டேரி உள்ளது. பரந்து விரிந்து காணப்படும் இந்த ஏரி புதுவை மற்றும் தமிழகத்திற்கு சொந்தமான தாகும்.

    புதுவை-பத்துகண்ணு சாலையில் உள்ள ஊசுட்டேரி பறவைகள் சரணாலயமாக அரசால் அறிவிக்கப்பட்டது. அங்கு சுற்றுலா பயணிகள் படகு சவாரியும் செய்யும் படகு குழாம் உள்ளது.

    இதேபோல் உசுட்டேரி அமைந்துள்ள தமிழக பகுதியான பூத்துறை பகுதியில் அடர்ந்த வனத்துடன் கூடிய பகுதியில் தமிழக அரசு பறவைகள் சரணாலயமாக அறிவித்து அங்கு படகு குழாம் அமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகிறது.

    இந்தப் பகுதிகளில் தொடர்ந்து பறவைகள் வேட்டையாடப்பட்டு வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்களில் அரிய வகை பறவைகளை அதிக விலைக்கு விற்பனை செய்ய வேட்டை யாடப்பட்டு வருகிறது.

    இதனை தடுக்கும் வகையில் புதுவை மற்றும் தமிழக வனத்துறையினர் தொடர்ந்து பறவைகளை வேட்டையாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாக பூத்துறை பகுதியில் பறவை கள் வேட்டையா டப்படுவதாக வந்த தகவலை யடுத்து திண்டிவனம் சரக வனத்துறை அதிகாரிகள் வில்லியனூர் பட்டாணி களம் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர்கள் பகுதியை கண்காணித்து வந்தனர். அப்போது அந்த வழியாக துப்பாக்கி எடுத்துச் சென்ற வடிவேல் என்ற நரிக்குறவரை பிடித்து அவரிடம் வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொ ண்டனர். அப்போது அவர் வைத்திருந்த துப்பாக்கியை பறிமுதல் செய்த வனத்துறையினர் அவரை வாகனத்தில் ஏற்றினர்.

    இதனை அறிந்த அங்குள்ள நரிக்குறவ பெண்கள் வனத்துறை அதிகாரிகள் வந்த வாகனத்தை மறித்து வாகனத்தை முற்றுகை யிட்டனர்.

    வாகனத்தின் முன் பக்க கதவை தட்டி வாகனத்தில் இருக்கும் நரிக்குறவர் வடிவேலை விடுவிக்கும் படி கூச்சலிட்டனர்.

    இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வேறு வழியில்லாமல் வடிவேலை வனத்துறை யினர் வாகனத்தில் இருந்து இறக்கிவிட்டு துப்பாக்கியும் கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்.

    • நவராத்திரி கொலு புதுவையில் உள்ள பல்வேறு கோவில்களில் அமைக்கப்பட்டுள்ளது.
    • எல்லைபிள்ளைசாவடி சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள் கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    புதுச்சேரி:

    புரட்டாசி அமாவாசைக்கு அடுத்து வரும் 9 நாட்கள் நவராத்திரியாக கொண்டாடப்படுகிறது.

    மனிதனாக பிறந்தவன் படிப்படியாக தனது குணநலனை மாற்றி, தெய்வ நிலைக்கு உயர வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்தும் வகையில் கொலு வைப்பவர்கள் 7 அல்லது 9 படிக்கட்டுகள் அமைத்து அதில் பொம்மை களை அலங்கரிப்பர்.

    முதல் படிக்கட்டில் கலசமும், அந்த கலசத்தில் ஒவ்வொரு நாளும் ஒரு அம்பிகையை எழுந்தருள செய்து பூஜையும் நடத்தப்படும்.

    மேலும் முதல் படியில் ஓரறிவு கொண்ட புல், பூண்டு, செடி கொடிகளும், 2-வது படிக்கட்டில் 2 அறிவு கொண்ட சிப்பி, சங்கு போன்றவையும், 3- வது படிக்கட்டில் 3 அறிவு கொண்ட எறும்பு, கரையான் போன்ற பொம்மைகளும் வைப்பர்.

    இதேபோல் 4-வது படியில் 4 அறிவு கொண்ட நண்டு, வண்டு போன்ற ஜீவராசி களின் பொம்மைக ளும், 5-வது படியில்.5 அறிவு கொண்ட விலங்கு களின் பொம்மைகளும், 6-வது படிக்கட்டில் நாட்டிற்காக உழைத்த தலை வர்களின் பொம்மைகளும், 7-வது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மை களும் இடம்பெறும், 8-வது படியில் தேவர்கள், மற்றும் தெய்வங்களை வைப்பர். 9- வது படியில் மும்மூர்த்தி கள் அவர்களது துணைவி யர்கள் இடம்பறுவர்.

    வாழ்க்கை தத்துவத்தை உணர்த்தும் வகையில் அமைக்கப்படும் கொலுவில் தினமும் பெண்கள் வழிபாடு நடத்துவர்.

    நவராத்திரி கொலு புதுவையில் உள்ள பல்வேறு கோவில்களில் அமைக்கப்பட்டுள்ளது.  கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொலு வைக்கப்பட்டது.

    இன்று முதல் நாள் உற்சவம் நடத்தப்படுகிறது. புதுவை ரெயில் நிலையம் அருகில் உள்ள கவுசிக பால சுப்பிரமணியர் கோவில், திருக்காஞ்சி கெங்கைவராக நதீஸ்வரர் கோவில், கடலூர் சாலையில் உள்ள கெங்கையம்மன் கோவில், மாங்காளியம்மன் கோவில், இரும்பை பாலாதிரி புரசுந்தரி கோவில், கிருமாம்பாக்கம் முத்தா லம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் அமைக்கப்பட்டுள்ள கொலு வினை பக்தர்கள் வழிபட்டனர்.

    எல்லைபிள்ளைசாவடி சாரதாம்பாள் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள்  கணபதி பூஜையுடன் தொடங்கியது.

    நாளை மகாருத்ர ஹோமம், கந்தர்வ ராஜ ஹோமம், 17-ந் தேதி துர்கா சுக்த மற்றும் காயத்திரி ஹோமம், 18-ந் தேதி ஹயக்ரீவ மற்றும் சுதர்ச ஹோமம், 19-ந் தேதி நவக்கிரக ஹோமம், 20-ந் தேதி அஷ்டலட்சுமி ஹோமம், 21-ந் தேதி தன்வந்திரி, ஆஞ்சநேயர் ஹோமம், 22-ந் தேதி அதிஷ்டாணத்தில் ஆராதனை, 23-ந் தேதி மகா சண்டி ஹோமம், 24-ந் தேதி ஊஞ்சல் உற்சவம் ஆகியவை நடக்கிறது.

    • 10 மணி முதல் 12 மணி வரை பூரணாங்குப்பத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது.
    • அப்துல்கலாமின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு இந்த வகுப்புகள் தொடங்கியதாகவும் அவர் கூறினர்.

    புதுச்சேரி:

    உலக தமிழ் வளர்ச்சி மன்றம், உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம் ஆகியவை இணைந்து அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச திருக்குறள் புத்தகம் வழங்கி, முற்றோதல் பயிற்சி தொடக்க விழா இன்று பூரணாங்குப்பத்தில் நடந்தது. இதில் அரசுப் பள்ளியில் 3-ம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பங்கு பெற்றனர். இதனை தொடர்ந்து வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தோறும் 10 மணி முதல் 12 மணி வரை பூரணாங்குப்பத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெறுகிறது.

    இதற்கான தொடக்க விழா இன்று காலை பூஜையுடன் தொடங்கியது. இதில் முன்னாள் ராணுவவீரர் நந்தா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். கோவில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், ஊர் பிரமுகர்கள் புருஷோத்தமன், ஜெயபால், வெங்கடேசன், கார்த்தி, மதி கண்ணபிரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    உலக திருக்குறள் முற்றோதல் இயக்கத்தின் பயிற்சியாளர் சங்கீதா கண்ணன் இந்த பயிற்சி வகுப்பை நடத்தி வருகின்றார். இதில் ஸ்டாலின்,மோகன், மணி, தளிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    விடுமுறை நாட்களில் மாணவர்கள் செல் போனில் தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.

    அதிலிருந்து அவர்களை வெளி கொண்டு வரும் விதமாக இந்த விழிப்புணர்வு முற்றோதல் வகுப்புகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தனர்.   அப்துல்கலாமின் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு இந்த வகுப்புகள் தொடங்கியதாகவும் அவர் கூறினர்.

    • நிரவி, திரு.பட்டினம் தொகுதி விடுதலைச் சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் அறிவித்துள்ளார்.
    • மானாம்பேட்டை வடக்கு தெருவில் உள்ள சாலையை ஆய்வு செய்யுங்கள்.

    புதுச்சேரி:

    சாலை, தெருவிளக்கு, சுத்தமான தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி, ரேஷன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டை, வரும் 20-ந் தேதி கலெக்ட ரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடைபெறும். என, நிரவி, திரு.பட்டினம் தொகுதி விடுதலைச் சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் அறிவித்துள்ளார். காரைக்காலை அடுத்த நிரவி-திரு.பட்டினம் தொகுதி விடுதலைச் சிறுத்தை கட்சி தொகுதி செயலாளர் கணல், இது குறித்து, வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியி ருப்பதாவது:-

    நிரவி கொம்யூன் மானாம் பேட்டை கிராமத் தில் காலை 6 மணி முதல் 9 மணி வரை கொம்யூன் பஞ்சாயத்து சார்பாக வழங்கப்படுகிற தண்ணீரை, கலெக்டராகிய நீங்கள், சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் வந்து ஆய்வுக்கு உட்படுத்துங்கள். மானாம்பேட்டை வடக்கு தெருவில் உள்ள சாலையை ஆய்வு செய்யுங்கள். மானாம் பேட்டை வடக்கு தெரு இருளில் கிடக்கிறது.

    எனவே, சாலை, தெரு விளக்கு, சுத்தமான தண்ணீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல், ரேஷன் அட்டை, வாக்காளர் அடை யாள அட்டை, ஆதார் கார்டு ஆகியவைகளை 50 கிராமங்களில் இருந்து முதல் கட்டமாக 200 பேர், மேற்கண்ட அனைத்து அரசு ஆவணங்களையும், வரும் 20-ந் தேதி கலெக்ட ரிடம் ஒப்படைக்கும் போராட்டம் நடத்தவுள்ளோம். அதற்கு முன்னதாக, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • புகையிலை பொருட்கள் விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் சென்றது.
    • ரூ.1500 மதிப்பிலான ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

    புதுச்சேரி:

    காரைக்கால் டூப்ளக்கஸ் வீதியில், மளிகை கடை ஒன்றில், அரசால் தடை செய்யப்பட்ட போதை புகையிலை பொருட்கள் விற்பதாக, காரைக்கால் நகர போலீசாருக்கு ரகசியத்தகவல் சென்றது. அதன்பேரில், போலீசார், சம்பந்தப்பட்ட கடையில் சோதனைச் செய்தபோது அங்கு ரூ.1500 மதிப்பிலான ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், லெமேர்வீதியைச்சேர்ந்த கடை உரிமையாளர் முகமது முஜாஹிதீனை (வயது23) கைது செய்தனர்.

    • முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரம் கிடைக்கும் போது இந்திய அணி விளையாடும் போட்டிகளை கண்டு களிப்பார்.
    • போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரு வீதியில் உள்ள வாட்ச் கடையில் அமந்து நண்பர்க ளுடன் பேசுவது வழக்கம்.

    காலை நேர உணவை பல நாட்கள் அங்கேயே அமர்ந்து சாப்பிடுவார். கிரிக்கெட் ரசிகரான முதல்-அமைச்சர் ரங்கசாமி நேரம் கிடைக்கும் போது இந்திய அணி விளையாடும் போட்டிகளை கண்டு களிப்பார்.

    புதுவை சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் அறையில் உள்ள டிவியில் கிரிக்கெட் போட்டியை பார்ப்பார். நேரம் இல்லாத பட்சத்தில் கிரிக்கெட் போட்டி முடிவுகளை ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொள்வார்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய தினம் இந்தியா - பாகிஸ்தான் போட்டி குஜராத் அகமதாபாத்தில் நடந்தது. நேற்று மாலை நேரு வீதி வாட்ச் கடைக்கு வந்தார்.

    அங்கு அமர்ந்து போட்டியை முதல்-அமைச்சர் ரங்கசாமி ரசித்து பார்த்தார். போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றதற்கு மகிழ்ச்சி தெரிவித்தார்.

    • சென்னை மிருதன் மெடிக்கல் டெக்னாலஜி சி.ஜி.ஓ. வெங்கடேஸ்வரா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
    • மருத்துவ உதவியாளர் துறை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி விநாயகா மிஷன் பல்கலைக்கழக வேந்தர் கணேசன் அறிவுறுத்தலின் படி புதுச்சேரி அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் தேசிய மருத்துவர் உதவியாளர் துறை வார விழா கொண்டாடப்பட்டது. கல்லூரி டீன் பேராசிரியர் டாக்டர் செந்தில்குமார் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து நடந்த கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 350 மாணவர்கள் பங்கு பெற்றனர். நிகழ்ச்சிக்கு அலைடு ஹெல்த் கல்லூரியின், புதுச்சேரி பிரிவின் இயக்குனர் ஆண்ட்ரூ ஜான் தலைமை தாங்கினார்

    இக்கருத்தரங்கில் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி இதயவியல் துறை ஆலோசகர் டாக்டர் பத்ரி நாராயணன், கல்லீரல் இயல் மருத்துவ ஆலோசகர் டாக்டர் மகேந்திரன் புதுவை அரசு இந்திரா காந்தி அரசு பொது மருத்துவமனை கல்லீரல் மருத்துவ ஆலோசகர் சிவராம கிருஷ்ணன், சென்னை மிருதன் மெடிக்கல் டெக்னாலஜி சி.ஜி.ஓ. வெங்கடேஸ்வரா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

    இதையடுத்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்க ளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. தொடர்ந்து.

    கல்லுரி வளாகத்தில் சுகாதார அறிவியல் கண்காட்சி நடத்தப்பட்டது. முடிவில் மருத்துவ உதவியாளர் துறை ஒருங்கிணைப்பாளர் சந்தோஷ் நன்றி கூறினார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை நிர்வாக அதிகாரி சந்துரு தலைமையில் செய்து இருந்தனர்.

    • 3200 மாணவர்கள் கலந்து கொண்டு இந்த போட்டியில் 120 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
    • செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் அனைத்துத்துறை டீன்கள் மற்றும் துறைத்தலைவர்கள் பாராடினர்.

    புதுச்சேரி:

    ஐ.சி.டாக் அகாடமியின் யூத் டாக் போட்டி 7 பகுதிகளாக சென்னை மதுரை திருச்சி, கோவை, திருநெல்வேலி, சேலம் மற்றும் புதுவையில் நடத்தப்பட்டது.

    பல்வேறு கல்லூரிகளில் இருந்து மொத்தம் 3200 மாணவர்கள் கலந்து கொண்டு இந்த போட்டியில் 120 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

    அதிலிருந்து அரை இறுதி போட்டியில் 12 மாணவர்கள் வெற்றி பெற்றனர். இதன் இறுதி போட்டியில் இதன் இறுதி போட்டியில் புதுவை மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியை சேர்ந்த மாணவர் ரோகித் முதலிடமும், மாணவர் யுவசக்தி 2-ம் இடமும் மாணவி ஷிவானி 3-ம் இடமும் பெற்று சாதனை படைத்தனர்.

    சாதனை படைத்த மாணவர்களை மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரி தலைவரும் நிர்வாக இயக்குனருமான தனசேகரன், துணைத்தலைவர் சுகுமாரன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன் அனைத்துத்துறை டீன்கள் மற்றும் துறைத்தலைவர்கள் பாராடினர்.

    • மாநிலத்தை சேர்ந்த ஏராளமான கூடோ தற்காப்பு கலை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
    • குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுத்த மாதம் நடைபெறும் தேசிய கூடோ தற்காப்பு கலை போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில கூடோ தற்காப்பு கலை சங்கத்தின் சார்பில் அடுத்த மாதம் குஜராத் மாநிலத்தில் நடைபெற உள்ள மத்திய அரசின் விளையாட்டு துறையால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய அளவிலான கூடோ போட்டிக்கு வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்யும் முகாம் பாலாஜி திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது.

    புதுவை மாநிலத்தை சேர்ந்த ஏராளமான கூடோ தற்காப்பு கலை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிக்கு புதுவை மாநில கூடோ சங்கத் தலைவர் வளவன் தலைமை தாங்கினார், பொதுச் செயலாளர் சந்தோஷ் முன்னிலை வகித்தார் மேலும் பயிற்சியாளர்கள் ஆறுமுகம், அசோக், செந்தில், பாலச்சந்தர், செல்வம், மகேஷ், வெங்கடாஜலபதி, சுப்ரமணி உள்ளிட்டவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேசிய போட்டிக்கு புதுவை மாநிலத்தை சேர்ந்த 30 வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அடுத்த மாதம்  நடைபெறும் தேசிய கூடோ தற்காப்பு கலை போட்டியில் கலந்து கொள்ள உள்ளனர்.

    முன்னதாக அனைவரையும் சங்கத் துணைத் தலைவர் கோவிந்தராஜ் வரவேற்றார்.

    ×