search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை
    X

    கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை நடத்திய காட்சி.

    கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனை

    • குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
    • உதவி பொறி யாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் ரங்கமன்னார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை சட்டசபையில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து அதிகாரிகளுடன் அமைச்சர் தேனீ.ஜெயக்குமார் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

    மங்கலம் தொகுதியில் வில்லியனூர் பஞ்சாயத்து சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.

    என்ன பணிகள் தொடங்கப்பட உள்ளது? கிடப்பில் உள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தார். மங்கலம் தொகுதியில் சாலைகளை மேம்படுத்தி, கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும். குடிநீர் பற்றாக்குறையை போக்க ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    கூட்டத்தில் வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன், உதவி பொறி யாளர் திருநாவுக்கரசு, இளநிலை பொறியாளர் ரங்கமன்னார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×