என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • தாழம்பட்டு கெடிலம் ஆற்று பகுதியில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசாரை கண்டதும் வேனில் இருந்த 2 பேர் தப்பியோடினர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த தாழம்பட்டு கெடிலம் ஆற்று பகுதியில் மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், சப். இன்ஸ்பெக்டர் பிரேம்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது கெடிலம் ஆற்றுப்பகுதி சுடுகாட்டில் நின்று கொண்டிருந்த சரக்கு வேன் அருகே போலீசார் சென்றனர்.

    போலீசாரை கண்டதும் வேனில் இருந்த 2 பேர் தப்பியோடினர். அவர்களை போலீசார் விரட்டி பிடிக்க முயற்சித்தனர். இருந்தபோதும் அவர்கள் தப்பிவிட்டனர். இதை யடுத்து போலீசார் வேனில் சோதனை செய்தனர். அதில் கெடிலம் ஆற்றில் இருந்து திருட்டுத் தனமாக மணலை கடத்தி வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக வேனை பறிமுதல் செய்த போலீசார், மணல் திருட்டு சம்பவத்தில் தப்பியோடிய 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    • ஆரோக்கியசாமி மயிலாடுதுறை மாவட்டம் பாலையூரில் உள்ள மின்துறையில் ஒயர்மேனாக வேலை செய்து வருகிறார்.
    • காரைக்காலை அடுத்த தருமபுரத்தில் டைல்ஸ் வேலை செய்துவந்தார்.

    புதுச்சேரி:

    தஞ்சாவூர் திருவிடைமருதூர், புதூர் வடக்கு மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் மயிலாடுதுறை மாவட்டம் பாலையூரில் உள்ள மின்துறையில் ஒயர்மேனாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜெனிடா உஷாரானி. இவர்களுக்கு ஸ்ரீவாக் (வயது 24), கிலாடிஸ் (22), மார்க்வாக் (20) என்ற 3 மகன்கள் உள்ளனர். இதில் ஸ்ரீவாக் என்ஜினியரிங் முடிததுவிட்டு கிடைக்கும் வேலைகளை செய்துவந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களாக, காரைக்காலை அடுத்த தருமபுரத்தில் டைல்ஸ் வேலை செய்துவந்தார். வழக்கம் போல் நேற்று வேலை செய்து கொண்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி தூக்கிவீச ப்பட்டார்,

    காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி யில் சிகிச்சைகாக சேர்த்து இருப்பதாக, ஆரோக்கி யசாமியின் நண்பர் சிவக்குமார் என்பவர் ஆரோக்கியசாமிக்கு தகவல் கூறியுள்ளார். உடனே ஆரோக்கியசாமி காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தபோது, ஸ்ரீவாக் ஏற்கெனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இது குறித்து, ஆரோக்கியசாமி, காரைக்கால் நகர போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அசைவ பிரியர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர்
    • நவீன மீன் அங்காடியில் நடைபெற்று வருகிறது. ஒரு மாத காலமாக புரட்டாசி என்பதால் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை நேரு வீதி பெரிய மார்க்கெட்டில் மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது.

    அதன் வெளிப்பகுதியான நேரு வீதி - காந்தி வீதி சந்திப்பில் வெளியூர்களில் இருந்து லாரிகளில் வரும் மீன்கள் இறக்கப்பட்டு காலை நேரத்தில் ஏலம் விடப்படும். சென்னை ஐகோர்ட்டு உத்தரவுபடி நேரு வீதியில் நடந்து வந்த மீன் ஏலம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு கடந்த மாதம் 12-ந் தேதி மாற்றப்பட்டது.

    அது முதல் மீன் மொத்த விற்பனை மற்றும் சில்லரை விற்பனை நவீன மீன் அங்காடியில் நடைபெற்று வருகிறது. ஒரு மாத காலமாக புரட்டாசி என்பதால் பெரும்பாலானோர் அசைவம் சாப்பிடவில்லை. இதனால் நவீன மீன் அங்காடியில் மீன் வரத்து குறைவாக இருந்தது.

    புரட்டாசி மாதம் நேற்றுடன் முடிந்தது. இந்த நிலையில் இன்று புதன்கிழமை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடியில் மீன் வரத்து அதிகமாக இருந்தது. ஏராளமான வியா பாரிகள் குவிந்து மீன்களை வாங்கி சென்றனர். கொடுவா, சங்கரா, வாளை, வஞ்சிரம், வவ்வா, இறால், கனவா போன்ற மீன் வகைகள் அதிகளவில் வந்திருந்தது.

    அதே வேளையில் நவீன மீன் அங்காடி அசுத்தமான சூழலில் காணப்படுகிறது. மீன் கழிவு நீர் வெளியேற வாய்ப்பு இல்லாததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி இருக்கிறது.நவீன மீன் அங்காடியின் ஐஸ் பிளான்ட்டில் தண்ணீர் வெளியேற முடியாமல் தேங்கி நிற்கிறது. இதனால் நோய் பரவும் அபாயம் இருப்பதாக மீன் வியாபாரிகள் கவலையுடன் தெரிவித்தனர்.

    • சம்பத் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
    • தற்போது இந்த 2 ஏரிகளையும் ஆழப்படுத்தி நீர் தேக்கி மிகப்பெரிய சுற்றுலா தளமாக மாற்ற இந்த அரசின் சுற்றுலா துறையும் பொதுப் பணித்துறை யும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

    புதுச்சேரி:

    வேல்ராம்பட் ஏரியில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணணிடம் முதலியார் பேட்டை சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்தார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    முதலியார்பேட்டை வேல்ராம்பட்டில் உள்ள உழந்தை மற்றும் முருங்கப்பாக்கம் ஆகிய 2 பெரிய ஏரிகள் உள்ளன நகரப் பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய நீர் பிடிப்பு பகுதியாகவும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்கவும் இந்த ஏரிகள் பயன்படுகிறது.

    இந்த ஏரிக்கு ஊசுடு ஏரியிலிருந்து உபரி நீர் கால்வாய் வழியாக வந்தடைகிறது. இந்நீர் வழிப்பாதையில் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரும் கலந்து வருகின்றது. தற்போது இந்த 2 ஏரிகளையும் ஆழப்படுத்தி நீர் தேக்கி மிகப்பெரிய சுற்றுலா தளமாக மாற்ற இந்த அரசின் சுற்றுலா துறையும் பொதுப் பணித்துறை யும் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

    இதற்கு முதலியார் பேட்டை தொகுதி மக்கள் சார்பில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ஏரிகளில் மழை நீரை தேக்க பல கோடி ரூபாய் செலவில் புதுச்சேரி பொலிவுறு நகரத்திட்டம் மூலம் நிதி ஒதுக்கப்பட்டு பொதுப்பணி த்துறை சார்பில் வாய்க்கால் அமைக்க ப்பட்டு வருகின்றது. இந்த ஏரிக்கு வரும் நீரில் கழிவு நீரும் கலந்து வருகின்றது. இதனால் இந்த ஏரி கழிவுநீர் தேங்கி குட்டையாக மாறி வரும் அபாயம் உள்ளது. இதனால் இந்த பகுதியில் சுற்றுலா திட்டம் நிறைவேற்ற வாய்ப்பு குறைந்து, நோக்கமே கேள்விக்குறியாகி விடும்.

    எனவே, இந்த ஏரியின் முகப்பில் ஒரு சுத்திகரிப்பு நிலையம் அமைத்து ஏரிக்கு வரும் நீரை முறையாக சுத்திகரிப்பு செய்து பின்னர் தான் நீரை ஏரிக்கு செல்லும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கணபதியின் மாமனார் கண்ணதாசன் ஆகியோர் ரவியை தடியால் அடித்ததில் அவருக்கு உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
    • தேவா கொடுத்த புகாரின் பேரில் புகாரின் பேரில் ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்தனர்.

    புதுச்சேரி:

    ஆரோவில் அருகே இடையஞ்சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி என்கிற தேவா (வயது40). இவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவர் சொந்த இடத்தில் வீடு கட்டி வரும் நிலையில், இவரது பக்கத்து வீட்டை சேர்ந்த கண்ணன் மகன்களான கணபதி மற்றும் கார்த்தி என்கிற தளபதி ஆகியோர் தேவாவிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது கணபதி அவரது சகோதரர் கார்த்தி என்கிற தளபதி மற்றும் கணபதியின் மாமனார் கண்ணதாசன் ஆகியோர் ரவியை தடியால் அடித்ததில் அவருக்கு உடலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

    இதுகுறித்து தேவா கொடுத்த புகாரின் பேரில் புகாரின் பேரில் ஆரோவில் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்கு பதிவு செய்து கணபதி மற்றும் கார்த்திக் என்கிற தளபதியை கைது செய்தனர். தலைமறைவான கண்ணதாசனை தேடி வருகின்றனர்.

    • 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கொலுசு, ரூ.13 ஆயிரத்து 500 ரொக்கபணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது
    • வீடு புகுந்து நகை பணம் திருடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை அடுத்த பாகூர் திருமால் நகரை சேர்ந்தவர் இந்திரகுமார் (40). இவர் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுகன்யா (31) கடலூரில் உள்ள ஹோட்டலில் வேலை செய்து வருகின்றார். இவர்களுக்கு 2 பிள்ளைகள். நேற்று காலை கணவன் - மனைவி 2 பேரும் வழக்கம் போல் வேலைக்கு சென்றனர்.

    வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சுகன்யா, வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டுக்குள் சென்று பார்த்த போது, பீரோ திறந்து பொருட்கள் சிதறி கிடந்தன. அதில் இருந்த 1¼ பவுன் தங்க நகை, 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கொலுசு, ரூ.13 ஆயிரத்து 500 ரொக்கபணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் ஆகும். இது குறித்து சுகன்யா இந்திரகுமாரிடம் தெரிவித்தார்.

    அவர் பாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார் . போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோவில் பதிவான கைரேகை தடயங்களை சேகரித்தனர். வழக்கமாக சாவியை வைத்து செல்லும் இடத்தை நோட்ட மிட்டவர்கள் தான் கைவ ரிசை காட்டியிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    இந்த திருட்டு சம்பவம் குறித்து இந்திரகுமார் கொடுத்த புகாரின் பேரில் பாகூர் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார், உதவி சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டபகலில் வீடு புகுந்து நகை பணம் திருடிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறுகிறது.
    • பராமரிப்பு பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் கழிவுநீர் குழாய் பராமரிப்பு பணியில் ஈடுபடுபவர்கள் குறித்து விவரங்களை சேகரிப்பா ர்கள்.

    புதுச்சேரி:

    கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி அளவிலான தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின்படி பல்வேறு நிலைகளில் ஈடுபடும் முக்கிய தூய்மை பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நகர் மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆணையர் புகேந்திரி முன்னிலை வகித்தார்.

    இந்த கணக்கெடுப்பில், கழிவுநீர் வண்டி மூலம் கழிவுநீர் நச்சுத் தொட்டிகளை எந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுபவர்கள், பொது, சமுதாய, நிறுவன கழிப்பறை களை சுத்தம் செய்பவர்கள், மழைநீர் வடிகால் சுத்தம் செய்பவர்கள் கழிவுநீர், மலக்கசடு சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் கழிவுநீர் குழாய் பராமரிப்பு பணியில் ஈடுபடுபவர்கள் குறித்து விவரங்களை சேகரிப்பா ர்கள். இந்த கணக்கெடுக்கும் பணியானது தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் (என்.யு.எல்.எம்) மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

    நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிர மூர்த்தி, பொது சுகதார பிரிவு எழுத்தர் அண்ணா மலை, தூய்மை பாரத மேற்பார்வையாளர் ஜாகிதா பர்வின், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் பழனி, சங்கர் மற்றும் களப்பணி உதவியாளர் விஜய்குமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை டீன் வேல்முருகன் அனைவரையும் வரவேற்றார்.
    • மாணவர்களுக்கு ஏற்படும் பல பயன்களையும் குறித்து விரிவாக விளக்கினார்.

    புதுச்சேரி:

    மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் எந்திரவியல் துறை சார்பாக சொசைட்டி ஆப் ஆட்டோமோட்டிவ் என்ஜினீயர்ஸ் கிளை தொடக்க விழா நடைபெற்றது.

    கல்லூரி கல்வி குழும தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், செயலாளர் நாராயணசாமி, பொருளாளர் ராஜராஜன், கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வர் வெங்கடாஜலபதி ஆகியோர் பங்கேற்றனர்.

    மணக்குள விநாயகர் என்ஜினீயரிங் கல்லூரியின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை டீன் வேல்முருகன் அனை வரையும் வரவேற்றார். கல்லூரியின் டீன் அறிவழகர் வாழ்த்துரை வழங்கினார்.

    விழாவில் எஸ்.ஏ.ஈ. அமைப்பின் தென்பிராந்திய தலைவர் பாஸ்கர சேதுபதி, செயலாளர் விஜயகுமார் மற்றும் பொருளாளர் கிருத்திகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

    தலைமை விருந்தினராக சென்னை மகேந்திரா வேர்ல்டு சிட்டி, மகேந்திரா அண்ட் மகேந்திரா நிறுவன திட்ட மேலாண்மை துறை துணை பொது மேலாளர் முத்துக்குமார் எஸ்.ஏ.ஈ. அமைப்பின் பல பணிகளையும், அதனால் மாணவர்களுக்கு ஏற்படும் பல பயன்களையும் குறித்து விரிவாக விளக்கினார்.

    எஸ்.ஏ.ஈ. இந்தியாவின் கல்லூரி கிளை துவங்கியதற்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது. மாணவ பொறுப்பாளர்களுக்கு எஸ்.ஏ.ஈ. அமைப்பின் விதிமுறைகள் விரிவாக விளக்கப்பட்டது. எந்திரவியல் துறை தலைவர் பேராசிரியர் சோழ மன்னன் அனைவருக்கும் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை எந்திரவியல் துறை பேராசிரியர்கள் ரவிசங்கர், தியாகராஜன் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சேர்ந்து செய்திருந்தனர்.

    • வில்லியனூர்-மரப்பாலம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
    • பெரிய காலாப்பட்டு, கனகசெட்டிகுளம், அமைதி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    புதுச்சேரி:

    வில்லியனூர்-மரப்பாலம் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. அதையொட்டி காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை ஜி.என்.பாளையம், நடராஜன் நகர், எழில் நகர், வெண்ணிசாமி நகர், திருக்குறளார் நகர், வசந்தம் நகர், ஆனந்தம் நகர், கணபதி நகர், வி.ஐ.பி. நகர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நகர், தென்றல் நகர், பாலாஜி நகர்,

    ரோஜா நகர், அரும்பார்த்தபுரம், தக்க குட்டை, மூலக்குளம், ஜே.ஜே.நகர், அன்னை தெரசா நகர், உழவர்கரை, நண்பர்கள் நகர், சிவகாமி நகர், கம்பன் நகர், மரியாள் நகர், தேவா நகர், அன்னை நகர், அபிராமி நகர், கல்யாணசுந்தரமூர்த்தி நகர், ஜெயா நகர், கமலம் நகர், புது நகர், தட்சிணாமூர்த்தி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினி யோகம் நிறுத்தப்படுகிறது.

    இதேபோல் பிள்ளைச்சாவடி மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெரிய காலாப்பட்டு, கனகசெட்டிகுளம், அமைதி நகர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது.

    • புதுவை 2, காரைக்கால் 2 என மொத்தம் 4 ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
    • இந்த தகவலை வன பாதுகாவலர் வஞ்சுலவள்ளி தெரிவித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் வனம் மற்றும் வனவிலங்கு துறையின் புதுவை, காரைக்கால் மண்டல அலுவலகங்களில் ஓய்வுபெற்ற அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் 6 மாதம் நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளது.

    புதுவை 2, காரைக்கால் 2 என மொத்தம் 4 ஆலோசகர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

    இதில் அரசு அலுவலக ங்களில் கண்காணிப்பாளர், ஆலோசகர்களாக பணியாற்றி ஓய்வு பெற்ற 65 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து வரும் 31-ந் தேதிக்குள் வனத்துறை அலுவலகத்தில் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை வன பாதுகாவலர் வஞ்சுலவள்ளி தெரிவித்துள்ளார்.

    • அதிகாரிகளுடன் அமைச்சர் சாய்.சரவணன்குமார் ஆலோசனை நடத்தினார்.
    • பாப்ஸ்கோ நிர்வாக இயக்குனர் முத்து கிருஷ்ணன் உட்பட அதிகாரி கள் பலர் பங்கேற்றனர்.

    புதுச்சேரி:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு அங்காடி நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சாய்.சரவணன்குமார் ஆலோசனை நடத்தினார்.

    குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் துறை செயலாளர் பங்கஜ்கு மார், இயக்குனர் சத்திய மூர்த்தி, துணை இயக்குனர் தயாளன், பாப்ஸ்கோ நிர்வாக இயக்குனர் முத்து கிருஷ்ணன் உட்பட அதிகாரி கள் பலர் பங்கேற்றனர்.

    • கடலும் ஆறும் கலக்கும் கழிமுக பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர்.
    • ஏனாமில் இன்று பொன்னாட வரதம் என்பவர் மீனவர் வலையில் 20 கிலோ எடையுள்ள பாண்டு கப்பா மீன் சிக்கியது.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலம் ஏனாம் பிராந்தியம் கோதாவரி ஆற்றுப்படுகையில் உள்ளது.

    இங்கு கடலும் ஆறும் கலக்கும் கழிமுக பகுதியில் மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர். இந்த பகுதியில் பாண்டுகப்பா என்ற அரிய வகை மீன் எப்போதாவது வலையில் சிக்கும். இந்த வகை மீனுக்கு ஆந்திர மாநில மக்களிடையே அதிக கிராக்கி உள்ளது.

    ஏனாமில் இன்று பொன்னாட வரதம் என்பவர் மீனவர் வலையில் 20 கிலோ எடையுள்ள பாண்டு கப்பா மீன் சிக்கியது. இந்த மீன் ஏலம் மூலம் விற்பனை செய்யப்பட்டது.

    இதனை ரத்தினம் என்பவர் ரூ.12 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்து வாங்கி சென்றார். 

    ×