என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • புரட்டாசி மாதத்தில் பவித்ரோற்சவ விழா தொடங்கியது.
    • விதி உலா சென்ற பிறகு சில தோஷங்கள் ஏற்படும்

    புதுச்சேரி:

    மணக்குள விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் பவித்ரோற்சவ விழா தொடங்கியது. ஆண்டு தோறும் பிரம்மோற்சவம் முடிந்தவுடன் இந்த பவித்ரோற்சவம் நடப்பது வழக்கம் பிரம்மோற்சவத்தில் உற்சவர் 22 நாட்கள் வீதி உலா சென்று வந்த பிறகு புரட்டாசி மாதத்தில் பவித்ரா உற்சவம் நடக்கும்.

    உற்சவ மூர்த்தி விதி உலா சென்ற பிறகு சில தோஷங்கள் ஏற்படும். அந்த தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கு இந்த பவித்ரோற்சவம் நடப்பது வழக்கம். நேற்று மாலை அணுக்கை பூஜையுடன் தொடங்கிய பிரம்மோற்சவ விழா வருகிற 19-ந் தேதி இரவு வரை கிடைக்கிறது

    • ஆலோசனைக் கூட்டம் பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
    • சங்க தலைவருமான தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற இருக்கின்ற முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தின் (லீக்) தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு முன்னாள் ராணுவ வீரரும் தவளக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.

    இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் பெருமாள், ஜோதிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேர்தல் குறித்த ஆலோசனைகளை வழங்கினர். இந்த கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் குப்பன், மோகன், சிசுபாலன், குமரன், பழனி, கோதண்டராமன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பலர் தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.

    மேலும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். தேர்தலில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பவர் முன்னாள் ராணுவ வீரர்களின் நலனின் அக்கறை கொள்ள வேண்டும்.

    அவர்களது கஷ்டங்களை புரிந்து கொண்டு தேவையான உதவிகளை செய்வதற்கு முன்வர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.

    • மருத்துவ கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார்.
    • அலைய்டு ஹெல்த் சயின்ஸ் டீன் ஆலிஸ் கிஸ்கு வரவேற்றார்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவ படிப்பு தினம் மற்றும் மருத்துவ துறையில் அலைய்டு ஹெல்த் சயின்ஸ் படிப்பின் முக்கிய பங்கு குறித்த கருத்தரங்கு கல்லூரி அரங்கில் நடைபெற்றது.

    மருத்துவ கல்லூரி முதல்வர் அனில் பூர்த்தி தலைமை தாங்கினார். அலைய்டு ஹெல்த் சயின்ஸ் டீன் ஆலிஸ் கிஸ்கு வரவேற்றார்.

    பிம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக ஆறுபடை மருத்துவ கல்லூரி அலைய்டு ஹெல்த் சயின்ஸ் இயக்குனர் பேராசிரியர் ஆண்ட்ரூ ஜான் கலந்து கொண்டு பேசினார். பின்னர் மாணவிகளின் நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் செவிலியர் கல்லூரி முதல்வர் மோனி உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நிபுணர்கள் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மாணவ மாணவிகளின் சுவரொட்டி விளக்கப்பட கண்காட்சி நடைபெற்றது.

    முடிவில் இயன் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ஸ்ரீ காந்த் நன்றி கூறினார்.

    • அரிச்சுவடி ஹெல்த் டிரஸ்டி அரசமா தேவி ரவிச்சந்திரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
    • ரோட்டரி முன்னாள் மாவட்ட கவர்னர் பிரை யோன் ஓவிய போட்டியை தொடங்கி வைத்தார்.

    புதுச்சேரி:

    அரிச்சுவடி மனநல மையம் சார்பில் உலக மனநல மாத விழிப்புணர்வு விழா காந்தி திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதன்மை சிறப்பு விருந்தின ராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மனநலம் மற்றும் மன அழுத்தம் பற்றி விழிப்பு ணர்வு குறித்து சிறப்புரை யாற்றினார்.

    சிறப்பு விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்று மனநல விழிப்புணர்வு பலகையில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.

    மேலும் அரிச்சுவடி மனநல மையத்தில் உள்ள மன நோயாளிகள் பங்கேற்ற யோகா போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு வழங்கினார்.

    இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அரிச்சுவடி மனநல மையத்தில் உள்ள டாக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசு வழங்கினார். வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. கேரம் மற்றும் சதுரங்க போட்டியை தொடங்கி வைத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு ரோஜா மற்றும் துளசி செடிகளை வழங்கினார்.

    ரோட்டரி முன்னாள் மாவட்ட கவர்னர் பிரை யோன் ஓவிய போட்டியை தொடங்கி வைத்தார். மனநல மருத்துவர் சத்திய மூர்த்தி சிறப்புரையாற்றி விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைக ளுக்கு பரிசு வழங்கினார். டாக்டர் அசோகன் இசை நாற்காலி போட்டியை தொடங்கி வைத்தார். ரோட்டரி மாவட்ட துணை கவர்னர் வைத்தியநாதன் பாரத நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.

    ஜோதி கண் மருத்துவ மனை டாக்டர் வனஜா வைத்திய நாதன், ரோட்டரி மாவட்ட துணை கவர்னர் திருமாறன், ரோட்டரி கிளப் பிரெஞ்சி சிட்டி தலைவர் சீனிவாசன், செயலாளர் ராமசந்திரன், முன்னாள் துணை கவர்னர் செந்தாமரை கண்ணன், முன்னாள் தலைவர்கள் சதீஷ்குமார், சாதிக், தேவராஜ், கோதை சதீஷ்குமார், கார்த்திகேயன், ஜெயக்குமார், பிரசாந்த், டாக்டர்கள் சாய்தர்ஷினி, அரவிந்தன், ஓமியோபதி மருத்துவர் கலையரசி ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைக ளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினர்.

    இயற்கை மற்றும் யோகா மருத்துவர் நவசக்தி நடனமாடிய குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார். முன்னதாக அரிச்சுவடி மனநல மைய இயக்குனர் டாக்டர் இளவழகன் அனை வரையும் வரவேற்று நினைவு பரிசு வழங்கினார்.

    அரிச்சுவடி ஹெல்த் டிரஸ்டி அரசமா தேவி ரவிச்சந்திரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

    நிகழ்ச்சியின் முடிவில் ஆத்திசூடி சிறப்பு பள்ளி தாளளர் டாக்டர் சத்திய வண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை அரிச்சுவடி மனநல மைய ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 15 தியேட்டர்களில் லியோ திரைப்படம் திரையிடப்படுகிறது.
    • ரசிகர்கள் சார்பில் 19-ந்தேதி காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி அரசுக்கு மனு அளிக்கப்பட்டது.

    நடிகர் விஜய் நடித்த, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் வரும் 19-ந்தேதி வெளியாகிறது.

    லியோ திரைப்படத்துக்கு 4 நாட்கள் நாள்தோறும் 5 காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுவையில் நகரம் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள 15 தியேட்டர்களில் லியோ திரைப்படம் திரையிடப்படுகிறது.

    இதுமட்டுமின்றி ரசிகர்கள் சார்பில் 19-ந்தேதி காலை 7 மணிக்கு சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரி அரசுக்கு மனு அளிக்கப்பட்டது. இதையடுத்து சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் வல்லவன் தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறுகையில், ரசிகர்கள் சிறப்பு காட்சிக்கான அறிவிப்பு வெளியிடப்படும் என கலெக்டர் வல்லவன் தெரிவித்துள்ளார்.

    • காரைக்காலில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மற்றும் தமிழகத்துக்கு காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடக அரசு மற்றும் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசை கண்டித்து, காரைக்காலில் காவிரி உரிமை மீட்பு குழுவினர் நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    காரைக்கால் புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு விவசாய சங்க அமைப்பா ளர்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று கர்நாடக அரசு மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

    • ரமேஷ் உள்ளிட்ட சிலருடன், மத கடி வாட்டர் டேங்க் அருகில் மது குடித்து கொண்டிருந்த தாக கூறப்படுகிறது.
    • போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் மதகடி தோமாஸ் அருள் திடலைச் சேர்ந்தவர் பிரசாந்த் (வயது24). இவர் கும்ப கோணத்தில் நடைபெற்ற கபடி போட்டியில், 2-ம் பரிசு பெற்ற மகிழ்ச்சியில், நண்பர்கள் டேவிட், சூரியா, அலெக்ஸ், ரமேஷ் உள்ளிட்ட சிலருடன், மத கடி வாட்டர் டேங்க் அருகில் மது குடித்து கொண்டிருந்த தாக கூறப்படுகிறது. அப்போது, இந்த கபடிக்குழு வெற்றிபெற நான்தான் காரணம் என ரமேஷ் என்பவர் கூறியதாக வும், அதற்கு, பிரசாந்த் ஏன் சூரியா நல்ல விளையாட வில்லையா என கேட்டதாக வும் இதனால் ஆத்திரம் அடைந்த ரமேஷ் பீர்பாட்டி லால் பிரசாந்த் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் காயம் ஏற்பட்ட பிரசாந்த் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். அங்கு பிரசாந்த் நிரவி போலீசில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    அதேபோல், ரமேஷ் நிரவி போலீசில் கொடுத்த மற்றொரு புகாரில், பிரசாந்த் இந்த கபடிகுழு வெற்றி பெற நான்தான் காரணம் என கூறியதால் எங்க ளுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து நான் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்குசென்றேன். வீட்டின் அருகே சென்ற போது, மேற்படி பிரசாந்த் தனது நண்பர்கள் அஜித், சிவக்குமார், கார்த்திக் ஆகி யோருடன் என்னை வழி மறித்து, என்னை தாக்கி னார்கள். இதில் காயம் அடைந்த நான் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச் சைக்காக சேர்க்க பட்டேன். மேலும் என் மீது தாக்குதல் நடத்திய மேற்கண்ட 4 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவது புதுவை கடற்கரையைதான்.
    • கடல் நீரைவிட செம்மண் நீரின் அடர்த்தி அதிகம் என்பதால் கடலில் தனியாக தெரிகிறது.

    புதுச்சேரி:

    புதுவை கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து அதன் அழகை ரசித்து செல்வது வழக்கம்.

    கோவா கடற்கரைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புவது புதுவை கடற்கரையைதான்.

    இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல புதுவை கடற்கரையில் சுற்றுலா பயணிகளும், பொதுமக்களும் வந்திருந்தனர்.

    அப்போது திடீரென பழைய வடிசாராய ஆலையின் பின்புறம் உள்ள குறிப்பிட்ட பகுதியில் கடல் நீரின் நிறம் மாறியிருந்தது. பிற பகுதிகளில் நீல வண்ணத்தில் இருக்கும்போது, அந்த பகுதி மட்டும் செம்மண் நிறத்தில் மாறியிருந்தது. ஒரு கிலோ மீட்டர் அளவில் குருசுகுப்பம் பகுதி வரை செம்மண் நிறமாக காட்சியளித்தது.

    இதனால் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்த சுற்றுலா பயணிகள் தலைமை செயலகம் எதிரே உள்ள மணல் பரப்பில் இறங்கி, நிறம் மாறியிருந்த கடலின் அழகை புகைப்படம் எடுத்தனர்.

    இது தொடர்பாக மீனவர்களிடம் கேட்டபோது ஆரோவில் பகுதியில் மழை பெய்தால், அங்குள்ள செம்மண் மேட்டு பகுதிகளில் உள்ள மணல் சரிந்திருக்கும், இதனால் அந்த செம்மண் நீர் நகர்ந்து கடலுக்கு வந்திருக்கும் என்றனர்.

    கடல் நீரைவிட செம்மண் நீரின் அடர்த்தி அதிகம் என்பதால் கடலில் தனியாக தெரிகிறது. அலையில் செம்மண் கடற்கரையில் தேங்கியதும் நிறம் மீண்டும் நீலமாக மாறும் என்றனர். 

    • உப்பளம் தொகுதிக்குட் பட்ட உடையார் தோட்டம் பகுதியில் தொடர்ந்து மின்வெட்டு இருந்து வருகிறது.
    • அடிக்கடி அங்குள்ள வீட்டு மின் சாதன பொருட்கள் பழுதாகிறது.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்குட் பட்ட உடையார் தோட்டம் பகுதியில் தொடர்ந்து மின்வெட்டு இருந்து வருகிறது. மேலும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக அடிக்கடி அங்குள்ள வீட்டு மின் சாதன பொருட்கள் பழுதாகிறது.

    இது பற்றி அப்பகுதி மக்கள் தொகுதி எம்.எல்.ஏ.வான அனிபால் கென்னடியின் கவனத்துக்கு கொண்டு சென்றனர். இதையடுத்து கென்னடி எம்.எல்.ஏ. மரப்பாலம் மின்துறை உதவி பொறியாளர் கில்பர்ட் ஜேம்ஸ் மற்றும் இளநிலை பொறியாளர் செல்வ முத்தையன் ஆகியோரை சந்தித்து இது சம்பந்தமாக எடுத்துரைத்தார்.

    இதை தொடந்து மின் துறை அதிகாரிகள் கென்னடி எம்.எல்.ஏ.வின் கோரிக்கையை ஏற்று இக்குறைகளை உடனடியாக சரி செய்வதாக உறுதியளித்தனர். இந்த சந்திப்பின் போது தி.மு.க. தொகுதி செயலாளர் சக்திவேல், ரகுராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • புதுவையில் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது.
    • இதனால் பொது மக்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    புதுச்சேரி,:

    புதுவையில் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கி உள்ளது. இதனால் பொது மக்களுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன.

    இதனை தடுக்கும் வகையில் புதுவை வடக்கு மாநில அ.ம.மு.க. இணைச் செயலாளர் லாவண்யா மற்றும் மாரி ஆறுமுகம் ஆகியோர் ஏற்பாட்டில் உழவர்கரை தொகுதியில் கொசு மருந்து அடிக்கப்ப ட்டது. தொகுதியில் உள்ள லாம்பர்ட் சரவணன் நகர், ஜவகர் நகர், ஜெயா நகர் உள்ளிட்ட இடங்களில் நடந்த கொசு மருந்து அடிக்கும் பணியை வடக்கு மாநில செயலாளர் எஸ்.டி. சேகர், தெற்கு மாநில செயலாளர் யூ.சி. ஆறுமுகம், வடக்கு மாநில இணைச் செயலாளர் லாவண்யா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்த பணி உழவர்கரை தொகுதி முழுவதும் தொடர்ந்து நடைபெறும். நிகழ்ச்சியில் மூத்த நிர்வாகிகள் ரகுபதி, பொதுக்குழு உறுப்பினர் புஷ்பா, மாணவர் அணி செயலாளர் ஜெகதீஷ், தொகுதி செயலாளர் கலியமூர்த்தி, சதீஷ்குமார் மற்றும் சிவக்குமார், உழவர்கரை நிர்வாகிகள் கில்பர்ட், அருள்ராஜ், சக்திவேல், சண்முகம், குமரேசன், சபர், பிரவீண், குமார், முத்துபாண்டி, அன்புசரளா, அமலா, உமா, சந்திரா, மாலதி, ஜூலி, புஷ்பா, மரி, ராணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பெற்றதற்கான ஆணை வழங்கும் விழா நடந்தது.
    • சரியான நபர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை காவல் துறையில் 53 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி இடங்களுக்கு உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டுகளுக்கு துறை ரீதியான தேர்வு நடந்தது.

    தேர்வில், 29 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 178 ஏட்டுகள் என 207 பேர் பங்கேற்றனர். இதில் எழுத்து தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகளில் 53 பேர் வெற்றி பெற்றனர். இதில் ஒருவர் பணி ஓய்வு பெற்று விட்டதால் 52 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பெற்றதற்கான ஆணை வழங்கும் விழா நடந்தது. கோரிமேடு காவல்துறை சமுதாய கூடத்தில் நடந்த விழாவில் டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ் வரவேற்றார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, பதவி உயர்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ஆணையை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுவையில் இன்று சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதற்கு போலீஸ் அதிகாரிகளே காரணம். போதை பொருள் நடமாட்டம், சைபர் கிரைம்களை போலீசார் கட்டுப்படுத்தி உள்ளனர். சரியான நபர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    விரைவில் 500 ஊர் காவல் படை போலீசார், சப்-இன்ஸ்பெக்டர், டிரைவர், டெக்னீசியன் ஆகிய பணியிடங்கள் நிரப்ப கோப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மக்கள் அமைதியாகவும் நிம்மதியா கவும் வாழ போலீசார் பொறுப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் அனிதாராய், நாரா சைதன்யா, சூப்பிரண்டுகள் ரங்கநாதன், மோகன்குமார், ஜிந்தா கோதண்டராமன், சுபம்கோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். டி.ஐ.ஜி. பிரிஜேந்திரகுமார் யாதவ் நன்றி கூறினார்.

    • டெல்லியில் ஜி-20 உறுப்பு நாடுகளின் பாராளு மன்ற சபா நாயகர்களின் பி-20 மாநாடு நடந்தது.
    • இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசினார்.

    புதுச்சேரி:

    டெல்லியில் ஜி-20 உறுப்பு நாடுகளின் பாராளு மன்ற சபா நாயகர்களின் பி-20 மாநாடு நடந்தது.

    இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து பேசினார். அதன் பின்னர், பிரதமர் மோடி இம்மாநாட்டில் பங்கேற்ற புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வத்திடம் புதுவை மாநிலத்தில் மத்திய அரசின் திட்டங்கள் மற்றும் மாநில வளர்ச்சி குறித்து அக்கறையுடன் கேட்டறிந்தார்.

    மேலும், புதுச்சேரி யூனியன் பிரதேச வளர்ச்சிக்காக மத்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்வதற்கு தயாராக இருப்பதாகவும் உறுதியளித்தார்.

    ×