என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • பணம் செலுத்தியும் ஒரு மாதமாகியும் ஜெயரட்சகனுக்கு அமெரிக்க டாலர் வந்து சேரவில்லை.
    • தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ஜெயரட்சகன் இணையவழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை ஆனந்த ரங்கப்பிள்ளை நகரை சேர்ந்தவர் ஜெயரட்சகன். (வயது 46).

    இங்கிலாந்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்துவிட்டு தற்போது புதுவையில் தங்கி ஆன்லைனில் முதலீடு செய்து வருகிறார். அவர் கடந்த மாதம் கிரிப்டோ கரன்சி வாங்குவதற்காக தனியார் நிறுவனத்தில் அமெரிக்க டாலர்களை வாங்குவதற்கு முயற்சி செய்துள்ளார்.

    அப்போது அவரது செல்போன் எண்ணுக்கு வாட்ஸ்-அப்பில் வந்த நபர் நான் தென்னிந்தியாவிற்கான தனியார் நிறுவனத்தின் நிர்வாகி என்றும் உங்களுக்கு என்ன வேண்டும் சொல்லுங்கள் என கேட்டுள்ளார்.

    அதை நம்பிய ஜெயரட்சகன் 10 ஆயிரம் அமெரிக்க டாலர் வேண்டும் என கேட்டு இருக்கிறார்.

    அப்போதைய மார்க்கெட் ஒரு டாலரின் மதிப்பு ரூ.88 என்றும் இருந்தபோதும் தொடர்பு கொண்ட நபர் ரூ. 85-க்கு டாலர் தருகிறேன் என்று கூறியுள்ளார்.

    இதனை நம்பி, ஜெயரட்சகன் பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.21 லட்சத்து 50 ஆயிரத்தை அந்த நபர் சொன்ன 4 வங்கி கணக்குகளுக்கு செலுத்தி உள்ளார்.

    இவர் பணம் செலுத்தியும் ஒரு மாதமாகியும் ஜெயரட்சகனுக்கு அமெரிக்க டாலர் வந்து சேரவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் இணையவழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • கடந்த 8-ந் தேதி முதலமைச்சர் ரங்கசாமி, ராஜ்நிவாசில் கவர்னர் தமிழிசையை சந்தித்தார்.
    • பெண் அமைச்சர் சந்திர பிரியங்காவுக்கு மரியாதை தருவதில் யாரும் குறை வைக்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த சந்திரபிரியங்கா கடந்த 10-ந் தேதி திடீரென ராஜினாமா செய்தார்.

    சாதி, பாலின தாக்குதலுக்கு உள்ளானதால் பதவி விலகுவதாக ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். அதேநேரத்தில் 11-ந் தேதி சென்னை விமான நிலையத்தில் புதுவை கவர்னர் தமிழிசை பேட்டியளித்தார்.

    அப்போது புதுவை அமைச்சரவையில் இருந்து முதலமைச்சர் ரங்கசாமி பரிந்துரையின்பேரில் சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதாக தெரிவித்தார்.

    துறைரீதியான செயல்பாடுகளில் திருப்தியளிக்காததாலும், அதிருப்தியாலும் சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

    கடந்த 8-ந் தேதி முதலமைச்சர் ரங்கசாமி, ராஜ்நிவாசில் கவர்னர் தமிழிசையை சந்தித்தார். அப்போது அமைச்சரவையில் இருந்து சந்திர பிரியங்காவை நீக்க கடிதம் அளித்தார்.

    இந்த கடிதத்தின்பேரில் சந்திர பிரியங்கா அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார்.

    ஆனாலும் இதுவரை சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதற்கான அரசாணை வெளியிடப்படவில்லை. இதனால் சந்திர பிரியங்கா நீக்கமா? ராஜினாமாவா? என குழப்பமான நிலை நீடித்து வந்தது. அரசாணை வெளி வராதது பல்வேறு சர்ச்சைகளையும், சமூகவலைதளங்களில் விவாதங்களையும் ஏற்படுத்தியது.

    தெலுங்கானா சென்ற கவர்னர் தமிழிசை ஒரு வாரத்துக்கு பிறகு நேற்று புதுவை திரும்பினார். கவர்னர் மாளிகையில் நடந்த பள்ளி மாணவர்களின் திறன் தேடல் நிகழ்ச்சிக்கு பிறகு கவர்னர் தமிழிசை நிருபர்களை சந்தித்தார்.

    அப்போது, நிருபர்கள் கவர்னர் தமிழிசையிடம், சந்திர பிரியங்கா நீக்கமா? ராஜினாமாவா? அரசாணை வெளிவராதது ஏன்.? என பல கேள்விகளை எழுப்பினர்.

    அதற்கு தமிழிசை, நான் இதற்கு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டேன். தனது அமைச்சரவையில் உள்ள அமைச்சரை சேர்க்கவோ, நீக்கவோ, அமைச்சர்களின் பணியை கண்காணிக்கவும், மதிப்பீடு செய்யவும் முதலமைச்சருக்கு உரிமை உள்ளது. சுயநலனால் நல்ல வாய்ப்பை சந்திர பிரியங்கா இழந்துள்ளார் என்று கூறினார்.

    அதோடு, அரசாணை வெளிவராததற்கு நிர்வாக ரீதியாக சில சட்டதிட்டங்கள் உள்ளது என்றும், உரிய அறிவிப்பு வெளியாகும்போது பல உண்மைகள் தெரியும் என்றும் குறிப்பிட்டார்.

    மேலும், பெண் அமைச்சர் சந்திர பிரியங்காவுக்கு மரியாதை தருவதில் யாரும் குறை வைக்கவில்லை. முதலமைச்சர் தந்தை போலவும், பிற அமைச்சர்கள் சகோதரர்கள் போலவும் சந்திர பிரியங்காவை பார்த்துக்கொண்டனர்.

    அவர் சாதி, பாலின ரீதியில் குற்றம் சாட்டியிருக்கக்கூடாது. நானும் சந்திர பிரியங்காவுக்கு உறுதுணையாகவே இருந்தேன் என்றும், இது என்.ஆர். காங்கிரஸ் முதலமைச்சர், அமைச்சர் இடையிலான பிரச்சினை என்றும் தெரிவித்தார்.

    இதன் மூலம் சந்திர பிரியங்கா நீக்கப்பட்டதை கவர்னர் தமிழிசை மீண்டும் உறுதி செய்தார். அதோடு அரசாணை வெளிவர நிர்வாக தாமதமே காரணம் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் ஓரிரு நாளில் சந்திர பிரியங்கா நீக்கம் குறித்த அரசாணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நாராயணசாமி கூறுவதுபோல அரசியலமைப்பு சட்டத்தையோ, ரகசிய காப்பு பிரமாணத்தையோ நான் மீறவும் இல்லை.
    • அமைச்சராக இருந்த சந்திரபிரியங்காவுக்கு முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது.

    புதுச்சேரி:

    புதுவை கவர்னர் தமிழிசை நிருபர்களிடம் கூறியதாவது:-

    முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எப்போதும் கவர்னரோடு சண்டைபோடவே விரும்புகிறார்.

    ஏற்கனவே இருந்த கவர்னரோடும் சண்டையிட்டுள்ளார். இப்போது என்னோடும் சண்டை போடுகிறார். அவருக்கு கவர்னர் என்றாலே பிடிக்கவில்லை.

    அவர் முதலமைச்சராக இருந்தபோது தவறாக மொழி பெயர்த்தது போல நான் எதுவும் செய்யவில்லை. அவர் கூறுவது போல அரசியலமைப்பு சட்டத்தையோ, ரகசிய காப்பு பிரமாணத்தையோ நான் மீறவும் இல்லை.

    அவர்கள் பெண்களுக்கு எவ்வளவு வாய்ப்பு தந்தார்கள்? அவர் ஆட்சிக்காலத்தில் பட்டியலின பெண் எம்.எல்.ஏ.வாக இருந்தும் அமைச்சராக வாய்ப்பு தரவில்லை. இந்த விஷயத்தில் அவர் பேசுவதற்கே உரிமை இல்லை.

    அமைச்சராக இருந்த சந்திரபிரியங்காவுக்கு முக்கியமான துறைகள் ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டில் கூட இதுபோல முக்கிய துறைகள் பெண் அமைச்சர்களுக்கு வழங்கப்படவில்லை. இதைப்பற்றி தெரியாமல் கனிமொழி எம்.பி. பேசி வருகிறார்.

    இவ்வாறு கவர்னர் தமிழிசை கூறினார். 

    • பா.ஜனதா என். ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் ஏறத்தாழ 7 ஆண்டு காலமாக வக்பு வாரியம் அமைக்கப்படவில்லை.
    • மாநிலம் தழுவிய அளவில் கட்சியின் பொதுச்செயலாளர் அனுமதியோடு சிறுபான்மை மக்கள் நலனுக்காக பல்வேறு போராட்டங்களை அ.தி.மு.க. முன்னெடுத்து செல்லும்.

    புதுச்சேரி:

    முஸ்லிம் சமுதாய மக்களின் நலனுக்காக உடனே வக்பு வாரியம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் இன்று ஏனாம் வெங்கடாசலப் பிள்ளை வீதியில் உள்ள வக்பு வாரிய அலுவலகம் எதிரில் நடந்தது.

    அ.தி.மு.க. மாநில செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில வக்கீல் பிரிவு பொருளாளர் சையத் அஹமத் மொஹிதீன், மாநில சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்கள் ஜானி பாய், ரபீக் பிரம்மா, அமீர்ஜான், மாநில இளைஞர், இளம் பெண்கள் பாசறை இணைச் செய லாளர் முகமது இஸ்மாயில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது:-

     புதுவை மாநிலத்தில் கடந்த 2016-2021, 5 ஆண்டு கால காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி ஆட்சியிலும், தற்போதைய 2 ஆண்டு கால பா.ஜனதா என். ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சியிலும் ஏறத்தாழ 7 ஆண்டு காலமாக வக்பு வாரியம் அமைக்கப்பட வில்லை.

    இதனால், இஸ்லாமிய சமுதாய மக்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெறுவதிலும், கல்வி கட்டண உதவிகள் பெறு தலிலும், அரசின் மூலம் சிறு கடன் உதவி பெறுவதிலும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    கடந்த 7 ஆண்டு காலமாக முஸ்லீம் சமுதாய மக்களுக்கு சிறுகடன்கள் வழங்கும் திட்டம் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது.

    பலகோடி ரூபாய் மதிப்புள்ள வக்பு வாரிய சொத்துக்கள் பல்வேறு அரசியல் பின்னணி உள்ள வர்களால் அபகரிக்கப்பட்டு வருகின்றன.

    ஆளும் என்.ஆர்.காங்கிரஸ்-பா.ஜனதா கூட்டணி ஆட்சியிலும் இதுவரை வக்பு வாரியத்தை அமைக்காமல் இஸ்லாமிய சமுதாயத்தை வஞ்சித்து வருகிறது. சிறுபான்மை மக்களுடைய நலனுக்கு உற்ற தோழனாக இருப்பது அ.தி.மு.க. மட்டுமே. வக்பு வாரியம் அமைக்காவிட்டால் 

    இவ்வாறு அன்பழகன் பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் அவைத் தலைவர் அன்பா னந்தம், மாநில ஜெ. பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாஸ்கர், மாநில துணைத் தலைவர் ராஜாராமன், மாநில முன்னாள் இணைச் செயலாளர்கள் வீரம்மாள், மகாதேவி, பி.கணேசன், ஆர்.வி.திருநாவுக்கரசு, மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர செயலாளர் அன்பழகன் உடையார். முன்னாள் மாநில துணைச் செயலா ளர்கள் உமா, குணசேகரன், எம்.ஏ.கே.கருணாநிதி,

    பி எல்.கணேசன், நாகமணி, வி.கே.மூர்த்தி, குமுதன் காந்தி, ஜெய.சேரன், மண வாளன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர்கள் பாண்டு ரங்கன், சிவாலயா இளங்கோ, மாநில ஜெ. பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • வையாபுரி மணிகண்டன் வலியுறுத்தல்
    • 6 இடங்கள் வெளிமாநி லத்தை சேர்ந்தவர்களுக்கும், 4 இடங்கள் வெளிநாட்டினர் என்ற போர்வையிலும் தாரை வார்க்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.தி.மு.க. துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    புதுவை அரசு இந்திரா காந்தி மருத்துவக்கல்லூரி யில் மொத்தம் 22 வெளிநாடு வாழ் இந்தியர் மருத்துவ இடங்களில் 10 இடங்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் நிரம்பியது. எஞ்சிய 12 இடங்கள் நிரம்பவில்லை.

    இந்த இடங்களை சென்டாக் அதிகாரிகள் தங்களுக்கு வேண்டிய வர்களுக்கு தாரை வார்த்துள்ளனர். 3-ம் கட்ட கலந்தாய்வில் காலியாக இருந்த 12 இடங்களில் 10 இடங்கள் நிரப்பப் பட்டுள்ளது. இதில் 6 இடங்கள் வெளிமாநி லத்தை சேர்ந்தவர்களுக்கும், 4 இடங்கள் வெளிநாட்டினர் என்ற போர்வையிலும் தாரை வார்க்கப்பட்டுள்ளது.

    கடந்த காலங்களில் வெளிநாடு வாழ் இந்தியர் இடங்கள் முழுமையாக நிரம்பாவிட்டால், எஞ்சிய இடங்கள் அரசு ஒதுக்கீடாக மாற்றம் செய்யப்படும்.

    ஆனால் தற்போது சென்டாக் அதிகாரிகள் இந்த இடத்தை தங்கள் இஷ்டத்திற்கு பல லட்சம் ரூபாய் விலை வைத்து விற்பனை செய்துள்ளனர். இந்த ஒதுக்கீடை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.

    என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்கள் அனைத்தையும், புதுவை மாணவர்கள் பலனடையும் வகையில் அரசு ஒதுக்கீடாக அறிவித்து கலந்தாய்வை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவில் கும்பாபிஷேகம் நடத்த தடையில்லா சான்று வழங்க வேண்டும்.
    • தற்போது 3-வது முறையாக கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

     புதுச்சேரி:

    உப்பளம் தொகு திக்குட்பட்ட டாக்டர் அம்பேத்கர் சாலை அவ்வை நகரில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோவில் சுமார் 35 ஆண்டுகள் பழமையானது.

    மேலும் 2 முறை கும்பாபிஷேகம் நடத்தி முடிக்கப்பட்டது. தற்போது 3-வது முறையாக கும்பாபிஷேகம் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து கோவிலை புதுப்பித்து கட்டுவதற்கு தடையில்லா சான்றிதழ் அளிக்க கோரி கென்னடி எம்.எல்.ஏ. புதுவை தாசில்தார் பிரீதிவி மற்றும் நகராட்சி ஆணையர் சிவகுமாரிடம் மனு அளித்தார்.

    மேலும் திப்புரா யப்பேட்டையில் அமைந்து ள்ள இடுகாட்டில் பெயர் பலகை அமைக்கவும் மற்றும் மின் விளக்கு தண்ணீர் வசதி செய்துதர வேண்டும் என்று கென்னடி எம்.எல்.ஏ. அவர்களிடம் கேட்டு கொண்டார்.

    இந்நிகழ்ச்சியின் போது ஆதிதிராவிடர் பஞ்சாயத்து நிர்வாகிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • சமூக அமைப்புகள் கோரிக்கை
    • அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் எழிலன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    புதுச்சேரி:

    பெண் அமைச்சர் சந்திர பிரியங்கா பதவி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து புதுவை மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஜெயக்குமார், திராவிடர் கழகம் அன்பரசன், தந்தை பெரியார் திராவிடர் கழகம் இளங்கோ, மனித உரிமை கள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் முருகானந்தம், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ் ,பி போல்ட் பஷீர் அகமது, பெரியார் சிந்தனை இயக்கம் தீனா, இந்திய தேசிய இளைஞர் முன்னணி கலைப்பிரியன், தி.மு.க. மாணவர் அணி அமைப்பாளர் மணிமாறன், இந்திய புரட்சியாளர் இயக்கம் டேவிட், முற்போக்கு மாணவர் கழகம் தமிழ்வாணன், அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் எழிலன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

    இதில் பேசிய சமூக அமைப்பினர், ஜனநாயக முறையில் சபாநாயகர் செயல்பட்டால் எம்.எல்.ஏ. என்ற முறையில் சந்திர பிரியங்காவுக்கு ஏற்றப்பட்ட அநீதி குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

    ஜாதி ரீதியாகவும் பாலின ரீதியாக அவர் கொடுமை செய்யப்பட்டது குறித்து வன்கொடுமை சட்டத்தின் கீழ் விசாரணைக்கு சபா நாயகர் உத்தரவிட வேண் டும் என வலியுறுத்தினர்.

    • ஆம்பூர் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா போராட்டத்தை முடித்து வைத்தார்.

    புதுச்சேரி:

    ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் சட்டசபை அருகே ஆம்பூர் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

    ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம் போராட்டத்தை தொடங்கி வைத்தார். கவுரவ தலைவர் அபிஷேகம், பொருளாளர் அந்தோணி, துணைத்தலை வர்கள் சந்திரசேகரன், முருகன், சேகர், மன்னாதன், சிவகுருநாதன், மாநில செயலாளர்கள் தயாளன், துரைசெல்வம், முத்துராமன், மூர்த்தி, ஹேமலதா, செந்தில் முருகன், பாஸ்கர பாண்டி யன், மரி கிறிஸ்டோபர் உட்பட அமைப்பு சாரா தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டார்கள். ஏ.ஐ.டி.யூ.சி. மாநில தலைவர் தினேஷ் பொன்னையா போராட்டத்தை முடித்து வைத்தார்.

    அமைப்புசாரா சங்கத்தில் உறுப்பினராக உள்ளவர்களுக்கு தீபாவளி பண்டிகை காலங்களில் வழங்கி வரும் உதவித் தொகையை ரூ.5 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்.

    கட்டுமான வாரிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை ரூ.5 ஆயிரம் உயர்த்தி வழங்க வேண்டும். பாசிக், பாப்ஸ்கோ,

    கே.வி.கே., பாண்டெக்ஸ், பாண்பேப் உள்ளிட்ட புதுவை அரசு சார்பு நிறுவ னங்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நிலுவை சம்பளத்திலிருந்து 5 மாத சம்பளம் போனஸ் வழங்க வேண்டும்.

    அமைப்பு சாரா நலவாரி யத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவர தேவையான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். விவசாய தொழிலாளர்கள் நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்து தீபாவளி உதவித்தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

    • பவித்ரா கணவனிடம் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    திருபுவனை சீனிவாசா நகரை சேர்ந்தவர் நிலவழகன். இவர் வில்லியனூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

    இவரது மனைவி பவித்ரா (வயது 25). கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ஆனால் குழந்தைகள் இல்லை. இதனால் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    அப்போதெல்லாம் பவித்ரா கணவனிடம் கோபித்து கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். பின்னர் நிலவழகன் மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வருவார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று காலை இதுபோல் கணவன்-மனைவிக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டது. அதன் பின்னர் நிலவழகன் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்து வீடு திரும்பிய போது வீட்டில் பவித்ரா இல்லை. கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றிருக்கலாம் என கருதி நிலவழகன் மாமியார் வீட்டில் போன் செய்து விசாரித்தார். ஆனால் பவித்ரா அங்கு செல்ல வில்லை என்பது தெரிய வந்தது.

    மேலும் உறவினர்கள் வீடு உள்பட பல இடங்களில் தேடியும் எங்கும் பவித்ரா இல்லை. இதையடுத்து நிலவழகன் தனது மனைவி மாயமானது குறித்து திருபுவனை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • விசாரணையில் அவர் வாரணப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு பகுதியை சேர்ந்த சஞ்சீவி (வயது19) என்பது தெரிய வந்தது.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை வாணரப்பேட்டை ராஜராஜன் வீதியில் நேற்று மாலை ஒரு வாலிபர் குடிபோதையில் நின்று கொண்டு ரகளை செய்து கொண்டிருந்தார். அப்போது ரோந்து வந்த முதலியார்பேட்டை போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் வாரணப்பேட்டை எல்லையம்மன் கோவில் தோப்பு பகுதியை சேர்ந்த சஞ்சீவி (வயது19) என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மதகடிப்பட்டு 4 முனை சந்திப்பில் ஒரு வாலிபர் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பெண்களை பாட்டு பாடி கிண்டல் செய்து கொண்டிருந்தார்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருபுவனை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அவர் திருபுவனை பெரியபேட் பகுதியை சேர்ந்த கவுதம்(33) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கைது செய்தனர்.

    • விவசாய சங்க தலைவர் குமாரசாமி முன்னிலை வகித்தார்.
    • புதுவை நுகர்வோர் அமைப்பு சிவசந்திரன் மற்றும் பாலசந்தர், ரவிச்சந்திரன், சக்தி பாலன், புவனேஸ் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டு பனை விதை நடவு செய்தனர்.

    புதுச்சேரி:

    அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி தனசுந்தராம்பாள் அறக்கட்டளை சார்பில் பனை விதை நடவு நிகழ்ச்சி பூரணாங்குப்பத்தில் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் தலைவர் பூரணாங்குப்பம் ஆனந்தன் தலமை தாங்கி அப்துல் கலாம் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். விவசாய சங்க தலைவர் குமாரசாமி முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து பேரடைஸ் பீச் பகுதியில் 500 பனை விதை நடவு செய்யப்பட்டது.

    நிகழ்ச்சியில் புதுவை நுகர்வோர் அமைப்பு சிவசந்திரன் மற்றும் பாலசந்தர், ரவிச்சந்திரன், சக்தி பாலன், புவனேஸ் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்டு பனை விதை நடவு செய்தனர்.

    • தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு குடிபோதையில் ராஜாராம் திருபுவனை பெரிய காலனியில் மாமியார் வீட்டுக்கு சென்று வருவார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    கண்டமங்கலம் அருகே பள்ளிநேலியனூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜாராம் (வயது45). கூலி ெதாழிலாளி. இவருக்கும் திருபுவனை பெரிய காலனியை சேர்ந்த ஆனந்தவள்ளி என்பவருக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

    கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் ஆனந்த வள்ளி இறந்து போனார். மனைவி இறந்ததால் சோகத்துக்குள்ளான ராஜாராம் மது பழக்கத்துக்கு ஆளானார். தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு குடிபோதையில் ராஜாராம் திருபுவனை பெரிய காலனியில் மாமியார் வீட்டுக்கு சென்று வருவார்.

    அதுபோல் நேற்று ராஜாராம் மது குடித்து விட்டு மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது குடிபோதையில் அங்குள்ள கழிவுநீர் வாய்க்காலில் அவர் தவறி விழுந்தார். இதில் சிறிது நேரத்தில் ராஜாராம் பரிதாபமாக இறந்து போனார்.

    இதுகுறித்து அவரது சகோதரர் பாலமோகன் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை

    ×