என் மலர்
புதுச்சேரி
- மாணவர்கள் 39 பேர் நீட் தேர்வு மூலம் முதல் கலந்தாய்வில் மருத்துவக் கல்லூரியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
- கடந்த 2018-ம் ஆண்டு 38 பேரும் 2019-ம் ஆண்டு 44, 2020- ம் ஆண்டு 37, 2021-ம் ஆண்டு 30, 2022-ம் ஆண்டு 36 மாணவர்களும் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
புதுவை பெத்தி செமினார் பள்ளி மானாவர்கள் கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து அதிகப்படியான இடங்களை நீட் தேர்வில் வென்று முதல் இடத்தில் இருந்து வருகிறார்கள்.
2022-23ல் கல்வி ஆண்டில் அரசு தேர்வு எழுதிய 204 மாணவர்களில் பெத்தி செமினார் பள்ளி மாணவர்கள் 39 பேர் நீட் தேர்வு மூலம் முதல் கலந்தாய்வில் மருத்துவக் கல்லூரியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இது ஏறத்தாழ 20 சதவீதம் ஆகும். நீட் தேர்வு மூலம் 20 சதவீதம் மருத்துவ இடங்களை வென்ற ஒரே பள்ளி பெத்தி செமினார் மட்டுமே ஆகும். இந்த ஆண்டு மருத்துவ படிப்பிற்கும் தேர்வு செய்யப்பட்ட பெத்தி செமினார் மாணவர்களில், ஜிப்மர் மருத்துவக் கல்லூரி-7 இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி-10, பிம்ஸ் மருத்துவக் கல்லூரி-5, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி-7, மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி-2, வேலூர் சிஎம்சி மருத்து வக்கல்லூரி-1, ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி-01, ராஜீவ்காந்தி ஆயுர்வேத மருத்து வக்கல்லூரி-1, ராஜீவ்காந்தி கால்நடை மருத்துவக் சுல்லூரி-1, மகாத்மா-1, காந்தி பல் மருத்துவக் கல்லூரி-2, வெங்கடேஸ்வரா பல் மருத்துவக் கல்லூரி-2, மஹே பல் மருத்துவக் கல்லூரி-2, கடந்த ஆண்டுகளில் மருத்துவ படிப்பிற்கு தேர்வு பெற்ற
பெத்தி செமினார் மாணவர்கள் கடந்த 2018-ம் ஆண்டு 38 பேரும் 2019-ம் ஆண்டு 44, 2020- ம் ஆண்டு 37, 2021-ம் ஆண்டு 30, 2022-ம் ஆண்டு 36 மாணவர்களும் மருத்துவ படிப்புக்கு தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி:
மத்திய பா.ஜனதா அரசின் தேசிய கல்வி கொள்கையை கண்டித்து சுதேசி மில் அருகே மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் பாரதிதாசன் மகளிர் அரசு கல்லூரி மாணவிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இளங்கலை பாடப்பிரிவுகளில் தமிழக மொழி பாடம் 4 பருவங்களாக உள்ளதை வெறும் 2 பருவங்களாக குறைக்கக்கூடாது.
பருவத்திற்கு 24 மணி நேரமாக இருந்த தமிழ்மொழி பாடத்தை 8 மணி நேரமாக குறைக்கக்கூடாது. தமிழ் இலக்கிய இலக்கணங்களை ஆழமாக பயிலும் முதுகலை பட்டப்படிப்பை கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
மாணவர்கள் போராட்டத்தை வாழ்த்தி புதுவை சட்டமன்ற எதிர்கட்சி த்தலைவர் சிவா பேசியதாவது:
தமிழ் மட்டும் படித்துவிட்டு இந்தியை கற்காததால்தான் நாம் கஷ்டப்படுவதாக உலகத்தை ஏமாற்றும் ஒன்றிய பாஜக அரசுக்கு இப்போராட்டம் சவுக்கடி கொடுத்திருக்கிறது. உலக நாடுகள் மட்டுமின்றி பாராளு மன்றத்திலும் தமிழர்களின் பெரு மையை பேசினால்தான் பெருமை கிடைக்கிறது என பிரதமர் மோடிக்கு தெரிகிறது.
மொழி உணர்வோடு போராடும் மாணவிகளுக்கு நாங்கள் உறுதுணையாக இருப்போம். சட்டமன்றத்திலும் எங்கள் குரல் ஒலிக்கும். நம் மொழிக்கு, இனத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மத்திய ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். புதிய கல்விக்கொள்கை இந்தியா முழுவதும் கொண்டு வந்தாலும், அந்தந்த மாநில அரசுதான் ஒரு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும்.
அந்த வகையில் தமிழக அரசு புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்த மாட்டோம் என்று உறுதியாக உள்ளது. முதல அமைச்சர் ரங்கசாமிக்கு என்று ஒரு கொள்கை இருக்கிறதா? இங்கு நடப்பது ரங்கசாமி ஆட்சியா? பா.ஜனதா ஆட்சியா? என்பதை தெரிவிக்க வேண்டும். பா.ஜனதாவின் சித்தாந்தத்தை வளர்க்க இங்குள்ள மக்கள் வாக்களிக்கவில்லை.
ரங்கசாமியை நம்பித்தான் வாக்களித்தார்கள். மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து முதல்வர் சுயமாக முடிவெடுத்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- விசாரணை நடத்த முயன்ற போது அவர்கள் வீச்சரிவாள் மற்றும் கத்தியை மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டனர்.
- தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை ஒதியஞ்சாலை குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு சாதாரண உடையில் வாணரப்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்குள்ள நாகமுத்து மாரியம்மன் கோவில் அருகே உள்ள பொது கழிவறையில் 3 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருந்தனர்.
இதனால் சந்தேகடைந்த போலீசார் அந்த கும்பலை பிடித்து விசாரணை நடத்த முயன்ற போது அவர்கள் வீச்சரிவாள் மற்றும் கத்தியை மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டனர்.
இதையடுத்து அவர்களிட மிருந்து வீச்சரிவாள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வாணரப்பேட்டை பிரான்சுவா தோட்டத்தை சேர்ந்த அகஸ்டியன் ராஜ் (24), லூர்துஸ்டீபன் ராஜ் (30) வாணரப்பேட்டை நாகமுத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹேமச்சந்திரன் (25) என்பதும் இவர்கள் குற்றம் செய்யும் நோக்கில் வீச்சரிவாள் மற்றும் கத்தியுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
- நாளை நடக்கிறது
- மாலை மற்றும் இரவு நேரங்களில் பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக மின்சார விளக்குகள் அமைத்து தரவேண்டும்.
புதுச்சேரி:
புதுவை விளையாட்டு வீரர்கள் நலச்சங்க தலைவர் கராத்தே வளவன் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியி ருப்பதாவது:-
உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் பொது மக்களுக்கும், விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கும் சுகாதாரமான நவீன கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து தர வேண்டும். மாலை மற்றும் இரவு நேரங்களில் பயிற்சி மேற்கொள்வதற்கு வசதியாக மின்சார விளக்குகள் அமைத்து தரவேண்டும்.
இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம் மற்றும் ராஜீவ் காந்தி உள் விளையாடரங்கத்தின் பாதுகாப்பு உறுதி செய்திட தகுதியான காவலாளிகளை நியமிக்க வலியுறுத்தியும் ரூ. 7 கோடி ரூபாய் செலவு செய்து சிந்தடிக் ஓடு பாதை அமைத்து 2 ஆண்டு களாகியும் விளையாட்டு வீரர்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்காமல் பூட்டி வைத்து ள்ளனர்.
ராஜீவ் காந்தி உள்விளை யாட்டு அரங்கத்தில் ஏசி வசதி செய்து 4 ஆண்டுகளுக்கு மேலாகியும் தகுந்த மின்சார வசதி புதுவை அரசு செய்து கொடுக்க வேண்டும்.
விளையாட்டு போட்டி கள் நடத்துவதற்கு அதிக கட்டணம் வசூலிப்பதை குறைக்க வேண்டும். கோவாவில் நடைபெற வுள்ள தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு மாநிலத்தின் சார்பில் பங்கேற்க உள்ள விளையாட்டு வீரர்கள் வீராங்கனை களுக்கு தேவை ப்படும் அனைத்து செலவையும் முழுவது மாக புதுவை அரசை ஏற்க வேண்டும்.
ராஜீவ் காந்தி விளை யாட்டு அரங்க த்திலும் இந்திரா காந்தி விளை யாட்டு அரங்கத்திலும் முழுவதுமாக சிசிடிவி கேமரா அமைக்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என விளையாட்டு வீரர்கள நலச்சங்கம் சார்பில் பலமுறை வலியுறுத்தப்பட்டது. மேலும் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அரசு இதுவரை எதனையும் நிறைவேற்ற வில்லை.
இது தொடர்பாக விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 4 மணிக்கு உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு அரங்கம் விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பா ட்டம் நடத்தப்படுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து விளையாட்டு வீரர்களும் பங்கேற்கிறார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
- குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
- உதவி பொறி யாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் ரங்கமன்னார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.
மங்கலம் தொகுதியில் வில்லியனூர் பஞ்சாயத்து சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
என்ன பணிகள் தொடங்கப்பட உள்ளது? கிடப்பில் உள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தார். மங்கலம் தொகுதியில் சாலைகளை மேம்படுத்தி, கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவி பொறி யாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் ரங்கமன்னார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு பேட்டி
- புதுவை அரசில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அமைச்சரவை மாற்றம், நீக்கம் என தெரிவித்தனர். எந்த மாற்றமும் நடக்கவில்லை.
புதுச்சேரி:
என்ஆர்.காங்-பா.ஜனதா ஆட்சிக்கு இல்லை முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கே ஆதரவு என்று சுயேட்சை எம்.எல்.ஏ. நேரு பேட்டியளித்துள்ளார்.
உருளை யன்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஒரு வாரமாக புதுவை அரசில் என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. அமைச்சரவை மாற்றம், நீக்கம் என தெரிவித்தனர். எந்த மாற்றமும் நடக்கவில்லை.
மத்திய அரசால் அனுப்பப்பட்ட கவர்னரும், தலைமை செயலா ளரும்தான் புதுவையை ஆட்சி செய்கின்றனர். மக்களால் தேர்ந்தெடு க்கப்பட்ட அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை. நிதித்துறை செயலர் முதல்-அமைச்சருக்கு தெரியாமல் மாற்றப்பட்டுள்ளார்.
என்.ஆர்.காங்கி ரஸ், பா.ஜனதா அரசுக்கு நான் ஆதரவு அளிக்கவில்லை. ரங்கசாமிக்கே ஆதரவு, அவருக்கு மட்டுமே ஆதரவு. புதுவையில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்ற பேச்சு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. முதல்-அமைச்சர் இதுதொடர்பாக வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
- அடையாள அட்டையை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி உப்பளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
புதுச்சேரி:
புதுவை அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை மூலம் உப்பளம் தொகுதியை சேர்ந்த முதியோர், விதவை, முதிர்கன்னி, திருநங்கை போன்றவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகைக்கான அடையாள அட்டையை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி உப்பளம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் கென்னடி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவித்தொகைக்கான அடையாள அட்டையை வழங்கினார்.
இந்நிகழ்ச்சி யின் போது தொகுதி தி.மு.க. நிர்வாகிகள் தங்கவேல், சக்திவேல், அரிகிருஷ்ணன், ஆரோக்கியராஜ், விநாயக மூர்த்தி, செல்வம், சேட்டு, நிசார், ரகுமான், பஸ்கல், மற்றும் கடசியின் முக்கிய பிரமுகர்கள் உடனிருந்தனர்.
- தகவல் மையத்தில் சிறுநீரகவியல் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
- சிறுநீரக செயலிழப்பு போன்ற அறிகுறிகளால் அவதி அடைந்தோர் இந்த முகாமில் பங்கேற்று மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற்று பயனடைந்தனர்.
புதுச்சேரி:
புதுவை எல்லைப்பிள்ளை சாவடி என்.டி.மஹால் எதிரே அப்போலோ மருத்து வமனை தகவல் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த தகவல் மையத்தில் சிறுநீரகவியல் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்திருந்தது.
இதில் சிறுநீரக சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று மருத்துவரான டாக்டர் சந்திர சேகர் மற்றும் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுதர்ஷன் ஆகியோர் கலந்து கொண்டு சிறுநீரக நோயால் பாதிப்பட்ட வர்களுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்குகினார்கள்.
மேலும் சிறுநீர்க் கசிவு, அளவிற்கு அதிகமான யூரியா மற்றும் கிரியாட்டினின், சிறுநீர ககற்கள், சிறுநீர்ப்பை கற்கள், சிறுநீரக செயலிழப்பு போன்ற அறிகுறிகளால் அவதி அடைந்தோர் இந்த முகாமில் பங்கேற்று மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெற்று பயனடைந்தனர்.
- சிறுதானிய ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் சிறுதானிய உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.
- மருத்துவப் பயன்கள் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் சிறந்த விளக்கங்களை எடுத்துக் கூறினர்.
புதுச்சேரி:
மதகடிப்பட்டில் உள்ள மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் எஸ்.எம்.வி. பள்ளியில் தேசிய சிறுதானிய ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் சிறுதானிய உணவுத் திருவிழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சியில் தக்ஷக்ஷிலா பல்கலைக்கழகத்தின் வேந்தரும் மணக்குள விநாயகர் கல்வி அறக்கட்டளையின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனருமான தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியின் இயக்குனர் மற்றும் முதல்வருமான வெங்கடாஜலபதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் எஸ். எம். வி பள்ளியின் முதல்வர் அனிதா சாந்தகுமார் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்கள் சிறுதானிய உணவு வகைகளை பார்வையிட்டு மாணவர்களிடம் சிறுதானிய உணவுகளில் உள்ள சத்துக்கள் மற்றும் மருத்துவப் பயன்கள் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கு மாணவர்கள் சிறந்த விளக்கங்களை எடுத்துக் கூறினர். அதைக் கேட்டு மாணவர்களை வெகுவாகப் பாராடடினர்.
- பல் மருத்துவ படிப்புகளுக்கு அக்டோபர் 15-ந் தேதியுடன் சேர்க்கையை முடிக்க வேண்டும்.
- புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டு முதல்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என மருத்துவ கலந்தாய்வு கமிட்டி உத்தரவிட்டது. புதுவையில் 3 கட்ட கலந்தாய்வுதான் நடந்துள்ளது.
பல் மருத்துவ படிப்புகளுக்கு அக்டோபர் 15-ந் தேதியுடன் சேர்க்கையை முடிக்க வேண்டும். இந்த உத்தரவுக்கான காலக்கெடுவும் முடிந்துள்ளது. இறுதி காலக்கெடுவுக்கு பின்னரும் சென்டாக் நிர்வாகம் மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்த்து ஆணை வழங்கி வருகிறது.
இந்த மாணவர் சேர்க்கை ஆணை சட்டப்படி செல்லுமா? என பெற்றோர், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதால் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தள்ளிப்போனது.
இதை காரணம் காட்டி தலைமை செயலர் ராஜீவ் வர்மா, சுகாதாரத்துறை செயலர் முத்தம்மா ஆகியோர் தனித்தனியே மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பினர். ஆனால் இந்த 2 கடிதங்களுக்கும் மத்திய அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.

இந்த நிலையில் புதுவையில் மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி கேட்டு முதலமைச்சர் ரங்கசாமி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், புதுவை அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு இந்த ஆண்டு முதல்முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அரசு அனுமதி கிடைப்பது தள்ளிப்போனதால் புதுவையில் மருத்துவ படிப்புகளுக்கு கலந்தாய்வு தள்ளிப்போனது.
எனவே புதுவையில் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு அனுமதி அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
- பணம், காணிக்கை போன்றவை, 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம்.
- 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சிவிழா நடைபெற உள்ளது.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலகபுகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள் உண்டியலில் செலுத்தும், பணம், காணிக்கை போன்றவை, 3 மாதத்திற்கு ஒரு முறை எண்ணப்படுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற டிசம்பர் 20-ந் தேதி மாலை 5.20 மணிக்கு, 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் சனிபெயர்ச்சிவிழா நடைபெற உள்ளது. அதுசமயம், சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பிரவேசிக்க உள்ளார். கடைசியாக 2014, 2017, 2020 என தொடர்ச்சியாக 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெற்றது.
இந்த ஆண்டும், தொடர்ச்சியாக 4-வது முறையாக, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. சனிபெயர்ச்சி விழாவிற்கு முன்னதாக உண்டியலை எண்ண, மாவட்ட கலெக்டரும், கோவில் தனி அதிகாரியுமான குலோத்துங்கன் உத்தரவின் பேரில், கோவில் நிர்வாகம் முடிவு செய்து, திருநள்ளாறு தர்ப்பாராண்யேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான அனைத்து கோவில்களின் உண்டியல் எண்ணும் பணி தொடங்கியது. இதில் நூற்றுக்கு மேற்பட்ட கோவில் ஊழியர்கள், வங்கி ஊழியர்கள் ஈடுபட்டனர். உண்டியல் எண்ணும் பணியை, கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரனை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் ஆய்வு செய்து வரு கின்றனர்.
- வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள நிகழ்வு தற்போது புதுவையிலும் 10 ஆண்டுகளாக நடக்கிறது.
- 150 கிலோ அளவிலான பழ வகைகள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் பயன்படுத்தப்பட்டன.
புதுச்சேரி:
புதுவை நட்சத்திர ஓட்டல்களில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி கேக் தயாரிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டிற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் வழங்கப்படும்.
இந்த ஆண்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய முறையில் கேக் தயாரிக்கும் பணி நட்சத்திர ஓட்டல்களில் தொடங்கியது. பழ வகைகளை மதுபானங்களில் ஊற்றி ஊறல் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
150 கிலோ அளவிலான பழ வகைகள், பாதாம், முந்திரி, பிஸ்தா போன்ற பருப்பு வகைகள் இதற்கு பயன்படுத்தப்பட்டன. இதனுடன் 25 லிட்டர் மதுபானங்களும் கலந்து ஊற வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சுற்றுலாப் பயணிகளும் ஆர்வடன் பங்கேற்றனர்.
வெளிநாடுகளில் பிரபலமாக உள்ள இந்த நிகழ்வு தற்போது புதுவையிலும் 10 ஆண்டுகளாக நடக்கிறது.






