என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
குடிபோதையில் கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்த தொழிலாளி சாவு
- தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு குடிபோதையில் ராஜாராம் திருபுவனை பெரிய காலனியில் மாமியார் வீட்டுக்கு சென்று வருவார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
கண்டமங்கலம் அருகே பள்ளிநேலியனூர் இந்திரா நகரை சேர்ந்தவர் ராஜாராம் (வயது45). கூலி ெதாழிலாளி. இவருக்கும் திருபுவனை பெரிய காலனியை சேர்ந்த ஆனந்தவள்ளி என்பவருக்கும் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவால் ஆனந்த வள்ளி இறந்து போனார். மனைவி இறந்ததால் சோகத்துக்குள்ளான ராஜாராம் மது பழக்கத்துக்கு ஆளானார். தினமும் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு குடிபோதையில் ராஜாராம் திருபுவனை பெரிய காலனியில் மாமியார் வீட்டுக்கு சென்று வருவார்.
அதுபோல் நேற்று ராஜாராம் மது குடித்து விட்டு மாமியார் வீட்டுக்கு சென்றார். அப்போது குடிபோதையில் அங்குள்ள கழிவுநீர் வாய்க்காலில் அவர் தவறி விழுந்தார். இதில் சிறிது நேரத்தில் ராஜாராம் பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது சகோதரர் பாலமோகன் கொடுத்த புகாரின் பேரில் திருபுவனை






