என் மலர்
புதுச்சேரி

விழிப்புணர்வு விழாவை முதல்-அமைச்சர் ரங்கசாமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். அருகில் சபாநாயகர் ஏம்பலம் செல்வம் உள்ளார்.
உலக மனநல மாத விழிப்புணர்வு விழா
- அரிச்சுவடி ஹெல்த் டிரஸ்டி அரசமா தேவி ரவிச்சந்திரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
- ரோட்டரி முன்னாள் மாவட்ட கவர்னர் பிரை யோன் ஓவிய போட்டியை தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
அரிச்சுவடி மனநல மையம் சார்பில் உலக மனநல மாத விழிப்புணர்வு விழா காந்தி திடலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதன்மை சிறப்பு விருந்தின ராக முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மனநலம் மற்றும் மன அழுத்தம் பற்றி விழிப்பு ணர்வு குறித்து சிறப்புரை யாற்றினார்.
சிறப்பு விருந்தினராக சபாநாயகர் ஏம்பலம் செல்வம் பங்கேற்று மனநல விழிப்புணர்வு பலகையில் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார்.
மேலும் அரிச்சுவடி மனநல மையத்தில் உள்ள மன நோயாளிகள் பங்கேற்ற யோகா போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு பரிசு வழங்கினார்.
இதனை தொடர்ந்து முதல்-அமைச்சர் ரங்கசாமி அரிச்சுவடி மனநல மையத்தில் உள்ள டாக்டர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பரிசு வழங்கினார். வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. கேரம் மற்றும் சதுரங்க போட்டியை தொடங்கி வைத்து நிகழ்ச்சியில் பங்கேற்ற குழந்தைகளுக்கு ரோஜா மற்றும் துளசி செடிகளை வழங்கினார்.
ரோட்டரி முன்னாள் மாவட்ட கவர்னர் பிரை யோன் ஓவிய போட்டியை தொடங்கி வைத்தார். மனநல மருத்துவர் சத்திய மூர்த்தி சிறப்புரையாற்றி விழிப்புணர்வு போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைக ளுக்கு பரிசு வழங்கினார். டாக்டர் அசோகன் இசை நாற்காலி போட்டியை தொடங்கி வைத்தார். ரோட்டரி மாவட்ட துணை கவர்னர் வைத்தியநாதன் பாரத நாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினார்.
ஜோதி கண் மருத்துவ மனை டாக்டர் வனஜா வைத்திய நாதன், ரோட்டரி மாவட்ட துணை கவர்னர் திருமாறன், ரோட்டரி கிளப் பிரெஞ்சி சிட்டி தலைவர் சீனிவாசன், செயலாளர் ராமசந்திரன், முன்னாள் துணை கவர்னர் செந்தாமரை கண்ணன், முன்னாள் தலைவர்கள் சதீஷ்குமார், சாதிக், தேவராஜ், கோதை சதீஷ்குமார், கார்த்திகேயன், ஜெயக்குமார், பிரசாந்த், டாக்டர்கள் சாய்தர்ஷினி, அரவிந்தன், ஓமியோபதி மருத்துவர் கலையரசி ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைக ளுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினர்.
இயற்கை மற்றும் யோகா மருத்துவர் நவசக்தி நடனமாடிய குழந்தைகளுக்கு பரிசு வழங்கினார். முன்னதாக அரிச்சுவடி மனநல மைய இயக்குனர் டாக்டர் இளவழகன் அனை வரையும் வரவேற்று நினைவு பரிசு வழங்கினார்.
அரிச்சுவடி ஹெல்த் டிரஸ்டி அரசமா தேவி ரவிச்சந்திரன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
நிகழ்ச்சியின் முடிவில் ஆத்திசூடி சிறப்பு பள்ளி தாளளர் டாக்டர் சத்திய வண்ணன் நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு களை அரிச்சுவடி மனநல மைய ஊழியர்கள் செய்திருந்தனர்.






