என் மலர்
நீங்கள் தேடியது "Diwali special"
- அதிகாரிகளுடன் அமைச்சர் சாய்.சரவணன்குமார் ஆலோசனை நடத்தினார்.
- பாப்ஸ்கோ நிர்வாக இயக்குனர் முத்து கிருஷ்ணன் உட்பட அதிகாரி கள் பலர் பங்கேற்றனர்.
புதுச்சேரி:
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்பு அங்காடி நடத்துவது குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் சாய்.சரவணன்குமார் ஆலோசனை நடத்தினார்.
குடிமைப்பொருள் வழங்கல்துறை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் துறை செயலாளர் பங்கஜ்கு மார், இயக்குனர் சத்திய மூர்த்தி, துணை இயக்குனர் தயாளன், பாப்ஸ்கோ நிர்வாக இயக்குனர் முத்து கிருஷ்ணன் உட்பட அதிகாரி கள் பலர் பங்கேற்றனர்.
- புதுவையில் பாப்ஸ்கோ சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி கடந்த 16-ந் தேதி முதல் தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்திலும், 17-ந் தேதி முதல் திருக்கனூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இயக்கி வருகிறது.
- கடந்த 3 நாட்களாக அங்காடி திறந்த சில மணி நேரங்களிலேயே தொகுப்பு பைகள் விற்று தீர்ந்து விடுகிறது.
புதுச்சேரி:
புதுவையில் பாப்ஸ்கோ சார்பில் தீபாவளி சிறப்பு அங்காடி கடந்த 16-ந் தேதி முதல் தட்டாஞ்சாவடி ஒழுங்கு முறை விற்பனை கூட வளாகத்திலும், 17-ந் தேதி முதல் திருக்கனூர், காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் இயக்கி வருகிறது.
பாப்ஸ்கோ அங்காடியில் தீபாவளி பண்டிகைக்கு தேவையான சர்க்கரை, எண்ணெய், பருப்பு வகைகள் உள்ளிட்ட தொகுப்பு பை ரூ.800-க்கு மானிய விலையில் வழங்கப்படுகிறது. இது புதுவை மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த தொகுப்பு பையை வாங்க புதுவை நகரம் மற்றும் கிராமங்களை சேர்ந்த மக்கள் தீபாவளி அங்காடிக்கு வந்து குவிகிறார்கள். காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை அங்காடி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும் கடந்த 3 நாட்களாக அங்காடி திறந்த சில மணி நேரங்களிலேயே தொகுப்பு பைகள் விற்று தீர்ந்து விடுகிறது.
இதனால் மக்கள் ஏமாந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், 11 மணி ஆகியும் தீபாவளி அங்காடி திறக்கப்படவில்லை. ஆனால் பொருட்களை வாங்க மக்கள் 9 மணிக்கு முன்பாகவே வந்து நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
தொகுப்பு பைகளை வாங்கி கொடுத்து விட்டு வேலைக்கு செல்லலாம் என காத்திருந்த மக்களுக்கு ஏமாற்றமே கிடைத்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்த மக்கள் எரிச்சல் அடைந்தனர்.ஒரு சிலர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
முன்தினம் தொகுப்பு பைகள் விற்று தீர்ந்து விட்டதால் புதிய தொகுப்பு பைகள் வந்த பின்பே அங்காடி திறக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனால், பொருட்களை வாங்க தயாராக இருந்தாலும், அதிகாரிகள் அவற்றை சரியாக அளிக்காமல் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.






