என் மலர்
புதுச்சேரி

தூய்மை பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.
துப்புரவு பணியாளர்கள் கணக்கெடுப்பு பணி
- கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறுகிறது.
- பராமரிப்பு பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் கழிவுநீர் குழாய் பராமரிப்பு பணியில் ஈடுபடுபவர்கள் குறித்து விவரங்களை சேகரிப்பா ர்கள்.
புதுச்சேரி:
கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி அளவிலான தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின்படி பல்வேறு நிலைகளில் ஈடுபடும் முக்கிய தூய்மை பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்க நிகழ்ச்சி நடந்தது. நகர் மன்ற தலைவர் ஜெயமூர்த்தி தலைமையில் நடந்த நிகழ்ச்சிக்கு ஆணையர் புகேந்திரி முன்னிலை வகித்தார்.
இந்த கணக்கெடுப்பில், கழிவுநீர் வண்டி மூலம் கழிவுநீர் நச்சுத் தொட்டிகளை எந்திரங்கள் கொண்டு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுபவர்கள், பொது, சமுதாய, நிறுவன கழிப்பறை களை சுத்தம் செய்பவர்கள், மழைநீர் வடிகால் சுத்தம் செய்பவர்கள் கழிவுநீர், மலக்கசடு சுத்திகரிப்பு நிலைய பராமரிப்பு பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் கழிவுநீர் குழாய் பராமரிப்பு பணியில் ஈடுபடுபவர்கள் குறித்து விவரங்களை சேகரிப்பா ர்கள். இந்த கணக்கெடுக்கும் பணியானது தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம் (என்.யு.எல்.எம்) மூலம் மேற்கொள்ளப்படுகிறது.
நிகழ்ச்சியில் துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிர மூர்த்தி, பொது சுகதார பிரிவு எழுத்தர் அண்ணா மலை, தூய்மை பாரத மேற்பார்வையாளர் ஜாகிதா பர்வின், தூய்மை பணி மேற்பார்வையாளர்கள் பழனி, சங்கர் மற்றும் களப்பணி உதவியாளர் விஜய்குமார் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.






