என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
வீச்சரிவாளுடன் பதுங்கி இருந்த கும்பல் கைது
- விசாரணை நடத்த முயன்ற போது அவர்கள் வீச்சரிவாள் மற்றும் கத்தியை மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டனர்.
- தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை ஒதியஞ்சாலை குற்றப்பிரிவு போலீசார் நேற்று இரவு சாதாரண உடையில் வாணரப்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்குள்ள நாகமுத்து மாரியம்மன் கோவில் அருகே உள்ள பொது கழிவறையில் 3 பேர் கொண்ட கும்பல் பதுங்கி இருந்தனர்.
இதனால் சந்தேகடைந்த போலீசார் அந்த கும்பலை பிடித்து விசாரணை நடத்த முயன்ற போது அவர்கள் வீச்சரிவாள் மற்றும் கத்தியை மறைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டனர்.
இதையடுத்து அவர்களிட மிருந்து வீச்சரிவாள் மற்றும் கத்தியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வாணரப்பேட்டை பிரான்சுவா தோட்டத்தை சேர்ந்த அகஸ்டியன் ராஜ் (24), லூர்துஸ்டீபன் ராஜ் (30) வாணரப்பேட்டை நாகமுத்து மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஹேமச்சந்திரன் (25) என்பதும் இவர்கள் குற்றம் செய்யும் நோக்கில் வீச்சரிவாள் மற்றும் கத்தியுடன் பதுங்கி இருந்தது தெரியவந்தது.
இதை தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.






