search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவை காவல்துறைக்கு விரைவில் 500 ஊர்காவல் படை போலீசார்
    X

    பதவி உயர்வு ஆணை பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் அமைச்சர் நமச்சிவாயத்திற்கு மரியாதை செலுத்திய காட்சி. அருகில் அரசு கொறடா ஏ.கே.டி.ஆறுமுகம் உள்ளார்.

    புதுவை காவல்துறைக்கு விரைவில் 500 ஊர்காவல் படை போலீசார்

    • சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பெற்றதற்கான ஆணை வழங்கும் விழா நடந்தது.
    • சரியான நபர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை காவல் துறையில் 53 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணி இடங்களுக்கு உதவி சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டுகளுக்கு துறை ரீதியான தேர்வு நடந்தது.

    தேர்வில், 29 உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், 178 ஏட்டுகள் என 207 பேர் பங்கேற்றனர். இதில் எழுத்து தேர்வு உள்ளிட்ட பல தேர்வுகளில் 53 பேர் வெற்றி பெற்றனர். இதில் ஒருவர் பணி ஓய்வு பெற்று விட்டதால் 52 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் பதவி உயர்வு பெற்றதற்கான ஆணை வழங்கும் விழா நடந்தது. கோரிமேடு காவல்துறை சமுதாய கூடத்தில் நடந்த விழாவில் டி.ஜி.பி. ஸ்ரீநிவாஸ் வரவேற்றார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, பதவி உயர்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு ஆணையை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    புதுவையில் இன்று சட்டம்-ஒழுங்கு சரியாக இருப்பதற்கு போலீஸ் அதிகாரிகளே காரணம். போதை பொருள் நடமாட்டம், சைபர் கிரைம்களை போலீசார் கட்டுப்படுத்தி உள்ளனர். சரியான நபர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

    விரைவில் 500 ஊர் காவல் படை போலீசார், சப்-இன்ஸ்பெக்டர், டிரைவர், டெக்னீசியன் ஆகிய பணியிடங்கள் நிரப்ப கோப்புகள் தயார் செய்யப்பட்டுள்ளது. மக்கள் அமைதியாகவும் நிம்மதியா கவும் வாழ போலீசார் பொறுப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் அரசு கொறடா ஏ.கே.டி. ஆறுமுகம், சீனியர் போலீஸ் சூப்பிரண்டுகள் அனிதாராய், நாரா சைதன்யா, சூப்பிரண்டுகள் ரங்கநாதன், மோகன்குமார், ஜிந்தா கோதண்டராமன், சுபம்கோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். டி.ஐ.ஜி. பிரிஜேந்திரகுமார் யாதவ் நன்றி கூறினார்.

    Next Story
    ×