என் மலர்
புதுச்சேரி

பூரணாங்குப்பத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்க (லீக்)தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது
முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கம் சார்பில் தேர்தல் குறித்த ஆலோசனை கூட்டம்
- ஆலோசனைக் கூட்டம் பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
- சங்க தலைவருமான தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற இருக்கின்ற முன்னாள் ராணுவ வீரர்கள் நல சங்கத்தின் (லீக்) தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் பூரணாங்குப்பம் அங்காளம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு முன்னாள் ராணுவ வீரரும் தவளக்குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவருமான தட்சிணாமூர்த்தி வரவேற்றார்.
இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் பெருமாள், ஜோதிகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தேர்தல் குறித்த ஆலோசனைகளை வழங்கினர். இந்த கூட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்கள் குப்பன், மோகன், சிசுபாலன், குமரன், பழனி, கோதண்டராமன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட பலர் தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.
மேலும் அவர்களது குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். தேர்தலில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட இருப்பவர் முன்னாள் ராணுவ வீரர்களின் நலனின் அக்கறை கொள்ள வேண்டும்.
அவர்களது கஷ்டங்களை புரிந்து கொண்டு தேவையான உதவிகளை செய்வதற்கு முன்வர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.






